1 நாளாகமம் 25 : 1 (RCTA)
அப்போது தாவீதும் படைத்தலைவர்களும் ஆசாப், ஏமான், இதித்தூன் ஆகியோரின் மக்களுள் சிலரைத் திருப்பணிக்கென்று பிரித்தெடுத்தனர். அவர்கள் சுரமண்டலங்களையும் தம்புருகளையும் கைத்தாளங்களையும் ஒலித்து இறைவாக்குரைக்க நியமிக்கப்பட்டனர். பணி ஆற்றியோருடையவும் அவர் புரிந்த பணியினுடையவும் விபரம் வருமாறு:
1 நாளாகமம் 25 : 2 (RCTA)
ஆசாப்பின் மக்களில் சக்கூர், யோசேப், நத்தானியா, அசரேலா ஆகியோர். இவர்கள் ஆசாப்பின் அதிகாரத்திற்குட்பட்டு, அரசர் கட்டளைப்படி நின்று கொண்டு இறைவாக்குரைப்பார்.
1 நாளாகமம் 25 : 3 (RCTA)
இதித்தூன் குடும்பத்திலிருந்து அவன் மக்களான கொதோலியாஸ், சோரி, ஏசேயியாஸ், அசாபியாஸ், மத்தாத்தியாஸ் ஆகிய அறுவர்; தங்கள் தந்தை இதித்தூனின் அதிகாரத்திற்குட்பட்டு சுரமண்டலம் இசைத்து இறைவாக்குரைத்து ஆண்டவர் மகிமையை ஓதி வந்தனர்.
1 நாளாகமம் 25 : 4 (RCTA)
ஏமான் குடும்பத்திலிருந்து அவன் மக்களான பொக்சியாவு, மத்தானியாவு, ஓசியேல், சுபுவேல், எரிமோத், அனானியாஸ், அனானி, ஏலியத்தா, கெதெல்தி, ரொமேம்தியேசார், எஸ்பகாசா, மெல்லோத்தி, ஒதீர், மகசியோத் ஆகியோர்.
1 நாளாகமம் 25 : 5 (RCTA)
இவர்கள் அனைவரும் அரசரின் திருக்காட்சியாளரான ஏமானின் மக்களாவர். ஏமானை உயர்த்துவதாகக் கடவுள் கொடுத்திருந்த வாக்கின்படியே அவர் அவனுக்குப் பதினான்கு புதல்வர்களையும் மூன்று புதல்வியரையுங் கொடுத்திருந்தார்.
1 நாளாகமம் 25 : 6 (RCTA)
ஆசாப், இதித்தூன், ஏமான் ஆகியோரின் புதல்வர்களான இவர்கள் எல்லாரும் அரசரின் கட்டளைப்படி தத்தம் தந்தையின் அதிகாரத்திற்குட்பட்டு ஆண்டவரின் ஆலயத்திலே தாளம், தம்புரு, சுரமண்டலம் ஆகிய இசைக்கருவிகளை வாசிக்கவும், ஆலயத்திலே திருப்பணி செய்யவும் நியமிக்கப்பட்டார்கள்.
1 நாளாகமம் 25 : 7 (RCTA)
ஆண்டவரின் பாடல்களைக் கற்றுக் கொடுக்கும் ஆசிரியர்களான அவர்களும் அவர்களின் சகோதரர்களும் மொத்தம் இருநூற்றெண்பத்தெட்டுப் பேர்.
1 நாளாகமம் 25 : 8 (RCTA)
பெரியவனும் சிறியவனும், ஆசானும் மாணாக்கனும் சரிசமானமாய், தங்கள் முறைவரிசைக்காகச் சீட்டுப் போட்டனர்.
1 நாளாகமம் 25 : 9 (RCTA)
முதல் சீட்டு ஆசாபின் குடும்பத்தைச் சேர்ந்த யோசேப் என்பவனுக்கு விழுந்தது. இரண்டாவது சீட்டு கொதோலியாசும் அவனுடைய மக்களும் சகோதரர்களுமாகிய பன்னிருவருக்கும் விழுந்தது.
1 நாளாகமம் 25 : 10 (RCTA)
மூன்றாவது சீட்டு சக்கூரும் அவனுடைய மக்களும் சகோதரர்களுமாகிய பன்னிருவருக்கும் விழுந்தது.
1 நாளாகமம் 25 : 11 (RCTA)
நான்காவது சீட்டு இசாரியும் அவனுடைய மக்களும் சகோதரருமாகிய பன்னிருவருக்கும் விழுந்தது.
1 நாளாகமம் 25 : 12 (RCTA)
ஐந்தாவது சீட்டு நத்தானியாசும் அவனுடைய மக்களும் சகோதரருமாகிய பன்னிருவருக்கும் விழுந்தது.
1 நாளாகமம் 25 : 13 (RCTA)
ஆறாவது சீட்டு பொக்சியாவும் அவனுடைய மக்களும் சகோதரருமாகிய பன்னிருவருக்கும் விழுந்தது.
1 நாளாகமம் 25 : 14 (RCTA)
ஏழாவது சீட்டு இஸ்ரேலாவும் அவனுடைய மக்களும் சகோதரருமாகிய பன்னிருவருக்கும் விழுந்தது.
1 நாளாகமம் 25 : 15 (RCTA)
எட்டாவது சீட்டு எசாயியாவும் அவன் மக்களும் சகோதரருமாகிய பன்னிருவருக்கும் விழுந்தது.
1 நாளாகமம் 25 : 16 (RCTA)
ஒன்பதாவது சீட்டு மத்தானியாசும், அவன் மக்களும் சகோதரருமாகிய பன்னிருவருக்கும் விழுந்தது.
1 நாளாகமம் 25 : 17 (RCTA)
பத்தாவது சீட்டு செமேயியாசும் அவன் மக்களும் சகோதரருமாகிய பன்னிருவருக்கும் விழுந்தது.
1 நாளாகமம் 25 : 18 (RCTA)
பதினோராவது சீட்டு அசரேலும் அவன் மக்களும் சகோதரருமாகிய பன்னிருவருக்கும் விழுந்தது.
1 நாளாகமம் 25 : 19 (RCTA)
பன்னிரண்டாவது சீட்டு அசாபியாசும் அவன் மக்களும் சகோதரருமாகிய பன்னிருவருக்கும் விழுந்தது.
1 நாளாகமம் 25 : 20 (RCTA)
பதின்மூன்றாவது சீட்டு சுபுவேலும் அவன் மக்களும் சகோதரருமாகிய பன்னிருவருக்கும் விழுந்தது.
1 நாளாகமம் 25 : 21 (RCTA)
பதினான்காவது சீட்டு மத்தாத்தியாசும் அவன் மக்களும் சகோதரருமாகிய பன்னிருவருக்கும் விழுந்தது.
1 நாளாகமம் 25 : 22 (RCTA)
பதினைந்தாவது சீட்டு எரிமோத்தும் அவன் மக்களும் சகோதரருமாகிய பன்னிருவருக்கும் விழுந்தது.
1 நாளாகமம் 25 : 23 (RCTA)
பதினாறாவது சீட்டு அனானியாசும் அவன் மக்களும் சகோதரருமாகிய பன்னிருவருக்கும் விழுந்தது.
1 நாளாகமம் 25 : 24 (RCTA)
பதினேழாவது சீட்டு எஸ்பக்காசாவும் அவன் மக்களும் சகோதரருமாகிய பன்னிருவருக்கும் விழுந்தது.
1 நாளாகமம் 25 : 25 (RCTA)
பதினெட்டாவது சீட்டு அனானியும் அவனுடைய மக்களும் சகோதரருமாகிய பன்னிருவருக்கும் விழுந்தது.
1 நாளாகமம் 25 : 26 (RCTA)
பத்தொன்பதாவது சீட்டு மெல்லோத்தியும் அவனுடைய மக்களும் சகோதரருமாகிய பன்னிருவருக்கும் விழுந்தது.
1 நாளாகமம் 25 : 27 (RCTA)
இருபதாவது சீட்டு எலியாதாவும் அவன் மக்களும் சகோதரருமாகிய பன்னிருவருக்கும் விழுந்தது.
1 நாளாகமம் 25 : 28 (RCTA)
இருபத்தோராவது சீட்டு ஒத்தீரும் அவனுடைய மக்களும் சகோதரருமாகிய பன்னிருவருக்கும் விழுந்தது.
1 நாளாகமம் 25 : 29 (RCTA)
இருபத்திரண்டாவது சீட்டு கெதெல்தியும் அவன் மக்களும் சகோதரருமாகிய பன்னிருவருக்கும் விழுந்தது.
1 நாளாகமம் 25 : 30 (RCTA)
இருபத்து மூன்றாவது சீட்டு மகசியோத்தும் அவனுடைய மக்களும் சகோதரருமாகிய பன்னிருவருக்கும் விழுந்தது.
1 நாளாகமம் 25 : 31 (RCTA)
இருபத்து நான்காவது சீட்டு ரொமேந்தியேசேரும் அவனுடைய மக்களும் சகோதரருமாகிய பன்னிருவருக்கும் விழுந்தது.

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31