1 நாளாகமம் 23 : 1 (RCTA)
தாவீது வயது முதிர்ந்து கிழவரான போது தம் மகன் சாலமோனை இஸ்ராயேலுக்கு அரசனாக்கினார்.
1 நாளாகமம் 23 : 2 (RCTA)
இஸ்ராயேலின் எல்லாத் தலைவர்களையும் குருக்களையும் லேவியர்களையும் கூடி வரச்செய்தார்.
1 நாளாகமம் 23 : 3 (RCTA)
முப்பதும் அதற்கும் மேற்பட்ட வயதுள்ள லேவியர்களின் எண்ணிக்கை எடுக்கப்பட்டது. அவர்கள் முப்பெத்தெட்டாயிரம் பேர் எனத் தெரிய வந்தது.
1 நாளாகமம் 23 : 4 (RCTA)
அவர்களில் இருபத்து நாலாயிரம் பேர் ஆண்டவரின் ஆலயத் திருப்பணிக்காகத் தேர்ந்தெடுக்கப்பட்டனர். ஆறாயிரம் பேர் அதிகாரிகளும் நடுவர்களுமாய் நியமிக்கப்பட்டனர்.
1 நாளாகமம் 23 : 5 (RCTA)
நாலாயிரம் பேர் வாயிற் காவலராகவும், இன்னும் நாலாயிரம் பேர் தாவீது அரசர் செய்து வைத்திருந்த இசைக்கருவிகளை மீட்டி ஆண்டவரைப் போற்றவும் நியமிக்கப்பட்டனர்.
1 நாளாகமம் 23 : 6 (RCTA)
தாவீது அவர்களை லேவிய மக்களான கெர்சோன், காத், மெராரி என்னும் குலவரிசைகளின்படி பிரித்தார்.
1 நாளாகமம் 23 : 7 (RCTA)
கெர்சோனின் புதல்வருள் லேதானும் செமேயியும்,
1 நாளாகமம் 23 : 8 (RCTA)
லேதானின் புதல்வர்களுள் தலைவனான யகியேல், சேத்தான், யோவேல் ஆகிய மூவர்.
1 நாளாகமம் 23 : 9 (RCTA)
சலோமித், ஓசியேல், ஆரான் ஆகிய மூவரும் செமேயியின் புதல்வர். இவர்கள் லேத்தான் குடும்பங்களின் தலைவராய் இருந்தனர்.
1 நாளாகமம் 23 : 10 (RCTA)
செமேயியின் புதல்வர்: லெகேத், சீசா, யாவுஸ், பாரியா ஆகியோர்.
1 நாளாகமம் 23 : 11 (RCTA)
இவர்களுள் லெகேத் மூத்தவன்; சீசா இரண்டாம் புதல்வன். ஆனால் யாவுஸ், பாரியா என்பவர்களுக்குப் பல பிள்ளைகள் இல்லாததால் ஒரே குடும்பமாகவும், ஒரே பிரிவாகவும் அவர்கள் கணக்கிடப்பட்டனர்.
1 நாளாகமம் 23 : 12 (RCTA)
காத்தின் புதல்வர் அம்ராம், ஈசார், எப்ரோன், ஓசியேல் என்னும் நால்வர்.
1 நாளாகமம் 23 : 13 (RCTA)
அம்ராமின் மக்கள் ஆரோனும் மோயீசனுமாவர். ஆரோனும் அவருடைய புதல்வர்களும் திருவிடத்தில் திருப்பணி புரிவதற்கும், என்றென்றும் ஆண்டவர் திருமுன் தத்தம் பிரிவுப்படி தூபம் காட்டவும், அவரது திருப் பெயரை என்றென்றும் போற்றிப் புகழவும் ஒதுக்கி வைக்கப்பட்டனர்.
1 நாளாகமம் 23 : 14 (RCTA)
கடவுளின் மனிதரான மோயீசனின் புதல்வரும் லேவி குலத்தாரோடு சேர்த்தே கணக்கிடப்பட்டனர்.
1 நாளாகமம் 23 : 15 (RCTA)
மோயீசனுடைய புதல்வர் பெயர் கெர்சோம், எலியெசார் என்பனவாம்.
1 நாளாகமம் 23 : 16 (RCTA)
கெர்சோமின் மக்களில் மூத்தவன் பெயர் சுபுவேல்.
1 நாளாகமம் 23 : 17 (RCTA)
எலியெசாரின் மக்களில் மூத்தவன் பெயர் ரொகோபியா. எலியெசாருக்கு வேறு மக்கள் இல்லை. ரொகோபியாவிற்குப் பல புதல்வர்கள் இருந்தனர்.
1 நாளாகமம் 23 : 18 (RCTA)
இசாருடைய மக்களில் மூத்தவன் பெயர் சலோமித்.
1 நாளாகமம் 23 : 19 (RCTA)
எபிரோனின் மக்களில் எரீயா மூத்தவன். இரண்டாவது அமாரியாஸ், மூன்றாவது யகாசியேல், நான்காவது எக்மான்.
1 நாளாகமம் 23 : 20 (RCTA)
ஒசியேலின் புதல்வரில் மிக்கா மூத்தவன், அடுத்தவன் எசியா.
1 நாளாகமம் 23 : 21 (RCTA)
மெராரியின் புதல்வர்: மொகோலியும் மூசியும். மொகோலியின் புதல்வர் எலியெசாரும் சீசுமாம்.
1 நாளாகமம் 23 : 22 (RCTA)
எலியேசார் இறந்த போது அவனுக்குப் புதல்வியரேயன்றிப் புதல்வர் இல்லை. அவர்களின் சகோதரனாகிய சீசின் புதல்வர் அவர்களை மணந்து கொண்டனர்.
1 நாளாகமம் 23 : 23 (RCTA)
மூசியின் புதல்வர் மொகோலி, எதேர், எரிமோத் என்ற மூவர்.
1 நாளாகமம் 23 : 24 (RCTA)
தங்கள் உறவினர்களுக்கும் குடும்பங்களுக்கும் தலைவர்களும் லேவியின் புதல்வருமான இவர்கள் இருபதும் அதற்கும் மேற்பட்ட வயதுள்ளவர்களாயிருந்தனர்; தங்கள் பெயர் வரிசைப்படி பதிவு செய்யப்பட்டு, ஆண்டவரின் ஆலயத் திருப்பணியில் ஈடுபட்டிருந்தனர்.
1 நாளாகமம் 23 : 25 (RCTA)
ஏனெனில், "இஸ்ராயேலின் கடவுளாகிய ஆண்டவர் தம் மக்களுக்கு அமைதி அருளி, யெருசலேமில் என்றென்றும் குடியிருக்கின்றார்.
1 நாளாகமம் 23 : 26 (RCTA)
இனி லேவியர்கள் திருக் கூடாரத்தையும் அதன் பணிக்கடுத்த தட்டு முட்டுகளையும் சுமக்க வேண்டியதில்லை" என்று தாவீது சொன்னார்.
1 நாளாகமம் 23 : 27 (RCTA)
தாவீதின் இறுதிக் கட்டளையின்படி, லேவியருள் இருபதும் அதற்கும் மேற்பட்ட வயதினரே எண்ணப்பட்டனர்.
1 நாளாகமம் 23 : 28 (RCTA)
அவர்கள் ஆண்டவரின் ஆலயத் திருப்பணியில் ஆரோனின் புதல்வர்களுக்கு உதவி செய்ய நியமிக்கப் பெற்றார்கள்; மண்டபங்களையும் உள் அறைகளையும் கவனித்து வந்தார்கள்: புனித பணிமுட்டுகளைச் சுத்தம் செய்து வந்தார்கள்; இன்னும் ஆண்டவரின் வழிபாட்டுக்கடுத்த எல்லா வேலைகைளையும் செய்து வந்தார்கள்.
1 நாளாகமம் 23 : 29 (RCTA)
குருக்கள் காணிக்கை அப்பம், போசனப் பலிகளுக்கு வேண்டிய மிருதுவான மாவு, புளியாத அப்பம். சட்டிகளில் சுடப்பட்டது, பொரிக்கப்பட்டது ஆகிய அனைத்தையும் தயாரித்து வந்தார்கள்; அத்தோடு இவற்றின் அளவையும் நிறையையும் கவனித்து வந்தார்கள்.
1 நாளாகமம் 23 : 30 (RCTA)
லேவியர்களோ காலையிலும் மாலையிலும் ஆண்டவரைப் போற்றிப் புகழவேண்டும்.
1 நாளாகமம் 23 : 31 (RCTA)
அத்தோடு ஓய்வுநாள் திருநாட்களிலும், அமாவாசை நாட்களிலும், மற்றக் கொண்டாட்டங்களின் போதும், ஆண்டவருக்குத் தகனப்பலி ஒப்புக் கொடுக்கப்படும் போதும் குறிப்பிட்டவர்கள் தத்தம் பிரிவுப்படி ஆண்டவர் திருமுன் எப்பொழுதும் நின்று கொண்டிருக்க வேண்டும்.
1 நாளாகமம் 23 : 32 (RCTA)
இவ்வாறு அவர்கள் உடன்படிக்கைக் கூடாரத்தை அடுத்த ஒழுங்கு முறைகளையும், திருவிடத்தின் வழிபாட்டு முறைகளையும், கடைப்பிடித்து வந்தார்கள். மேலும் ஆண்டவரின் ஆலயத்திலே திருப்பணி புரிந்து வந்த தங்கள் சகோதரரான ஆரோனின் புதல்வருக்கும் அவர்களது திருப்பணியில் உதவி புரிந்து வந்தார்கள்.
❮
❯