சங்கீதம் 77 : 1 (OCVTA)
நான் உதவிக்காக இறைவனை நோக்கி அழுதேன்; எனக்குச் செவிகொடுக்கும்படியாக நான் இறைவனை நோக்கி அழுதேன்.
சங்கீதம் 77 : 2 (OCVTA)
நான் துன்பத்தில் இருந்தபோது ஆண்டவரைத் தேடினேன்; இரவில் என் கைகளைத் தளராமல் உயர்த்தினேன், என் ஆத்துமாவோ ஆறுதலடைய மறுத்தது.
சங்கீதம் 77 : 3 (OCVTA)
இறைவனே, உம்மை நான் நினைவுகூர்ந்தேன், நான் புலம்பினேன்; நான் தியானித்தேன், என் ஆவியோ சோர்ந்துபோயிற்று.
சங்கீதம் 77 : 4 (OCVTA)
நீர் என் கண்களை மூடாதபடி தடுத்தீர்; நான் பேசமுடியாதபடி மிகவும் கஷ்டப்பட்டேன்.
சங்கீதம் 77 : 5 (OCVTA)
முந்தின நாட்களையும், கடந்துபோன வருடங்களைப்பற்றியும் நான் நினைத்தேன்;
சங்கீதம் 77 : 6 (OCVTA)
நான் இரவில் என் பாடல்களை நினைவுகூர்ந்தேன். என் இருதயம் தியானித்தது, என் ஆவியோ இப்படி விசாரணை செய்தது:
சங்கீதம் 77 : 7 (OCVTA)
“யெகோவா என்றென்றும் புறக்கணிப்பாரோ? அவர் மீண்டும் ஒருபோதும் தயவு காண்பிக்கமாட்டாரோ?
சங்கீதம் 77 : 8 (OCVTA)
அவருடைய உடன்படிக்கையின் அன்பு என்றென்றும் ஒழிந்துபோயிற்றோ? அவருடைய வாக்குத்தத்தம் தலைமுறை தலைமுறைக்கும் அற்றுப்போயிற்றோ?
சங்கீதம் 77 : 9 (OCVTA)
இறைவன் தயைசெய்ய மறந்துவிட்டாரோ? அவர் தமது கோபத்தில் இரக்கங்காட்ட மறுத்துவிட்டாரோ?”
சங்கீதம் 77 : 10 (OCVTA)
அப்பொழுது நான்: “மகா உன்னதமானவரின் வலதுகரம், எனக்காக செயலாற்றுகிறது,
சங்கீதம் 77 : 11 (OCVTA)
யெகோவாவின் செயல்களை நான் நினைவுகூருவேன்; ஆம், முற்காலத்தில் நீர் செய்த அற்புதங்களை நான் நினைவிற்கொள்வேன்.
சங்கீதம் 77 : 12 (OCVTA)
உமது செய்கைகளையெல்லாம் நான் தியானிப்பேன்; உமது வல்லமையான செயல்களை நான் சிந்திப்பேன்” என்றேன்.
சங்கீதம் 77 : 13 (OCVTA)
இறைவனே, உமது வழிகள் பரிசுத்தமானவை; நம்முடைய இறைவனைப்போல் பெரிய தெய்வம் யார்?
சங்கீதம் 77 : 14 (OCVTA)
அற்புதங்களைச் செய்கிற இறைவன் நீரே; நீர் மக்கள் மத்தியில் உமது வல்லமையை வெளிப்படுத்துகிறீர்.
சங்கீதம் 77 : 15 (OCVTA)
உமது வல்லமையுள்ள புயத்தினால் யாக்கோபு, யோசேப்பு ஆகியோரின் சந்ததியான உமது மக்களை நீர் மீட்டுக்கொண்டீர்.
சங்கீதம் 77 : 16 (OCVTA)
இறைவனே, சமுத்திரம் உம்மைக் கண்டது, சமுத்திரம் உம்மைக் கண்டு தத்தளித்தது; மகா ஆழங்களும் நடுங்கின.
சங்கீதம் 77 : 17 (OCVTA)
மேகங்கள் தண்ணீரைப் பொழிந்தன, ஆகாயங்கள் முழங்கி அதிர்ந்தன; உமது அம்புகள் அங்கும் இங்கும் மின்னிப் பாய்ந்தன.
சங்கீதம் 77 : 18 (OCVTA)
உமது இடியொலி சுழற்காற்றில் கேட்டது, உமது மின்னல் உலகத்திற்கு வெளிச்சம் கொடுத்தது; பூமி நடுங்கி அதிர்ந்தது.
சங்கீதம் 77 : 19 (OCVTA)
உமது பாதை கடலிலும், உமது வழி பெருவெள்ளத்திலும் இருந்தது; ஆனாலும் உமது அடிச்சுவடுகள் காணப்படவில்லை.
சங்கீதம் 77 : 20 (OCVTA)
மோசே, ஆரோன் என்பவர்களுடைய கையினால் நீர் உமது மக்களை ஒரு மந்தையைப்போல் நடத்தினீர்.

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20