உன்னதப்பாட்டு 2 : 1 (OCVTA)
காதலி நான்* சாரோன் சமவெளி என்பது பாலஸ்தீனத்தின் கடலோர சமவெளியில் உள்ள ஒரு பகுதி. சாரோனின் ரோஜாவும் † ரோஜாவும் அல்லது குங்குமப்பூவின் குடும்பத்தைச் சேர்ந்தது. , பள்ளத்தாக்குகளின் லில்லிப் பூவுமாய் இருக்கிறேன்.
உன்னதப்பாட்டு 2 : 2 (OCVTA)
காதலன் முட்களுக்கிடையில் லில்லிப் பூவைப்போல் கன்னியர் நடுவில் என் காதலியும் இருக்கிறாள்.
உன்னதப்பாட்டு 2 : 3 (OCVTA)
காதலி காட்டு மரங்கள் நடுவில் ஆப்பிள் மரத்தைப்போல், வாலிபர்களுக்குள் என் காதலரும் இருக்கிறார். அவருடைய நிழலில் நான் மகிழ்ந்திருந்தேன், அவருடைய கனி எனக்கு மிகவும் இனிமையாயிருந்தது.
உன்னதப்பாட்டு 2 : 4 (OCVTA)
அவர் என்னை விருந்து மண்டபத்திற்கு அழைத்துச் சென்றார்; என்மேல் அவருடைய அன்பு, கொடியாகப் பறந்தது.
உன்னதப்பாட்டு 2 : 5 (OCVTA)
உலர்ந்த திராட்சையினால் என்னைப் பெலப்படுத்துங்கள், ஆப்பிள் பழங்களினால் எனக்குப் புத்துயிர் கொடுங்கள், ஏனெனில் நான் காதலால் பலவீனமடைந்திருக்கிறேன்.
உன்னதப்பாட்டு 2 : 6 (OCVTA)
அவருடைய இடதுகை என் தலையின்கீழ் இருக்கிறது, அவருடைய வலதுகை என்னை அணைத்துக்கொள்கிறது.
உன்னதப்பாட்டு 2 : 7 (OCVTA)
எருசலேமின் மங்கையரே, கலைமான்கள்மேலும் வெளியின் பெண்மான்கள்மேலும் ஆணை! காதலைத் தட்டி எழுப்பவேண்டாம், அது தானே விரும்பும்வரை எழுப்பவேண்டாம்.
உன்னதப்பாட்டு 2 : 8 (OCVTA)
கேளுங்கள்! இதோ, என் காதலரின் குரல் கேட்கிறது! இதோ, என் காதலர் வந்துவிட்டார்! மலைகளைத் தாண்டியும், குன்றுகள்மேல் தாவியும் வருகிறார்.
உன்னதப்பாட்டு 2 : 9 (OCVTA)
என் காதலர் வெளிமானுக்கும், மரைக்குட்டிக்கும் ஒப்பாயிருக்கிறார். இதோ, அவர் எங்கள் மதிலுக்குப் பின்னே நிற்கிறார், ஜன்னல்களின் வழியாய்ப் பார்க்கிறார், கிராதியின் வழியாய் எட்டிப் பார்க்கிறார்.
உன்னதப்பாட்டு 2 : 10 (OCVTA)
என் காதலர் என்னோடு பேசி, “என் அன்பே, எழுந்திரு, என் அழகே, என்னோடு வா.
உன்னதப்பாட்டு 2 : 11 (OCVTA)
இதோ பார், குளிர்க்காலம் முடிந்துவிட்டது; மழையும் பெய்து ஓய்ந்துவிட்டது.
உன்னதப்பாட்டு 2 : 12 (OCVTA)
பூமியில் பூக்கள் பூக்கத் தொடங்கிவிட்டன; பறவைகள் பாடும் பருவம் வந்துவிட்டது, காட்டுப்புறா கூவும் சத்தமும் நம் நாட்டில் கேட்கிறது.
உன்னதப்பாட்டு 2 : 13 (OCVTA)
அத்திமரத்தில் பழங்கள் பழுத்திருக்கின்றன; திராட்சைக்கொடிகள் பூத்து நறுமணம் வீசுகின்றன. என் அன்பே, எழுந்து வா; என் அழகே, என்னோடு வா” என்று சொல்கிறார்.
உன்னதப்பாட்டு 2 : 14 (OCVTA)
காதலன் பாறைப் பிளவுகளில் மறைந்திருப்பவளே, கற்பாறை வெடிப்புகளில் தங்கும் என் புறாவே, உன் முகத்தை எனக்குக் காட்டு, உனது குரலை நான் கேட்கட்டும்; உன் குரல் இனிமையானது, உன் முகம் அழகானது.
உன்னதப்பாட்டு 2 : 15 (OCVTA)
நம்முடைய திராட்சைத் தோட்டங்கள் பூத்திருக்கின்றன, அவற்றைப் பாழாக்குகின்ற நரிகளையும் குள்ளநரிகளையும்‡ குள்ளநரிகளையும் என்பது இளம்பெண்ணின் பாசத்திற்காக போட்டியிடும் மற்ற ஆண்களைக் குறிக்கிறது. நமக்காகப் பிடியுங்கள்.
உன்னதப்பாட்டு 2 : 16 (OCVTA)
காதலி என் காதலர் என்னுடையவர், நான் அவருடையவள்; அவர் லில்லிப் பூக்களுக்கிடையில் தன் மந்தையை மேய்க்கிறார்.
உன்னதப்பாட்டு 2 : 17 (OCVTA)
என் காதலரே, பொழுது விடிவதற்குள், நிழல்கள் மறைவதற்குள் திரும்பி வாரும், குன்றுகளில் உள்ள மானைப்போலவும், மரைக்குட்டியைப் போலவும் திரும்பி வாரும்.
❮
❯
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17