வெளிபடுத்தல் 5 : 1 (OCVTA)
{ஆட்டுக்குட்டியானவர்} [PS] பின்பு அரியணையில் அமர்ந்திருப்பவரின் வலதுகையில் ஒரு புத்தகச்சுருள் இருப்பதை நான் கண்டேன். அது இரண்டு பக்கங்களிலும் எழுதப்பட்டு, ஏழு முத்திரைகளால் முத்திரையிடப்பட்டிருந்தது.
வெளிபடுத்தல் 5 : 2 (OCVTA)
அப்பொழுது ஒரு வல்லமையுள்ள தூதன், “இந்த முத்திரைகளை உடைத்து, புத்தகச்சுருளைத் திறப்பதற்குத் தகுதியுள்ளவன் யார்?” என்று உரத்த குரலில் சொல்லிக்கொள்வதை நான் கண்டேன்.
வெளிபடுத்தல் 5 : 3 (OCVTA)
ஆனால் பரலோகத்திலோ, பூமியிலோ அல்லது பூமியின்கீழோ அந்தப் புத்தகச்சுருளைத் திறப்பதற்கோ, அதன் உள்ளே இருப்பதைப் பார்ப்பதற்கோ ஒருவராலும் இயலவில்லை.
வெளிபடுத்தல் 5 : 4 (OCVTA)
அந்தப் புத்தகச்சுருளைத் திறப்பதற்கோ, அதன் உள்ளே வாசிப்பதற்கோ, தகுதியுள்ளவர்கள் எவரும் காணப்படவில்லையே என்று நான் மிகவும் அழுதேன்.
வெளிபடுத்தல் 5 : 5 (OCVTA)
அப்பொழுது அந்த சபைத்தலைவர்களில் ஒருவன் என்னிடம், “அழாதே! இதோ பார், யூதா கோத்திரத்தின் சிங்கமும், தாவீதின் வேருமாய் இருக்கிறவர், வெற்றி பெற்றிருக்கிறார். அவர் புத்தகச்சுருளையும், அதன் ஏழு முத்திரைகளையும் திறப்பதற்கு ஜெயம் பெற்றவராய் இருக்கிறார்” என்றான். [PE][PS]
வெளிபடுத்தல் 5 : 6 (OCVTA)
பின்பு நான், கொல்லப்பட்ட ஆட்டுக்குட்டியானவரைக் கண்டேன்; அவர் இப்பொழுது நான்கு உயிரினங்களாலும் அந்த இருபத்து நான்கு சபைத்தலைவர்களாலும் சூழப்பட்டு, அரியணையின் நடுவில் நின்றுகொண்டிருந்தார். அந்த ஆட்டுக்குட்டியானவருக்கு ஏழு கொம்புகளும் ஏழு கண்களும் இருந்தன. இந்த ஏழு கண்களும் பூமியெங்கும் அனுப்பப்பட்ட இறைவனுடைய ஏழு ஆவிகள்.
வெளிபடுத்தல் 5 : 7 (OCVTA)
ஆட்டுக்குட்டியானவர் வந்து, அரியணையில் அமர்ந்திருந்தவருடைய கரத்திலிருந்து அந்தப் புத்தகச்சுருளை எடுத்துக்கொண்டார்.
வெளிபடுத்தல் 5 : 8 (OCVTA)
அவர் அதை எடுத்துக்கொண்டதும் அந்த நான்கு உயிரினங்களும், அந்த இருபத்து நான்கு சபைத்தலைவர்களும் ஆட்டுக்குட்டியானவருக்கு முன்பாகக் கீழே விழுந்தார்கள். அவர்கள் ஒவ்வொருவரும் ஒரு வீணை வாத்தியத்தை வைத்திருந்தார்கள். அவர்கள் தூபம் நிறைந்த தங்கக் கிண்ணங்களையும் வைத்திருந்தார்கள்; அவை பரிசுத்தவான்களின் மன்றாட்டுகள்.
வெளிபடுத்தல் 5 : 9 (OCVTA)
அந்தச் சபைத்தலைவர்கள் ஒரு புதிய பாடலைப் பாடினார்கள்: [QBR] “நீர் அந்தப் புத்தகத்தை எடுக்கவும், [QBR2] அதன் முத்திரைகளைத் திறக்கவும் தகுதியுள்ளவர். [QBR] ஏனெனில் நீர் கொல்லப்பட்டீர். [QBR2] உம்முடைய இரத்தத்தினாலே மனிதர்களை ஒவ்வொரு பின்னணியிலிருந்தும், [QBR] ஒவ்வொரு மொழியைப் பேசுகிறவர்களிலிருந்தும், ஒவ்வொரு நாட்டு மக்களிலிருந்தும், [QBR2] ஒவ்வொரு பகுதியிலிருந்தும் இறைவனுக்கென்று விலைகொடுத்து வாங்கிக்கொண்டீர். [QBR]
வெளிபடுத்தல் 5 : 10 (OCVTA)
நீர் அவர்களை நமது இறைவனுக்கு ஊழியம் செய்யும்படி, [QBR2] ஒரு அரசாயும் ஆசாரியராயும் ஆக்கியிருக்கிறீர்; [QBR2] அவர்கள் பூமியிலே ஆளுகை செய்வார்கள்.” [PE][PS]
வெளிபடுத்தல் 5 : 11 (OCVTA)
பின்பு நான் பார்த்தேன், அப்பொழுது அநேக இறைத்தூதர்களின் குரலைக் கேட்டேன்; இறைத்தூதர்களோ, எண்ணிக்கையில் ஆயிரம் ஆயிரமாகவும், பத்தாயிரம் பத்தாயிரமாகவும் இருந்தார்கள். அவர்கள் அந்த அரியணையையும், அந்த உயிரினங்களையும், அந்த சபைத்தலைவர்களையும் சுற்றி நின்றார்கள்.
வெளிபடுத்தல் 5 : 12 (OCVTA)
அவர்கள் உரத்த குரலில்: [QBR] “கொல்லப்பட்ட ஆட்டுக்குட்டியானவர் வல்லமையையும், [QBR2] செல்வத்தையும், ஞானத்தையும், வலிமையையும், கனத்தையும், [QBR2] மகிமையையும், துதியையும் பெற்றுக்கொள்வதற்குத் தகுதியுள்ளவர்!” என்று பாடினார்கள். [PE][PS]
வெளிபடுத்தல் 5 : 13 (OCVTA)
பின்பு பரலோகத்திலும், பூமியிலும், பூமியின்கீழும், கடலிலும் உள்ள எல்லா படைப்புயிர்களும் பாடுவதைக் கேட்டேன்: [QBR] “அரியணையில் அமர்ந்திருக்கிறவருக்கும், [QBR2] ஆட்டுக்குட்டியானவருக்கும் துதியும், கனமும், மகிமையும், வல்லமையும் என்றென்றைக்கும் உண்டாவதாக!”
வெளிபடுத்தல் 5 : 14 (OCVTA)
அந்த நான்கு உயிரினங்களும், “ஆமென்” என்று சொல்ல அந்த சபைத்தலைவர்களும் பணிவுடன் விழுந்து வணங்கினார்கள். [PE]
❮
❯