1 நாளாகமம் 16 : 1 (RCTA)
இவ்வாறு கடவுளின் திருப் பேழையைக் கொணர்ந்து, தாவீது அதற்காக அமைத்திருந்த கூடாரத்தின் நடுவே அதை நிறுவினர். பின் கடவுளின் திருமுன் தகனப்பலிகளையும், சமாதானப் பலிகளையும் ஒப்புக் கொடுத்தனர்.
1 நாளாகமம் 16 : 2 (RCTA)
தகனப் பலிகளையும், சமாதானப் பலிகளையும் தாவீது ஒப்புக்கொடுத்து முடிந்தபின், ஆண்டவரின் திருப் பெயரால் மக்களை ஆசீர்வதித்தார்.
1 நாளாகமம் 16 : 3 (RCTA)
மேலும் ஆண், பெண் அனைவருக்கும் தனித்தனியே ஓர் அப்பத்தையும், ஒரு மாட்டிறைச்சித் துண்டையும், எண்ணெயில் பொரிக்கப்பட்ட மிருதுவான மாவையும் பங்கிட்டுக் கொடுத்தார்.
1 நாளாகமம் 16 : 4 (RCTA)
பின் ஆண்டவரின் திருப் பேழைக்கு முன் திருப்பணி புரியவும், அவருடைய செயல்களை நினைவுகூர்ந்து இஸ்ராயேலின் ஆண்டவராகிய கடவுளை வாழ்த்திப் போற்றவும் லேவியரில் சிலரை நியமித்தார். அவர்களில் அசாயியைத் தலைவனாயும்;
1 நாளாகமம் 16 : 5 (RCTA)
அவனுக்கு அடுத்தபடியாக சக்கரியாசையும்; யாகியேல், செமிரமோத், யேகியேல், மத்தாத்தியாசு, எலியாப், பனாயியாசு, ஒபேதெதோம் ஆகியோரையும்; தம்புரு, சுரமண்டலக் கருவிகளை இசைக்க ஏகியேலையும்;
1 நாளாகமம் 16 : 6 (RCTA)
கைத்தாளம் கொட்ட ஆசாப்பையும்; ஆண்டவரின் உடன்படிக்கைப் பேழையின் முன் இடைவிடாமல் எக்காளம் ஊதக் குருக்களாகிய பனாயியாசையும் யாசியேலையும் நியமித்தார்.
1 நாளாகமம் 16 : 7 (RCTA)
அன்று ஆண்டவரைப் புகழ்ந்து பாடும் பொருட்டுத் தாவீது தலைவன் ஆசாப்பிடமும், அவனுடைய சகோதரரிடமும் கொடுத்த பாடலாவது:
1 நாளாகமம் 16 : 8 (RCTA)
ஆண்டவரைப் புகழுங்கள்; அவரது திரப்பெயரைக் கூவி அழையுங்கள். அவர் தம் செயல்களை மக்களுக்குப் பறைசாற்றுங்கள்.
1 நாளாகமம் 16 : 9 (RCTA)
அவருக்குப் பாடல்பாடி, அவருக்கு வீணை மீட்டுங்கள். அவர்தம் வியத்தகு செயல்களை எல்லாம் எடுத்தியம்புங்கள்.
1 நாளாகமம் 16 : 10 (RCTA)
அவரது திருப்பெயரைப் போற்றுங்கள். ஆண்டவரைத் தேடுவோரின் இதயம் உவகை கொள்வதாக.
1 நாளாகமம் 16 : 11 (RCTA)
ஆண்டவரையும் அவரது ஆற்றலையும் தேடுங்கள். அவரை நாளும் நாடுங்கள்.
1 நாளாகமம் 16 : 12 (RCTA)
அவர் செய்த அதிசயங்களையும், அருங்குறிகளையும், அவர் தம் நீதித் தீர்ப்புகளையும் நினைவுகூருங்கள்.
1 நாளாகமம் 16 : 13 (RCTA)
இஸ்ராயேல் குலமே! அவருடைய ஊழியரே! அவரால் தேர்ந்துகொள்ளப்பட்டவர்களே!
1 நாளாகமம் 16 : 14 (RCTA)
அவரே நம் ஆண்டவராகிய கடவுள். அவருடைய நீதித் தீர்ப்புகள் வையகம் எங்கும் விளங்குகின்றன.
1 நாளாகமம் 16 : 15 (RCTA)
அவர் செய்த உடன்படிக்கையையும் ஆயிரம் தலைமுறைகளுக்கென்று அவர் கட்டளையிட்டவற்றையும் என்றும் நினைவில் கொள்ளுங்கள். ஆபிரகாமோடு அவர் செய்து கொண்ட உடன்படிக்கையும்,
1 நாளாகமம் 16 : 16 (RCTA)
ஈசாக்குக்கு அவர் இட்ட ஆணையையும் என்றென்றும் நினைவு கூருங்கள்.
1 நாளாகமம் 16 : 17 (RCTA)
அதை யாக்கோபுக்குக் சட்டமாகவும், இஸ்ராயேலுக்கு நித்திய உடன்படிக்கையாகவும் அவர் உறுதிப்படுத்தினார்.
1 நாளாகமம் 16 : 18 (RCTA)
'கானான் நாட்டை உங்களுக்குத் தருவோம்; அதுவே உங்கள் உரிமைச் சொத்து ஆகும்' என்றார்.
1 நாளாகமம் 16 : 19 (RCTA)
அப்பொழுது அவர்கள் அந்நியராய், சிறிய தொகையினராய், மிகச்சில குடிகளாய் இருந்தார்கள்.
1 நாளாகமம் 16 : 20 (RCTA)
அவர்கள் ஓர் இன மக்களை விட்டு மறு இனமக்களிடமும், ஒரு நாட்டை விட்டு மறு நாட்டிற்கும் சென்றார்கள்.
1 நாளாகமம் 16 : 21 (RCTA)
யாரும் அவர்களுக்குத் தீங்கு இழைக்க நீர் விட்டுவிடவில்லை. அவர்கள் பொருட்டு அரசர்களைக் கடிந்து கொண்டீர்.
1 நாளாகமம் 16 : 22 (RCTA)
'நாம் அபிஷுகம் செய்தவர்களைத் தொடாதீர்கள்; நாம் தேர்ந்துகொண்ட இறைவாக்கினர்களுக்குத் தீங்கு இழைக்காதீர்கள்' என்றார்.
1 நாளாகமம் 16 : 23 (RCTA)
அனைத்துலக மக்களே! ஆண்டவருக்குப் பண் இசைப்பீர். நாள்தோறும் அவரது மீட்பைப் பறைசாற்றுவீர்.
1 நாளாகமம் 16 : 24 (RCTA)
மக்களுக்கு அவரது மகிமையை எடுத்துரைப்பீர். எல்லா இனத்தாரிடமும் அவர்தம் வியத்தகு செயல்களை எடுத்தியம்புவீர்.
1 நாளாகமம் 16 : 25 (RCTA)
ஏனெனில் ஆண்டவர் பெரியவர்; உயர் புகழ்ச்சிக்கு உரியவர்; தெய்வங்கள் எல்லாவற்றையும் விட ஆண்டவருக்கே அதிகம் அஞ்ச வேண்டும்.
1 நாளாகமம் 16 : 26 (RCTA)
மக்களின் தெய்வங்களோ வெறும் சிலைகளே. ஆண்டவரோ விண்ணைப் படைத்தவர்.
1 நாளாகமம் 16 : 27 (RCTA)
மகிமையும் புகழும் அவரது திருமுன் இருக்கின்றன. வல்லமையும் மகிழ்ச்சியும் அவரது இடத்தில் இருக்கின்றன.
1 நாளாகமம் 16 : 28 (RCTA)
மக்கள் குலங்களே, ஆண்டவரைப் புகழுங்கள். மகிமையும் வல்லமையும் அவருக்குச் செலுத்துங்கள்.
1 நாளாகமம் 16 : 29 (RCTA)
ஆண்டவரது திருப் பெயருக்குரிய மகிமையைச் செலுத்துங்கள். காணிக்கைகளோடு அவரது திரு முன் வாருங்கள். தூய திருக்கோலத்தோடு ஆண்டவரை வழிபடுங்கள்.
1 நாளாகமம் 16 : 30 (RCTA)
மண்ணகம் முழுவதும் அவருக்கு முன் நடுங்கக்கடவது; ஏனெனில் பூமிக்கு அசையாத அடித்தளமிட்டவர் அவரே.
1 நாளாகமம் 16 : 31 (RCTA)
விண்ணகம் மகிழவும், மண்ணகம் அக்களிக்கவும் கடவன. ஆண்டவர் அரசாளுகிறார் என்று மக்களிடையே அவர்கள் உரைக்கட்டும்.
1 நாளாகமம் 16 : 32 (RCTA)
கடலும் அதில் வாழ் அனைத்தும் முழங்கட்டும்; வயல்களும் அவற்றில் உள்ள யாவும் களிகூரட்டும்.
1 நாளாகமம் 16 : 33 (RCTA)
அப்பொழுது காட்டின் மரங்கள் ஆண்டவர் திருமுன் புகழ் பாடும். ஏனெனில் அவர் உலகை நடுத்தீர்க்க வருவார்.
1 நாளாகமம் 16 : 34 (RCTA)
ஆண்டவரைப் போற்றுங்கள்; ஏனெனில் அவர் நல்லவர்; அவர் தம் இரக்கம் என்றென்றும் உள்ளது.
1 நாளாகமம் 16 : 35 (RCTA)
எம் மீட்பராகிய கடவுளே! எங்களைக் காப்பாற்றும்; புறவினத்தாரிடமிருந்து எங்களை விடுவித்தருளும்; ஒன்றாகக் கூட்டிச் சேர்த்தருளும்; அப்பொழுது நாங்கள் உம் திருப் பெயருக்கு நன்றி கூறுவோம்; உம் திருப்புகழ் பாடி மகிழ்வோம்' என்று சொல்லுங்கள்.
1 நாளாகமம் 16 : 36 (RCTA)
இஸ்ராயேலின் கடவுளாகிய ஆண்டவர் என்றென்றும் புகழப்படுவாராக!" அதற்கு மக்கள் எல்லாரும், "ஆமென்" என்றுரைத்து ஆண்டவரைப் புகழ்ந்து பாடினர்.
1 நாளாகமம் 16 : 37 (RCTA)
பின் தாவீது ஆண்டவரின் திருப்பேழைக்கு முன்பாக ஆசாப்பையும் அவன் குடும்பத்தாரையும் அவர்கள் நாளும் முறைப்படி திருப்பேழைக்கு முன் இடைவிடாமல் திருப்பணி செய்யக் கட்டளையிட்டார்.
1 நாளாகமம் 16 : 38 (RCTA)
ஒபேதெதோமையும், அவன் குடும்பத்தவர் அறுபத்தெட்டுப் பேரையும், இதித்தூவின் மகன் ஒபேதெதோமையும் ஓசாவையும் வாயிற்காவலராக நியமித்தார்.
1 நாளாகமம் 16 : 39 (RCTA)
மேலும் காபாவோன் மேட்டில் பள்ளி கொண்ட ஆண்டவரின் உறைவிடத்திற்கு முன் சாதோக்கையும் அவர் சகோதரரையும் குருக்களாக நியமித்தார்.
1 நாளாகமம் 16 : 40 (RCTA)
இஸ்ராயேலுக்குக் கொடுக்கப்பட்ட ஆண்டவரின் திருச்சட்ட நூலில் எழுதியுள்ளபடி, காலையிலும் மாலையிலும் இடைவிடாமல் தகனப் பலி பீடத்தின் மேல் அவர்கள் தகனப் பலிகளை ஒப்புக் கொடுக்கக் கட்டளையிட்டார்.
1 நாளாகமம் 16 : 41 (RCTA)
அவர்களோடு ஏமானையும், இதித்தூனையும், பெயர் கூறித் தேர்ந்து கொள்ளப்பட்ட ஏனையோரையும், 'ஆண்டவரின் இரக்கம் என்றென்றும் உள்ளது' என்று சொல்லி அவரைத் துதிக்கப் பணித்தார்.
1 நாளாகமம் 16 : 42 (RCTA)
அத்துடன் ஏமான், இதித்தூன் ஆகியோரை, எக்காளங்களையும், கைத்தாளங்களையும், கடவுளைத் துதிப்பதற்குரிய எல்லாவித இசைக்கருவிகளையும் இசைக்கப் பணிந்தார். இதித்தூனின் புதல்வரை வாயிற் காவலராக ஏற்படுத்தினார்.
1 நாளாகமம் 16 : 43 (RCTA)
பின் எல்லா மக்களும் தத்தம் வீடு திரும்பினர். தாவீதும் தம் வீட்டாருக்கு ஆசி வழங்கத் தம் இல்லம் ஏகினார்.
❮
❯