உன்னதப்பாட்டு 4 : 1 (OCVTA)
{காதலன் } [QS]என் அன்பே, நீ எவ்வளவு அழகானவள்! [QE][QS2]ஆ, நீ எவ்வளவு அழகானவள்; [QE][QS2]முகத்திரையின் பின்னாலுள்ள உன் கண்கள் புறாக்கண்கள்; [QE][QS]உனது தலைமுடி கீலேயாத் மலைச்சரிவில் இருந்து இறங்கிவரும் [QE][QS2]வெள்ளாட்டு மந்தையைப் போன்றது. [QE]
உன்னதப்பாட்டு 4 : 2 (OCVTA)
[QS]உன் பற்கள் முடி கத்தரிக்கப்பட்டு, [QE][QS2]குளிப்பாட்டப்பட்டுக் கரையேறுகிற செம்மறியாட்டு மந்தையைப்போல் இருக்கின்றன. [QE][QS]அவை ஒவ்வொன்றும் இரட்டைக்குட்டி ஈன்றவை, [QE][QS2]அவற்றில் எதுவும் மலடாய் அல்ல. [QE]
உன்னதப்பாட்டு 4 : 3 (OCVTA)
[QS]உன் உதடுகள் செம்பட்டு நாடா போன்றவை; [QE][QS2]உன் வாய் அழகானது. [QE][QS]உனது முகத்திரையின் பின்னால் உள்ள உன் கன்னங்கள் [QE][QS2]பிளந்த மாதுளம் பழத்திற்கு ஒப்பானவை. [QE]
உன்னதப்பாட்டு 4 : 4 (OCVTA)
[QS]உன் கழுத்து தாவீதின் கோபுரம்போல் இருக்கிறது, [QE][QS2]அடுக்கடுக்காய் ஆயிரக்கணக்கான கேடயங்கள் தொங்குகின்றன; [QE][QS]அவைகளெல்லாம் [QE][QS2]போர் வீரர்களுடைய ஆயுதங்களே. [QE]
உன்னதப்பாட்டு 4 : 5 (OCVTA)
[QS]உனது மார்பகங்கள் இரண்டு மான்குட்டிகள் போன்றவை, [QE][QS2]அவை லில்லிகள் நடுவில் மேயும் [QE][QS2]வெளிமானின் இரட்டைக்குட்டிகள் போன்றவை. [QE]
உன்னதப்பாட்டு 4 : 6 (OCVTA)
[QS]பொழுது சாய்வதற்குள், [QE][QS2]நிழல் மறைவதற்குள், [QE][QS]நான் வெள்ளைப்போள மலைக்கும், [QE][QS2]சாம்பிராணிக் குன்றுக்கும் விரைந்து செல்வேன். [QE]
உன்னதப்பாட்டு 4 : 7 (OCVTA)
[QS]என் அன்பே, நீ முற்றிலும் அழகானவள்; [QE][QS2]உன்னில் குறைபாடு எதுவும் இல்லை. [QE][PBR]
உன்னதப்பாட்டு 4 : 8 (OCVTA)
[QS]லெபனோனில் இருந்து என்னுடன் வா, என் மணமகளே, [QE][QS2]லெபனோனில் இருந்து என்னுடன் வா. [QE][QS]அமனா மலைச் சிகரத்திலிருந்தும், [QE][QS2]சேனீர் மற்றும் எர்மோன் மலை உச்சியிலிருந்தும், [QE][QS]சிங்கக் குகைகளிலிருந்தும், [QE][QS2]சிறுத்தைப் புலிகள் தங்கும் இடமான மலைகளிலிருந்தும் இறங்கி வா. [QE]
உன்னதப்பாட்டு 4 : 9 (OCVTA)
[QS]என் சகோதரியே, என் மணமகளே, நீ என் உள்ளத்தைக் கொள்ளை கொண்டாய்; [QE][QS2]உன் கண்களின் ஒரு பார்வையினாலே, [QE][QS]உன் கழுத்து மாலையின் ஒரு மணியினாலே [QE][QS2]என் உள்ளத்தைக் கொள்ளை கொண்டாய். [QE]
உன்னதப்பாட்டு 4 : 10 (OCVTA)
[QS]என் சகோதரியே, என் மணமகளே, உன் அன்பு எவ்வளவு இனிமையானது! [QE][QS2]உன் அன்பு திராட்சை இரசத்திலும் இன்பமானது; [QE][QS]உனது வாசனைத் தைலத்தின் நறுமணம் [QE][QS2]எல்லாவகை வாசனைத் தைலத்தைப் பார்க்கிலும் சிறந்தது! [QE]
உன்னதப்பாட்டு 4 : 11 (OCVTA)
[QS]என் மணமகளே, உன் உதடுகள் தேன்கூட்டைப்போல் இனிமையைப் பொழிகின்றன; [QE][QS2]உன் நாவின்கீழே பாலும் தேனும் இருக்கின்றன. [QE][QS]உன் உடைகளின் நறுமணம் [QE][QS2]லெபனோனின் நறுமணம்போல் இருக்கின்றது. [QE]
உன்னதப்பாட்டு 4 : 12 (OCVTA)
[QS]என் சகோதரியே, என் மணமகளே, நீ சுற்றி அடைக்கப்பட்ட தோட்டம், [QE][QS2]நீ பூட்டப்பட்ட நீரூற்று, முத்திரையிடப்பட்ட கிணறு. [QE]
உன்னதப்பாட்டு 4 : 13 (OCVTA)
[QS]மாதுளைத் தோட்டத்தைப்போல தளிர்த்துள்ளாய்; [QE][QS2]அங்கே சிறந்த கனிகளுண்டு, [QE][QS2]மருதோன்றிச் செடிகளும் நளதச்செடிகளும் உண்டு. [QE]
உன்னதப்பாட்டு 4 : 14 (OCVTA)
அங்கே நளதம், குங்குமம், [QE][QS2]வசம்பு, இலவங்கம், [QE][QS2]எல்லாவித நறுமண மரங்களும், [QE][QS2]வெள்ளைப்போளமும் சந்தனமும், [QE][QS2]எல்லாச் சிறந்த நறுமணச்செடிகளும் நிறைந்துள்ளது. [QE]
உன்னதப்பாட்டு 4 : 15 (OCVTA)
[QS]நீ தோட்டத்திலுள்ள நீரூற்று, [QE][QS2]ஜீவத்தண்ணீரின் கிணறு, [QE][QS2]லெபனோனிலிருந்து ஓடிவரும் நீரோடை. [QE]
உன்னதப்பாட்டு 4 : 16 (OCVTA)
{காதலி } [QS]வாடைக்காற்றே எழும்பு, [QE][QS2]தென்றல் காற்றே வா! [QE][QS]வாசனை நிரம்பிப் பரவும்படி [QE][QS2]என் தோட்டத்தில் வீசு. [QE][QS]என் காதலர் தமது தோட்டத்திற்குள் வந்து [QE][QS2]அதின் சிறந்த பழங்களைச் சுவைக்கட்டும். [QE]
❮
❯