1 நாளாகமம் 2 : 1 (RCTA)
இஸ்ராயேலின் புதல்வர்கள்: ரூபன், சிமெயோன், லேவி, யூதா, இசாக்கார், சபுலோன்,
1 நாளாகமம் 2 : 2 (RCTA)
தாண், யோசேப், பென்யமீன், நெப்தலி, காத், ஆசேர் என்பவர்களாம்.
1 நாளாகமம் 2 : 3 (RCTA)
யூதாவின் புதல்வர்: ஏர், ஓனான், சேலா ஆகிய மூவரும் சூயேயின் மகளாகிய கானானியப் பெண்ணிடம் அவருக்குப் பிறந்தனர். யூதாவின் மூத்த மகன் ஏர் ஆண்டவர் திருமுன் தீயவழியில் நடந்து வந்தார்; எனவே அவரைக் கொன்று போட்டார்.
1 நாளாகமம் 2 : 4 (RCTA)
தம் மருமகளாகிய தாமார் மூலம் யூதாவுக்கு பாரேஸ், ஜாரா என்பவர்கள் பிறந்தனர். ஆகவே யூதாவுக்கு மொத்தம் ஐந்து புதல்வர்.
1 நாளாகமம் 2 : 5 (RCTA)
பாரேசுக்கு எசுரோன், ஆமூல் என்ற இரு புதல்வர் பிறந்தனர்.
1 நாளாகமம் 2 : 6 (RCTA)
ஜாராவின் புதல்வர்: ஜம்ரி, எத்தான், ஏமான், கல்கால், தாரா என்ற ஐவர்.
1 நாளாகமம் 2 : 7 (RCTA)
கார்மியின் மகன் அக்கார் சாபத்துக்குரியவற்றைத் திருடிப் பாவம் புரிந்து இஸ்ராயேலில் குழப்பம் உண்டு பண்ணினார்.
1 நாளாகமம் 2 : 8 (RCTA)
எத்தானுடைய மகன் பெயர் அசாரியாசு.
1 நாளாகமம் 2 : 9 (RCTA)
எஸ்ரோனுக்கு எரமெயேல், இராம், கலுபி என்பவர்கள் பிறந்தனர்.
1 நாளாகமம் 2 : 10 (RCTA)
இராம் அமினதாபைப் பெற்றார். அமினதாப் யூதாவின் புதல்வருக்குத் தலைவரான நகசோனைப் பெற்றார்.
1 நாளாகமம் 2 : 11 (RCTA)
நகசோன் சல்மாவைப் பெற்றார். இவரிடமிருந்து போவாசு பிறந்தார்.
1 நாளாகமம் 2 : 12 (RCTA)
போவாசோ ஒபேதைப் பெற்றார். இவரோ இசாயியைப் பெற்றார்.
1 நாளாகமம் 2 : 13 (RCTA)
இசாயியோ தலைமகனாக எலியாபையும், இரண்டாவதாக அபினதாபையும், மூன்றாவதாக சிம்மாவையும்,
1 நாளாகமம் 2 : 14 (RCTA)
நான்காவதாக நத்தானியேலையும், ஐந்தாவதாக இரதையும்,
1 நாளாகமம் 2 : 15 (RCTA)
ஆறாவதாக அசோமையும், ஏழாவதாக தாவீதையும் பெற்றார்.
1 நாளாகமம் 2 : 16 (RCTA)
சார்வியா, அபிகாயில் என்பவர்கள் இவர்களுடைய சகோதரிகள். சார்வியாளுக்கு அபிசாயி, யோவாப், அசாயேல் என்ற மூன்று புதல்வர்கள்.
1 நாளாகமம் 2 : 17 (RCTA)
அபிகாயிலோ அமாசாவைப் பெற்றாள். இஸ்மாயேல் குலத்தைச் சார்ந்த ஏதரே இவருடைய தந்தை.
1 நாளாகமம் 2 : 18 (RCTA)
எஸ்ரோனின் மகன் காலேபோ அசுபாளை மணந்து எரியோத்தைப் பெற்றார். பிறகு அவருக்கு யாசேர், சோபாப், அர்தோன் என்பவர்கள் பிறந்தனர்.
1 நாளாகமம் 2 : 19 (RCTA)
அசூபா இறந்தபின், காலேப் எப்பிராத்தை மணமுடித்தார். அவளிடம் அவருக்குக் கூர் பிறந்தார்.
1 நாளாகமம் 2 : 20 (RCTA)
கூர் ஊரியைப் பெற்றார். ஊரியோ பெசெலெயேலைப் பெற்றார்.
1 நாளாகமம் 2 : 21 (RCTA)
பிறகு எஸ்ரோன் கலாதின் தந்தை மக்கீரின் மகளை மண முடித்தார். அப்போது அவருக்கு வயது அறுபது. அவள் அவருக்குச் சேகுபைப் பெற்றாள். சேகுப் ஐயீரைப் பெற்றார்.
1 நாளாகமம் 2 : 22 (RCTA)
அப்பொழுது கலாத் நாட்டிலே இருபத்து மூன்று நகர்களைச் சொந்தமாக்கிக் கொண்டார்.
1 நாளாகமம் 2 : 23 (RCTA)
கெசூர், ஆராம் என்போர் ஐயீரின் நகர்களையும், கனாத்தையும், அதைச் சேர்ந்த அறுபது நகர்களையும், இவற்றிற்கடுத்த ஊர்களையும் கைப்பற்றினர். அவர்கள் அனைவரும் கலாதின் தந்தை மக்கீரின் புதல்வர்கள்.
1 நாளாகமம் 2 : 24 (RCTA)
எஸ்ரோன் இறந்த பிறகு காலேப் தம் தந்தையின் மனைவியாகிய எப்பிராத்தாளோடு மண உறவு கொண்டார். இவள் அவருக்குத் தேக்குவாயின் தந்தையாகிய அசூரைப் பெற்றாள்.
1 நாளாகமம் 2 : 25 (RCTA)
எஸ்ரோனுடைய மூத்த மகன் பெயர் எரமெயேல். இவருடைய தலைமகன் பெயர் இராம். பிறகு புனா, ஆராம், அசாம், அக்கியா ஆகியோர் பிறந்தனர்.
1 நாளாகமம் 2 : 26 (RCTA)
எரமெயேல் அத்தாரா என்பவளையும் மணமுடித்தார்.
1 நாளாகமம் 2 : 27 (RCTA)
இவளே ஓனாமின் தாய். எரமெயேலின் தலைமகன் இராமுடைய புதல்வர்களின் பெயர்கள்: மொவோசு, யாமீன், ஆக்கார் என்பவனாம்.
1 நாளாகமம் 2 : 28 (RCTA)
ஓனாம் என்பவருக்கு செமேயி, யாதா, ஆகியோர் பிறந்தனர். செமேயியின் புதல்வரோ நதாப், அபிசூர் என்பவர்கள்.
1 நாளாகமம் 2 : 29 (RCTA)
அபிசூரின் மனைவியின் பெயர் அபிகாயில். இவள் அவருக்கு அகோபாளையும் மொலிதையும் பெற்றாள்.
1 நாளாகமம் 2 : 30 (RCTA)
நதாபின் புதல்வர் சலேத், அப்பைம் என்பவர்கள். சலேத்துக்கு மரணம் வரை மகப்பேறு இல்லை. அப்பைமின் மகன் பெயர் ஏசி.
1 நாளாகமம் 2 : 31 (RCTA)
இந்த ஏசி செசானைப் பெற்றார். செசானோ ஓகோலைப் பெற்றார்.
1 நாளாகமம் 2 : 32 (RCTA)
செமேயியுடைய சகோதரரான யாதாவின் புதல்வர் ஏத்தேர், யோனத்தான் என்று அழைக்கப் பெற்றனர். ஏத்தேரும் மகப்பேறின்றி இறந்தார்.
1 நாளாகமம் 2 : 33 (RCTA)
யோனத்தானோ பலேத்தையும் சீசாவையும் பெற்றார். இவர்கள் எரமெயேலின் புதல்வர்களாம்.
1 நாளாகமம் 2 : 34 (RCTA)
சேசானுக்குப் புதல்வியரேயன்றிப் புதல்வரில்லை. ஆனால் ஏரா என்ற பெயருள்ள எகிப்திய அடிமை ஒருவன் இருந்தான்.
1 நாளாகமம் 2 : 35 (RCTA)
சேசான் இவனுக்குத் தம் மகளை மணமுடித்துக் கொடுத்தார்.
1 நாளாகமம் 2 : 36 (RCTA)
இவள் ஏத்தையைப் பெற்றாள். ஏத்தேயோ நாத்தானைப் பெற்றார். நாத்தான் சாபாதைப் பெற்றார்.
1 நாளாகமம் 2 : 37 (RCTA)
சாபாத் ஒப்லாலைப் பெற்றார். ஒப்வால் ஒபேதைப் பெற்றார்.
1 நாளாகமம் 2 : 38 (RCTA)
ஒபேத் ஏகுவைப் பெற்றார். ஏகு அசாரியாசைப் பெற்றார்.
1 நாளாகமம் 2 : 39 (RCTA)
அசாரியாசு எல்லேசைப் பெற்றார். எல்லேசு எலாசாவைப் பெற்றார்.
1 நாளாகமம் 2 : 40 (RCTA)
எலாசா சிசமோயைப் பெற்றார். சிசமோய் செல்லுமைப் பெற்றார்.
1 நாளாகமம் 2 : 41 (RCTA)
செல்லும் இக்காமியாமைப் பெற்றார். இக்காமியாம் எலிசாமைப் பெற்றார்.
1 நாளாகமம் 2 : 42 (RCTA)
எரமெயேலுடைய சகோதரராகிய காலேபுடைய சந்ததியார்: சிப்பின் தந்தை மேசா என்னும் தலைமகனும்,
1 நாளாகமம் 2 : 43 (RCTA)
எபிரோனின் தந்தை மரேசாவின் புதல்வருமே. எபிரோனின் புதல்வர் பெயர்: கோரே, தப்புவா, ரேக்கேம், சம்மா என்பனவாம்.
1 நாளாகமம் 2 : 44 (RCTA)
சம்மாவோ யெர்க்காமுடைய தந்தை இரகாமைப் பெற்றார். ரேக்கேம் சம்மாயியைப் பெற்றார்.
1 நாளாகமம் 2 : 45 (RCTA)
சம்மாயியின் மகன் பெயர் மாவோன்; மாவோனோ பெத்சூரின் தந்தை.
1 நாளாகமம் 2 : 46 (RCTA)
காலேபுடைய வைப்பாட்டி எப்பா ஆரான், மோசா, கெசேசு என்பவர்களைப் பெற்றாள்.
1 நாளாகமம் 2 : 47 (RCTA)
ஆரான் கெசேசைப் பெற்றார். யகத்தாயியின் புதல்வர்கள் பெயர்: ரேகோம், யோவத்தான், கெசான், பாலெத், எப்பா, சாப் என்பன.
1 நாளாகமம் 2 : 48 (RCTA)
காலேபுடைய வைப்பாட்டி மாக்கா சாபேரையும், தாரனாவையும் பெற்றாள்.
1 நாளாகமம் 2 : 49 (RCTA)
அவளே மத்மேனாவின் தந்தையாகிய சாப்பையும் மக்பேனாவிற்கும் காப்பாவிற்கும் தந்தையான சுவேயையும் பெற்றாள். காலேபின் மகள் பெயர் அக்சா.
1 நாளாகமம் 2 : 50 (RCTA)
எப்பிராத்தா என்பவளின் தலைமகன் கூரின் புதல்வரோ: காரியாத்தியாரிமுடைய தந்தை சோபால்,
1 நாளாகமம் 2 : 51 (RCTA)
பெத்லெகேமின் தந்தை சல்மா, பெத்கதேரின் தந்தை ஆரிப் ஆகியவர்களாம்.
1 நாளாகமம் 2 : 52 (RCTA)
காரியாத்தியாரிமின் தந்தை சோபாலுக்குப் புதல்வர்கள் பிறந்தனர். ஆரோவேயும், மெனுகோத் சந்ததியில் பாதிப்பேருமே அவர்கள்.
1 நாளாகமம் 2 : 53 (RCTA)
எத்திரேயரும் அபுத்தேயரும் கெமத்தேயரும் மசெரேயரும் காரியாத்தியாரிமின் வழி வந்தோர்களாவர்; இவர்களிடமிருந்து சாரைத்தரும், எஸ்தாவோலித்தரும் தோன்றினர்.
1 நாளாகமம் 2 : 54 (RCTA)
பெத்லெகேம், நேத்தோபாத்தி, அதரோத்-பேத்-யோவாப் நகர மக்களும், மற்றும் மானக்தியரிலும் சோரியரிலும் பாதிப்பேரும் சல்மாவுடைய குலத்திலே உதித்தவர்கள்.
1 நாளாகமம் 2 : 55 (RCTA)
யாபேசில் குடியிருந்த மறைவல்லுநரின் குலவழியினர், கூடாரங்களில் தங்கியிருந்தனர். பாடியும் (இசைக் கருவிகள்) மீட்டியும் வந்தனர். இவர்களே ரெக்காபுடைய குலத்தந்தையான காலோர் வழிவந்த கினேயராவர்.

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55