1 நாளாகமம் 10 : 1 (RCTA)
பிலிஸ்தியர் இஸ்ராயேலுக்கு எதிராய்ப் போர் செய்து கொண்டிருந்தனர். இஸ்ராயேல் மக்கள் பிலிஸ்தியருக்கு முன்பாகப் புறமுதுகு காட்டி ஓடினர்; கெல்போயே மலையில் காயம் பட்டு வீழ்ந்தனர்.
1 நாளாகமம் 10 : 2 (RCTA)
பிலிஸ்தியர் சவுலையும் அவருடைய புதல்வர்களையும் துரத்திச் சென்று நெருங்கி வந்து சவுலின் புதல்வர்களான யோனத்தாசு, அவினதாப், மெல்கிசுவா என்பவர்களை வெட்டி வீழ்த்தினர்.
1 நாளாகமம் 10 : 3 (RCTA)
சவுலுக்கு எதிராய் அவர்கள் கடும்போர் புரிந்தனர். வில் வீரர் நெருங்கி வந்து அம்புகளால் அவரைக் காயப்படுத்தினர்.
1 நாளாகமம் 10 : 4 (RCTA)
அப்போது சவுல் தம் பரிசையனை நோக்கி, "உனது வாளை உருவி என்னைக் கொன்றுவிடு; இல்லாவிட்டால் விருத்தசேதனம் செய்யப்படாத இவர்கள் வந்து என்னை ஏளனம் செய்வார்கள்" என்றார். அவருடைய பரிசையனோ அச்சமுற்று, "அவ்வாறு செய்யமாட்டேன்" என்றான். அப்பொழுது சவுல் தம் வாளை தரையில் நாட்டிவைத்து அதன் மேல் வீழ்ந்தார்.
1 நாளாகமம் 10 : 5 (RCTA)
சவுல் இறந்ததை அவருடைய பரிசையன் கண்டு தானும் தனது வாளின் மேல் விழுந்து மடிந்தான்.
1 நாளாகமம் 10 : 6 (RCTA)
இவ்வாறு சவுலும் அவருடைய மூன்று புதல்வரும் மடிந்தனர். அவரோடு அவரது குடும்பம் முழுவதும் அழிந்து போயிற்று.
1 நாளாகமம் 10 : 7 (RCTA)
பள்ளத்தாக்கிலே குடியிருந்த இஸ்ராயேல் மக்கள் அதைக்கண்டு தப்பியோடினர். சவுலும் அவருடைய புதல்வர்களும் மாண்டபின்பு, தங்கள் நகர்களை விட்டு இங்குமங்கும் சிதறிப் போயினர். எனவே பிலிஸ்தியர் வந்து அவற்றில் குடியேறினர்.
1 நாளாகமம் 10 : 8 (RCTA)
பிலிஸ்தியர் மடிந்தவர்களின் ஆடைகளை உரிந்து கொள்ள வந்த போது, சவுலும் அவருடைய மகனும் கெல்போயே மலையில் கிடப்பதைக் கண்டனர்.
1 நாளாகமம் 10 : 9 (RCTA)
அவருடைய ஆடைகளை உரிந்து கொண்டு, ஆயுதங்களையும் எடுத்துக் கொண்டனர். பின் அவரது தலையை வெட்டி, தமது கோவில் சிலைகளுக்குப் படைக்கவும் மக்களுக்குக் காட்டவும், அதைத் தங்கள் நாட்டிற்கு அனுப்பி வைத்தனர்.
1 நாளாகமம் 10 : 10 (RCTA)
அவருடைய ஆயுதங்களை தங்கள் தெய்வத்தின் கோவில் காணிக்கையாக்கினர். அவரது தலையைக் தாகோன் கோவிலில் கட்டிக் தொங்கவிட்டனர்.
1 நாளாகமம் 10 : 11 (RCTA)
பிலிஸ்தியர் சவுலுக்குச் செய்ததையெல்லால் காலாத் நாட்டு யாபேஸ் நகர மக்கள் கேள்வியுற்றனர்.
1 நாளாகமம் 10 : 12 (RCTA)
அப்போது அவர்களுள் ஆற்றல்மிக்கவர் அனைவரும் புறப்பட்டு வந்து சவுலின் பிணத்தையும், அவர் புதல்வரின் பிணங்களையும் எடுத்து அவற்றை யாபேசுக்குக் கொண்டு சென்றனர். அங்கிருந்த ஒரு கருவாலி மரத்தடியில் அவர்களின் எலும்புகளை அடக்கம் செய்து ஏழு நாள் நோன்பிருந்தனர்.
1 நாளாகமம் 10 : 13 (RCTA)
இவ்வாறு சவுல் ஆண்டவரது கட்டளையைக் கடைப்பிடிக்காமல் அவருக்கு பிரமாணிக்கமற்ற விதமாய் நடந்துகொண்டார். மேலும் அவர் மாய வித்தைக்காரரை நம்பி அவர்களிடம் ஆலோசனை கேட்டிருந்தார். இதன் பொருட்டே அவர் மாண்டார்.
1 நாளாகமம் 10 : 14 (RCTA)
ஆண்டவரில் நம்பிக்கை வைக்காததால் ஆண்டவர் அவரைச் சாகடித்து, அவரது அரசை இசாயி மகன் தாவீதுக்குக் கொடுத்தார்.

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14