சங்கீதம் 82 : 1 (OCVTA)
மகா சபையிலே இறைவன் தலைமை வகிக்கிறார்; “கடவுள்களுக்கு” நடுவிலே அவர் தீர்ப்பு வழங்குகிறார்:
சங்கீதம் 82 : 2 (OCVTA)
“நீங்கள் எதுவரைக்கும் அநீதியான தீர்ப்பு வழங்கி, கொடியவர்களுக்குப் பாரபட்சம் காட்டுவீர்கள்?
சங்கீதம் 82 : 3 (OCVTA)
பலவீனருக்கும், தந்தையற்றோருக்கும் நீதி வழங்குங்கள்; ஏழைகளுடைய ஒடுக்கப்பட்டவர்களுடைய உரிமைகளுக்குப் பாதுகாப்பளியுங்கள்.
சங்கீதம் 82 : 4 (OCVTA)
பலவீனரையும் ஏழைகளையும் தப்புவியுங்கள்; அவர்களைக் கொடியவர்களின் கையிலிருந்து விடுவியுங்கள்.
சங்கீதம் 82 : 5 (OCVTA)
“அவர்கள் எதையும் அறியாமலும், விளங்கிக்கொள்ளாமலும் இருக்கிறார்கள்; அவர்கள் இருளிலேயே நடக்கிறார்கள்; பூமியின் அடித்தளங்கள் எல்லாம் அசைக்கப்படுகின்றன.
சங்கீதம் 82 : 6 (OCVTA)
“ ‘நீங்கள் “தெய்வங்கள்” என்றும்; நீங்கள் எல்லோருமே மகா உன்னதமானவரின் மகன்கள்’ என்றும் நான் சொன்னேன்.
சங்கீதம் 82 : 7 (OCVTA)
ஆனாலும், நீங்கள் சாதாரண மனிதர்களைப் போலவே சாவீர்கள்; மற்ற எல்லா ஆளுநர்களையும் போலவே நீங்களும் விழுவீர்கள்.”
சங்கீதம் 82 : 8 (OCVTA)
இறைவனே எழுந்தருளும், பூமியை நியாயம் தீர்த்தருளும்; ஏனெனில் எல்லா நாட்டு மக்களும் உமது உரிமைச்சொத்தே.

1 2 3 4 5 6 7 8