1 நாளாகமம் 15 : 1 (RCTA)
அவர் தமக்குத் தாவீதின் நகரிலே அரண்மனைகளைக் கட்டினார். கடவுளின் திருப்பேழைக்கு என ஓர் இடத்தைத் தயார் செய்து ஒரு கூடாரத்தையும் அமைத்தார்.
1 நாளாகமம் 15 : 2 (RCTA)
பிறகு தாவீது, "கடவுளின் திருப்பேழையைச் சுமக்கவும், என்றென்றும் தமக்குத் திருப்பணி புரியவும் ஆண்டவர் தேர்ந்து கொண்ட லேவியரைத் தவிர வேறொருவரும் அப்பேழையைச் சுமந்து வரலாகாது" என்றுரைத்தார்.
1 நாளாகமம் 15 : 3 (RCTA)
கடவுளின் திருப்பேழைக்காகத் தாம் தயாரித்திருந்த இடத்துக்கு அதைக் கொண்டு வரும்படி தாவீது இஸ்ராயேல் மக்கள் அனைவரையும் யெருசலேமில் ஒன்று திரட்டினார்.
1 நாளாகமம் 15 : 4 (RCTA)
பின் ஆரோனின் புதல்வரையும்,
1 நாளாகமம் 15 : 5 (RCTA)
லேவியராகிய காத்தின் புதல்வரில் தலைவனாகிய ஊரியேலையும், அவன் சகோதரரான நூற்றிருபது பேரையும்,
1 நாளாகமம் 15 : 6 (RCTA)
மெராரியின் புதல்வரில் தலைவனான அசாயியாவையும் அவன் சகோதரரான இருநூற்றிருபது பேரையும்,
1 நாளாகமம் 15 : 7 (RCTA)
கெர்சோம் புதல்வரில் தலைவனான யோவேலையும், அவன் சகோதரரான நூற்று முப்பது பேரையும்,
1 நாளாகமம் 15 : 8 (RCTA)
எலிசபான் புதல்வரில் செமாயியா என்ற தலைவனையும் அவன் சகோதரரான இருநூறு பேரையும்,
1 நாளாகமம் 15 : 9 (RCTA)
எபுரோன் புதல்வரில் எலியேல் என்ற தலைவனையும் அவன் சகோதரரான எண்பது பேரையும்,
1 நாளாகமம் 15 : 10 (RCTA)
ஒசியேல் புதல்வரில் அமினதாப் என்ற தலைவனையும் அவன் சகோதரரான நூற்றுப் பன்னிரண்டு பேரையும் வரச் செய்தார்.
1 நாளாகமம் 15 : 11 (RCTA)
பின் தாவீது குருக்களாகிய சாதோக்கையும் அபியதாரையும், லேவியராகிய ஊரியேல், அசாயியா, யோவேல், செமெயியா, எலியேல், அமினதாப் ஆகியோரையும் வரவழைத்தார்.
1 நாளாகமம் 15 : 12 (RCTA)
அவர்களை நோக்கி, 'லேவியர் குலத் தலைவர்களே உங்களையும் உங்கள் சகோதரர்களையும் தூய்மைப் படுத்திக் கொண்டு, இஸ்ராயேலின் கடவுளான ஆண்டவரின் திருப்பேழையை அதற்காகத் தயாரிக்கப் பட்டுள்ள இடத்திற்குக் கொண்டு வாருங்கள்.
1 நாளாகமம் 15 : 13 (RCTA)
ஏனெனில், முன்னர் நீங்கள் அதைத் தூக்காததால் நம் கடவுளாகிய ஆண்டவர் நமக்கு அழிவைக் கொணர்ந்தார். ஏனெனில் குறித்தவாறு முறையான வழியில் அதை நாம் தேடாது போனோம்" என்றார்.
1 நாளாகமம் 15 : 14 (RCTA)
அவ்வாறே குருக்களும் லேவியரும் இஸ்ராயேலின் கடவுளான ஆண்டவரின் திருப் பேழையைச் சுமந்து வரவேண்டித் தங்களைத் தூய்மைப் படுத்திக் கொண்டனர்.
1 நாளாகமம் 15 : 15 (RCTA)
பின் லேவியர்கள் ஆண்டவரின் சொற்படி மோயீசன் கற்பித்தது போலக் கடவுளின் திருப் பேழையை அதன் தண்டுகளினால் தூக்கி, தங்கள் தோள்களின் மேல் வைத்துச் சுமந்து வந்தனர்.
1 நாளாகமம் 15 : 16 (RCTA)
தாவீது லேவியர் குலத் தலைவர்களை நோக்கி, "நீங்கள் உங்கள் சகோதரர்களுக்குள் பாடகரை நியமித்துக் கொள்ளுங்கள். தம்புரு, சுரமண்டலம், கைத்தாளம் முதலிய இசைக் கருவிகள் முழங்க, மங்கள இசை ஒலிக்க, அவர்கள் தங்கள் குரலை உயர்த்திப் பாடவேண்டும்" என்றார்.
1 நாளாகமம் 15 : 17 (RCTA)
அவ்வாறே அவர்கள் யோவேலின் மகன் ஏமானையும், அவன் சகோதரரான பரக்கியாசின் மகன் ஆசாபையும், அவர் தம் சகோதரரான மெராரியின் புதல்வரில் கசாயியாவின் மகன் ஏத்தான் என்பவனையும்,
1 நாளாகமம் 15 : 18 (RCTA)
அவர்களோடு அவர்களின் சகோரர்களையும் அமர்த்தினார்கள். அவர்களுக்கு அடுத்தபடியாக, வாயிற்காவலரான சக்கரியாஸ், பேன், யாசியேல், செமிரமொத், யாகியேல், ஆனி, எலியாப், பனாயியாஸ், மாசியாஸ், ஒபேதெதோம், ஏகியேல் ஆகியோரை நிறுத்தினார்கள்.
1 நாளாகமம் 15 : 19 (RCTA)
பாடகரான ஏமான், ஆசாப், ஏத்தான் ஆகியோர் வெண்கலக் கைத் தாளங்களை ஒலிப்பதற்காக நியமிக்கப்பட்டனர்.
1 நாளாகமம் 15 : 20 (RCTA)
சக்கரியாஸ், ஓசியேல், செமிரமரெத், யாகியேல், ஆனி, எலியாப், மாசியாஸ், பனாயியாஸ் என்பவர்களோ யாழ்களை மீட்டி வந்தனர்.
1 நாளாகமம் 15 : 21 (RCTA)
மத்தாத்தியாஸ், எலீப்பலு, மசேனியாஸ், ஒபேதெதோம், ஏகியேல், ஒசாசியு ஆகியோர் எண்ணரம்புள்ள வீணைகள் ஒலிக்க வெற்றிப் பாடலைப் பாடி வந்தனர்.
1 நாளாகமம் 15 : 22 (RCTA)
லேவியருக்குத் தலைவனான கொனேனியாசு பாடல்களைத் தொடங்கும் பாடகர்த் தலைவனாய் இருந்தான். ஏனெனில் அவன் மிகவும் திறமையுள்ளவன்.
1 நாளாகமம் 15 : 23 (RCTA)
பாக்கியாசும், எல்கானாவும் திருப்பேழையைக் காவல் புரிந்து வந்தனர்.
1 நாளாகமம் 15 : 24 (RCTA)
ஆனால் செபேனியாசு, யோசப்பாத், நாத்தானியேல், அமசாயி, சக்கரியாஸ், பனாயியாஸ், எலியெசார் ஆகிய குருக்கள் கடவுளின் திருப்பேழைக்கு முன் எக்காளம் ஊதிக்கொண்டு வந்தார்கள். ஒபேதெதோமும் ஏகியாசும் பேழையின் வாயிற்காவலராய் இருந்தனர்.
1 நாளாகமம் 15 : 25 (RCTA)
இவ்வாறாக, தாவீதும் இஸ்ராயேலில் பெரியவர் யாவரும், ஆயிரவர் தலைவர்களும் அதிபதிகளும், ஆண்டவரின் உடன்படிக்கைப் பேழையை ஒபேதெதோமின் வீட்டிலிருந்து எடுத்துவர மகிழ்ச்சியுடன் புறப்பட்டுச் சென்றனர்.
1 நாளாகமம் 15 : 26 (RCTA)
ஆண்டவரின் உடன்படிக்கைப் பேழையைச் சுமந்து வந்த லேவியருக்குக் கடவுள் உதவியதால், ஏழு காளைகளும், ஏழு செம்மறிக் கடாக்களும் பலியிடப்பட்டன.
1 நாளாகமம் 15 : 27 (RCTA)
தாவீதும் திருப் பேழையைச் சுமந்து வந்த எல்லா லேவியரும் பாடகரும் பாடல்களைத் தொடங்கும் பாடகர்த் தலைவனான கொனேனியாசும் மெல்லிய சணலாடை அணிந்திருந்தனர்.
1 நாளாகமம் 15 : 28 (RCTA)
இஸ்ராயேல் மக்கள் அனைவரும் அக்களிப்போடும் தாரைத் தொனியோடும் எக்காளங்களையும் கைத்தாளங்களையும் சுரமண்டலங்களையும் வீணைகளையும் ஒலித்துக் கொண்டு ஆண்டவரின் உடன்படிக்கைப் பேழையை எடுத்து வந்தனர்.
1 நாளாகமம் 15 : 29 (RCTA)
ஆண்டவரின் உடன்படிக்கைப் பேழை தாவீதின் நகரை அடைந்த போது, சவுலின் மகள் மிக்கோல் பலகணி வழியாய் உற்றுப் பார்த்தாள். அங்கே தாவீது அரசர் ஆடிக்கொண்டும் பாடிக்கொண்டும் வருவதைக் கண்டு அவரைப் பற்றித் தன்னுள் இழிவான எண்ணம் கொண்டாள்.

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29