செப்பனியா 1 : 1 (OCVTA)
யூதாவின் அரசனான ஆமோனின் மகன் யோசியாவின் ஆட்சிக்காலத்தில், யெகோவாவின் வார்த்தை செப்பனியாவுக்கு வந்தது. செப்பனியா கூசியின் மகன், கூசி கெதலியாவின் மகன், கெதலியா அமரியாவின் மகன், அமரியா எசேக்கியாவின் மகன்.
செப்பனியா 1 : 2 (OCVTA)
{வரப்போகும் அழிவைப்பற்றிய எச்சரிக்கை} [PS] “பூமியின் மேற்பரப்பில் காணப்படும் அனைத்தையும், [QBR2] நான் வாரிக்கொண்டு போவேன்” [QBR2] என யெகோவா அறிவிக்கிறார். [QBR]
செப்பனியா 1 : 3 (OCVTA)
“நான் மனிதர்களையும், மிருகங்களையும் வாரிக்கொண்டு போவேன்; [QBR2] நான் ஆகாயத்துப் பறவைகளையும், [QBR2] கடலின் மீன்களையும் [QBR2] வாரிக்கொண்டு போவேன்.” “நான் பூமியின் மேற்பரப்பிலிருந்து மனிதர்களை அகற்றும்போது, [QBR2] கொடியவர்களையும் அவர்களுடைய தெய்வங்களையும் அழிப்பேன்” [QBR2] என்று யெகோவா அறிவிக்கிறார். [QBR]
செப்பனியா 1 : 4 (OCVTA)
நான் யூதாவுக்கு எதிராகவும், எருசலேமில் வாழும் [QBR2] அனைவருக்கு எதிராகவும் என் கையை நீட்டுவேன்; [QBR] நான் இந்த இடத்திலிருந்து பாகால் வணக்கத்தின் [QBR2] மீதியான எல்லாவற்றையும் அகற்றுவேன். [QBR] விக்கிரக வணக்கத்தில் ஈடுபடுகிறவர்களையும் அவர்களுடைய பூசாரிகளையும் [QBR2] அவர்களுடைய பெயர்களே இல்லாமல் போகும்படி அழிப்பேன். [QBR]
செப்பனியா 1 : 5 (OCVTA)
நட்சத்திரக் கூட்டங்களை வணங்குவதற்காக, [QBR2] வீட்டின் மேல்மாடங்களில் விழுந்து வணங்குகிறவர்களையும் அகற்றுவேன். [QBR] யெகோவாவை விழுந்து வழிபட்டும், அவர் பேரில் ஆணையிடுவதோடு, [QBR2] மோளேக்கு தெய்வத்தின் பெயரிலும் ஆணையிடுகிறவர்களை அகற்றுவேன். [QBR]
செப்பனியா 1 : 6 (OCVTA)
யெகோவாவைப் பின்பற்றுவதிலிருந்து பின்வாங்கியவர்களையும், [QBR2] யெகோவாவின் ஆசீர்வாதத்தைத் தேடாமலும், [QBR2] அவரிடமிருந்து ஆலோசனைக் கேட்டு அறியாமல் இருப்பவர்களையும் அகற்றுவேன்.
செப்பனியா 1 : 7 (OCVTA)
ஆண்டவராகிய யெகோவாவுக்கு முன்பாக மவுனமாயிருங்கள். [QBR2] ஏனெனில் யெகோவாவின் நாள் சமீபமாயுள்ளது. [QBR] யெகோவா ஒரு பலியை ஆயத்தம் செய்திருக்கிறார். [QBR2] அவர் தாம் அழைத்திருக்கிறவர்களைப் பரிசுத்தப்படுத்தியிருக்கிறார்.
செப்பனியா 1 : 8 (OCVTA)
யெகோவாவினுடைய பலியின் நாளில், [QBR2] நான் பிரபுக்களையும், [QBR2] இளவரசர்களையும், [QBR] பிற நாட்டவரின் பழக்கவழக்கங்களைப் [QBR2] பின்பற்றுகிறவர்களையும் தண்டிப்பேன். [QBR]
செப்பனியா 1 : 9 (OCVTA)
அந்நாளில் போலியான தெய்வங்களை வணங்கி, [QBR2] அதன் வழிபாட்டில் பங்குகொள்கிறவர்களைத் தண்டிப்பேன். [QBR] அவர்கள் தங்கள் தெய்வங்களின் கோயில்களை [QBR2] வன்முறையாலும் வஞ்சனையினாலும் நிரப்புகிறார்கள்.
செப்பனியா 1 : 10 (OCVTA)
யெகோவா அறிவிக்கிறதாவது: [QBR2] அந்த நாளில் எருசலேம் மதிலிலுள்ள [QBR] மீன் வாசலில் இருந்து அழுகை கேட்கும். [QBR2] அந்த நகரத்தின் புதிய பகுதியிலிருந்து புலம்பலும், [QBR2] குன்றுகளிலிருந்து அது இடிந்துவிழும் சத்தமும் உண்டாகும். [QBR]
செப்பனியா 1 : 11 (OCVTA)
எருசலேமின் சந்தைப் பகுதியில் வாழும் மக்களே; [QBR2] அழுது புலம்புங்கள், உங்கள் வர்த்தகர் எல்லோரும் அழிந்துபோவார்கள். [QBR2] வெள்ளி வியாபாரிகள் யாவரும் பாழாய்ப் போவார்கள். [QBR]
செப்பனியா 1 : 12 (OCVTA)
அந்த வேளையில் நான் எருசலேமில் விளக்குகளைக்கொண்டு தேடுவேன். [QBR2] யெகோவா நன்மையோ தீமையோ ஒன்றும் செய்யவில்லை என்று சொல்லி, [QBR2] ஏனோ தானோ என்று இருப்பவர்களைத் தண்டிப்பேன். [QBR] அவர்கள் திராட்சை மதுவின் [QBR2] மண்டியைப்போல் இருக்கிறார்கள். [QBR]
செப்பனியா 1 : 13 (OCVTA)
அவர்களுடைய செல்வம் சூறையாடப்படும், [QBR2] வீடுகள் உடைத்து அழிக்கப்படும். [QBR] அவர்கள் வீடுகளைக் கட்டுவார்கள், [QBR2] அதில் அவர்கள் குடியிருக்கமாட்டார்கள், [QBR] திராட்சைத் தோட்டத்தை நாட்டுவார்கள். [QBR2] அதன் திராட்சரசத்தைக் குடிக்கமாட்டார்கள்.
செப்பனியா 1 : 14 (OCVTA)
யெகோவாவின் பெரிய நாள் சமீபித்துள்ளது; [QBR2] அது மிக சமீபமாய் இருந்து விரைவாய் வருகிறது. [QBR] கேளுங்கள்! யெகோவாவின் நாளில் ஏற்படும் அழுகை மிகவும் கசப்பாயிருக்கும். [QBR2] இராணுவவீரருங்கூட கூக்குரலிடுவார்கள். [QBR]
செப்பனியா 1 : 15 (OCVTA)
அந்த நாள் கடுங்கோபத்தின் நாள், [QBR2] துன்பமும் வேதனையும் நிறைந்த நாள், [QBR3] தொல்லையும் அழிவுமான நாள், [QBR2] அது இருளும் அந்தகாரமுமான நாள். [QBR3] மப்பும் மந்தாரமுமான நாள். [QBR2]
செப்பனியா 1 : 16 (OCVTA)
அரணான நகரங்களுக்கு எதிராகவும், [QBR] மூலைக் கோபுரங்களுக்கு எதிராகவும் [QBR2] எக்காள சத்தமும் போர் முரசும் எழுப்பப்படும் நாள்.
செப்பனியா 1 : 17 (OCVTA)
மக்கள் யெகோவாவுக்கு எதிராகப் பாவம் செய்ததால், [QBR2] நான் அவர்கள்மேல் துன்பத்தை வரப்பண்ணுவேன்; [QBR2] அவர்கள் குருடரைப்போல் தட்டித் தடவி நடப்பார்கள். [QBR] அவர்களுடைய இரத்தம் புழுதியில் ஊற்றப்படும். [QBR2] அவர்களுடைய குடல்கள் சாணத்தைப்போல் நிலத்தில் கொட்டப்படும். [QBR]
செப்பனியா 1 : 18 (OCVTA)
யெகோவாவினுடைய கடுங்கோபத்தின் நாளிலே, [QBR2] அவர்களுடைய வெள்ளியோ தங்கமோ [QBR2] அவர்களைக் காப்பாற்றமாட்டாது. அவருடைய வைராக்கியத்தின் நெருப்பினால், [QBR2] முழு உலகமும் சுட்டெரிக்கப்படும். [QBR] ஏனெனில் அவர் பூமியில் வாழும் யாவருக்கும் [QBR2] திடீரென ஒரு முடிவைக் கொண்டுவருவார். [PE]

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18

BG:

Opacity:

Color:


Size:


Font: