1 நாளாகமம் 24 : 1 (RCTA)
ஆரோன் புதல்வரின் பிரிவுகளாவன: ஆரோனின் புதல்வர், நதாப், அபியு, எலியெசார், ஈத்தமார், ஆகியோர்.
1 நாளாகமம் 24 : 2 (RCTA)
நாதாபும் அபியுவும் தங்கள் தந்தைக்கு முன்னரே பிள்ளைப் பேறின்றி இறந்து போயினர். எலியெசார், ஈத்தமார் ஆகியோர் குருக்களாகப் பணி புரிந்தனர்.
1 நாளாகமம் 24 : 3 (RCTA)
தாவீது, எலியெசாரின் மக்களில் ஒருவனான சாதோக்கினுடையவும், ஈத்தமாரின் மக்களில் ஒருவனான அக்கிமெலேக்கினுடையவும் உதவியால், அவர்களைப் பிரிந்து அவர்கள் செய்ய வேண்டிய பணிக்குத்தக அவர்களை வரிசைப்படி அமைத்தார்.
1 நாளாகமம் 24 : 4 (RCTA)
ஆனால் ஈத்தமாரின் மக்களை விட எலியெசாரின் மக்களுக்குள் பலர் தலைவர்களாய் இருந்தனர். எலியெசாரின் புதல்வரில் பதினாறு பேர் தங்கள் குடும்பத் தலைவர்களாகவும், ஈத்தமாரின் புதல்வரில் எட்டுப் பேர் குடும்பத் தலைவர்களாகவும் நியமிக்கப்பட்டனர்.
1 நாளாகமம் 24 : 5 (RCTA)
எலியெசார், ஈத்தமார் ஆகிய இருவரின் குடும்பங்களிலும் திருத்தலத்தைச் சார்ந்த தலைவர்களும் கடவுளின் திருப்பணியைச் சார்ந்த தலைவர்களும் இருந்தனர். எனவே இரு குடும்பங்களையும் சீட்டுப் போட்டே பிரித்தார்கள்.
1 நாளாகமம் 24 : 6 (RCTA)
நத்தானியேலின் மகனும் லேவியர்களின் எழுத்தனுமான செமேயியாஸ் என்பவன் அரசர், தலைவர்கள், சாதோக் என்னும் குரு, அபியதாரின் மகன் அக்கிமெலேக், குருக்கள், லேவியர் குடும்பங்களின் தலைவர்கள் ஆகியோருக்கு முன்பாக, அவர்களைப் பதிவு செய்து கொண்டான். எலியெசாரின் குடும்பத்திற்கும் ஈத்தமாரின் குடும்பத்திற்கும் சீட்டுப் போடப்பட்டது.
1 நாளாகமம் 24 : 7 (RCTA)
முதலாவது சீட்டு யோய்யரீப் என்பவனுக்கும், இரண்டாவது ஏதா என்பவனுக்கும், முன்றாவது ஆரீமுக்கும்,
1 நாளாகமம் 24 : 8 (RCTA)
நான்காவது சேயோரிமுக்கும்,
1 நாளாகமம் 24 : 9 (RCTA)
ஐந்தாவது மெல்கியாவுக்கும், ஆறாவது மைமானுக்கும்,
1 நாளாகமம் 24 : 10 (RCTA)
ஏழாவது அக்கோசுக்கும், எட்டாவது அபியாவுக்கும்,
1 நாளாகமம் 24 : 11 (RCTA)
ஒன்பதாவது ஏசுவாவுக்கும், பத்தாவது சேக்கேனியாவுக்கும்
1 நாளாகமம் 24 : 12 (RCTA)
பதினொராவது எலியாசிப்புக்கும், பன்னிரண்டாவது யாசிமுக்கும்,
1 நாளாகமம் 24 : 13 (RCTA)
பதின்மூன்றாவது ஒப்பாவுக்கும், பதினான்காவது இஸ்பாப்புக்கும்,
1 நாளாகமம் 24 : 14 (RCTA)
பதினைந்தாவது பெல்காவுக்கும், பதினாறாவது எம்மேருக்கும்,
1 நாளாகமம் 24 : 15 (RCTA)
பதினேழாவது ஏசீருக்கும், பதினெட்டாவது அப்சேசுக்கும், பத்தொன்பதாவது பெதேயியாவுக்கும்,
1 நாளாகமம் 24 : 16 (RCTA)
இருபதாவது எசேக்கியேலுக்கும்,
1 நாளாகமம் 24 : 17 (RCTA)
இருபத்தோராவது யாக்கீனுக்கும், இருபத்திரண்டாவது காமூலுக்கும்,
1 நாளாகமம் 24 : 18 (RCTA)
இருபத்து மூன்றாவது தலையோவுக்கும், இருபத்து நான்காவது மாசியோவுக்கும் விழுந்தது.
1 நாளாகமம் 24 : 19 (RCTA)
இஸ்ராயேலில் கடவுளாகிய ஆண்டவரால் அவர்கள் தந்தை ஆரோனுக்குக் கொடுக்கப்பட்டிருந்த கட்டளைப்படியே, ஆரோன் அவர்களுக்கென செயல்முறைகளை அமைத்தார். தங்கள் முறைப்படி அவர்கள் திருப்பணி செய்யும் பொருட்டு வகுக்கப்பட்ட பிரிவுகள் இவையே.
1 நாளாகமம் 24 : 20 (RCTA)
எஞ்சிய லேவியின் மக்களுக்குள், அம்ராமின் புதல்வர்களில் சுபாயேலும், சுபாயேலின் புதல்வர்களில் எசெதேயியாவும்,
1 நாளாகமம் 24 : 21 (RCTA)
ரொகோபியாவின் புதல்வர்களில் எசியாஸ் என்ற தலைவனும் இருந்தனர்.
1 நாளாகமம் 24 : 22 (RCTA)
இசாரியின் மகன் பெயர் சாலமோத். சாலமோத்தின் மகன் பெயர் யாகாத்.
1 நாளாகமம் 24 : 23 (RCTA)
இவனுடைய மூத்த மகன் பெயர் எரீயாப்; இரண்டாவது மகன் பெயர் அமாரியாஸ்; மூன்றாவது மகன் பெயர் யகாசியேஸ்; நான்காவது மகன் பெயர் ஏக்மான்.
1 நாளாகமம் 24 : 24 (RCTA)
ஓசியேலின் மகன் பெயர் மிக்கா; மிக்காவின் மகன் பெயர் சாமீர்.
1 நாளாகமம் 24 : 25 (RCTA)
மிக்காவின் சகோதரன் பெயர் ஏசியா; ஏசியாவின் மகன் பெயர் சக்கரிளாஸ்.
1 நாளாகமம் 24 : 26 (RCTA)
மெராரியின் புதல்வர் மொகோலி, மூசி ஆகியோர். ஒசியாவின் மகன் பெயர் பென்னோ.
1 நாளாகமம் 24 : 27 (RCTA)
மற்றும் ஒசியாவு, சோவாம், சக்கூர், எபீரி ஆகியோரும் மெராரியின் மக்களே.
1 நாளாகமம் 24 : 28 (RCTA)
மொகோலியின் மகன் பெயர் எலியெசார். இவனுக்கு மகப்பேறில்லை.
1 நாளாகமம் 24 : 29 (RCTA)
சீசுடைய மகன் பெயர் எராமேயல்.
1 நாளாகமம் 24 : 30 (RCTA)
மூசியுடைய புதல்வர்: மொகோலி, எதேர், எரிமோத் ஆகியோர். தங்கள் வம்ச வரிசைப்படி லேவியரின் புதல்வர்கள் இவர்களே.
1 நாளாகமம் 24 : 31 (RCTA)
இவர்களும் தங்கள் சகோதரராகிய ஆரோனின் புதல்வர் செய்தது போல, தாவீது அரசர், சாதோக், அக்கிமெலேக், குருக்கள், லேவியரின் குடும்பத் தலைவர்கள் ஆகியோரின் முன்னிலையில், பெரியோரும் சிறியோரும் சீட்டுப் போட்டுக் கொண்டனர். எல்லா வேலைகளும் சரிசமமாகப் பிரித்தளிக்கப்பட்டன.

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31