உன்னதப்பாட்டு 7 : 1 (OCVTA)
இளவரசனின் மகளே, பாதணி அணிந்த உன் பாதங்கள் எவ்வளவு அழகானவை! உன் தொடையின் வளைவுகள், கலைஞனின் கைவேலைப்பாடான நகைகள்போல் இருக்கின்றன.
உன்னதப்பாட்டு 7 : 2 (OCVTA)
உனது தொப்புள் ஒருபோதும் திராட்சை இரசம் குறையாத வட்டமான கிண்ணம் போன்றது. உனது வயிறோ, லில்லியினால் சூழ்ந்துள்ள கோதுமைக் குவியல் போன்றது.
உன்னதப்பாட்டு 7 : 3 (OCVTA)
உனது மார்பகங்கள் இரண்டு மான்குட்டிகள் போன்றவை, வெளிமானின் இரட்டைக்குட்டிகள் போன்றவை.
உன்னதப்பாட்டு 7 : 4 (OCVTA)
உன் கழுத்து தந்தத்தினாலான கோபுரம் போன்றது. உன் கண்கள் பத்ரபீம் வாசல் அருகேயுள்ள எஸ்போனின் குளங்களைப் போன்றவை. உன் மூக்கு தமஸ்கு பட்டணத்தை நோக்கியுள்ள லெபனோனின் கோபுரம் போன்றது.
உன்னதப்பாட்டு 7 : 5 (OCVTA)
உன் தலை கர்மேல் மலைபோல் உனக்கு முடிசூட்டுகிறது. உனது தலைமுடி அரசர்களுக்கென அலங்கரிக்கப்பட்ட இரத்தாம்பர பின்னல்போல் இருக்கிறது; அந்தப் பின்னலின் அழகில் அரசன் மயங்குகிறான்.
உன்னதப்பாட்டு 7 : 6 (OCVTA)
மகிழ்ச்சி உண்டாக்கும் என் அன்பே, நீ எவ்வளவு அழகானவள், எவ்வளவு இன்பமானவள்!
உன்னதப்பாட்டு 7 : 7 (OCVTA)
உன் உயரம் பனைமரத்தின் உயரம் போன்றது, உன் மார்பகங்கள் பழக்குலைகள் போன்றது.
உன்னதப்பாட்டு 7 : 8 (OCVTA)
“நான் அந்தப் பனைமரத்தில் ஏறுவேன்; அதின் பழத்தைப் பிடித்துக்கொள்வேன்” என்றேன். உனது மார்பகங்கள் திராட்சைக் குலைகள்போல் ஆவதாக, உன் சுவாசத்தின் வாசனை ஆப்பிள்போல் மணம் கமழ்வதாக,
உன்னதப்பாட்டு 7 : 9 (OCVTA)
உனது வாயின் முத்தங்கள் திராட்சை இரசம் போன்றது. காதலி அது உதடுகளுக்கும் பற்களுக்கும் இடையில் மெதுவாய் இறங்கும் இனிமையான திராட்சை இரசம்போல் இருக்கிறது.
உன்னதப்பாட்டு 7 : 10 (OCVTA)
நான் என் காதலருக்கே உரியவள், அவரின் ஆசை என்மேலேயே உள்ளது.
உன்னதப்பாட்டு 7 : 11 (OCVTA)
அன்பரே வாரும், நாம் வயல்வெளிக்குப் போய், நம் இரவைக் கிராமங்களில்* கிராமங்களில் என்பது மருதோன்றிகள் அல்லது காட்டுப் புதர்கள் மத்தியில் கழிப்போம்.
உன்னதப்பாட்டு 7 : 12 (OCVTA)
அதிகாலையில் எழுந்து திராட்சைத் தோட்டங்களுக்குப் போவோம்; அங்கே திராட்சை துளிர்த்திருக்கிறதா என்றும், அவைகளின் மொட்டுகள் விரிந்திருக்கின்றனவா என்றும், மாதளஞ்செடிகள் பூத்திருக்கிறதா என்றும் பார்ப்போம். அங்கே என் காதலைப் பொழிவேன்.
உன்னதப்பாட்டு 7 : 13 (OCVTA)
தூதாயீம்[† அக்கால கலாச்சாரத்தில் இந்த மூலிகை பாலுணர்வைத் தூண்டுவதாகவும் கருவுறுதலை ஊக்குவிப்பதாகவும் நம்பப்பட்டது. ஆதி. 30:14- 16 ] பழங்களின் வாசனை வீசுகின்றது, புதியதும் பழையதுமான எல்லாச் சிறந்த பழங்களும் நம் வாசலருகில் உள்ளது; என் அன்பரே, உமக்கென்றே நான் அவற்றைச் சேர்த்துவைத்தேன்.
❮
❯
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13