சங்கீதம் 92 : 1 (OCVTA)
யெகோவாவைத் துதிப்பதும், உன்னதமானவரே, உமது பெயரைப் புகழ்ந்து பாடுவதும் நல்லது.
சங்கீதம் 92 : 2 (OCVTA)
காலையிலே உமது அன்பையும் இரவிலே உமது உண்மையையும் அறிவிப்பது நல்லது.
சங்கீதம் 92 : 3 (OCVTA)
பத்து நரம்பு வீணையின் இசையினாலும், யாழின் ஓசையினாலும் அதை அறிவிப்பது நல்லது.
சங்கீதம் 92 : 4 (OCVTA)
யெகோவாவே, நீர் உமது செயல்களினால் என்னை மகிழ்ச்சியாக்குகிறீர்; உமது கைகளின் வேலைகளினிமித்தம் நான் மகிழ்ந்து பாடுகிறேன்.
சங்கீதம் 92 : 5 (OCVTA)
யெகோவாவே, உமது செயல்கள் எவ்வளவு பெரிதானவை, உம்முடைய யோசனைகள் எவ்வளவு ஆழமானவை!
சங்கீதம் 92 : 6 (OCVTA)
உணர்வற்ற மனிதன் அறியாததும், மூடர் விளங்கிக்கொள்ளாததும் இதுவே,
சங்கீதம் 92 : 7 (OCVTA)
கொடியவர்கள் புல்லைப்போல் முளைத்தாலும், தீங்கு செய்கிறவர்கள் எல்லோரும் செழித்தாலும், என்றென்றைக்கும் அழிந்துபோவார்கள்.
சங்கீதம் 92 : 8 (OCVTA)
ஆனாலும் யெகோவாவே, நீர் என்றென்றுமாய் புகழ்ந்து உயர்த்தப்படுகிறீர்.
சங்கீதம் 92 : 9 (OCVTA)
யெகோவாவே, உமது பகைவர், நிச்சயமாகவே உம்முடைய பகைவர் அழிந்தேபோவார்கள்; தீமை செய்வோர் எல்லோருமே சிதறடிக்கப்படுவார்கள்.
சங்கீதம் 92 : 10 (OCVTA)
காட்டெருதின் பெலத்தைப்போல் நீர் என் பெலத்தை உயர்த்துவீர்; சிறந்த எண்ணெய் என்மேல் ஊற்றப்பட்டன.
சங்கீதம் 92 : 11 (OCVTA)
என் விரோதிகளின் தோல்வியைக் கண்ணாரக் கண்டேன்; என் செவிகள் என் கொடிய எதிரிகள் முறியடிக்கப்படுவதைக் காதாரக் கேட்டேன்.
சங்கீதம் 92 : 12 (OCVTA)
நீதிமான்கள் பனைமரத்தைப்போல் செழிப்பார்கள், அவர்கள் லெபனோனின் கேதுரு மரம்போல் வளர்வார்கள்;
சங்கீதம் 92 : 13 (OCVTA)
அவர்கள் யெகோவாவினுடைய வீட்டிலே நாட்டப்பட்டு, நமது இறைவனுடைய ஆலய முற்றங்களில் செழிப்பார்கள்.
சங்கீதம் 92 : 14 (OCVTA)
அவர்கள் செழுமையும் பசுமையுமாயிருந்து, தங்கள் முதிர்வயதிலும் கனி கொடுப்பார்கள்.
சங்கீதம் 92 : 15 (OCVTA)
“யெகோவா நீதியுள்ளவர்; அவரே என் கன்மலை; அவரிடத்தில் அநீதி இல்லை” என்று அவர்கள் பிரசித்தப்படுத்துவார்கள்.
❮
❯
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15