சங்கீதம் 76 : 1 (OCVTA)
யூதாவில் இறைவன் அறியப்பட்டிருக்கிறார்; இஸ்ரயேலில் அவருடைய பெயர் பெரியது.
சங்கீதம் 76 : 2 (OCVTA)
அவருடைய கூடாரம் சாலேமில்* சாலேமில் என்பதற்கு இதற்கு இன்னொரு பெயர் எருசலேம். இருக்கிறது; அவருடைய தங்குமிடம் சீயோனில் இருக்கிறது.
சங்கீதம் 76 : 3 (OCVTA)
அங்கே அவர் தீப்பிழம்போடு பாயும் அம்புகளையும், கேடயங்களையும், வாள்களையும், போராயுதங்களையும் உடைத்தார்.
சங்கீதம் 76 : 4 (OCVTA)
நீர் ஒளியுள்ளவராய்த் துலங்குகிறீர்; வேட்டையாடும் மலைகளைப் பார்க்கிலும் அதிக கம்பீரமுடையவராய் இருக்கிறீர்.
சங்கீதம் 76 : 5 (OCVTA)
வீரமுள்ள மனிதர் கொள்ளையிடப்பட்டு, அவர்கள் மரண நித்திரை அடைந்தார்கள்; போர்வீரரில் ஒருவனும் தன் கைகளை உயர்த்த முடியாமலிருக்கிறான்.
சங்கீதம் 76 : 6 (OCVTA)
யாக்கோபின் இறைவனே, உமது கோபத்தில் குதிரை, தேர் இரண்டுமே செயலிழந்து கிடக்கின்றன.
சங்கீதம் 76 : 7 (OCVTA)
நீரே, நீர் ஒருவருரே பயப்படத்தக்கவர்; நீர் கோபமாய் இருக்கும்போது உம்முன் யாரால் நிற்கமுடியும்?
சங்கீதம் 76 : 8 (OCVTA)
நீர் வானத்திலிருந்து நியாயத்தீர்ப்பை வழங்கினீர்; பூமி பயந்து அமைதியாய் இருந்தது.
சங்கீதம் 76 : 9 (OCVTA)
இறைவனே, நாட்டில் துன்புற்ற யாவரையும் காப்பாற்றுவதற்காக நீர் எழுந்தபோதே, அந்த நியாயத்தீர்ப்பை வழங்கினீர்.
சங்கீதம் 76 : 10 (OCVTA)
நிச்சயமாகவே, மனிதருக்கு விரோதமான உமது கோபம் உமக்குத் துதியைக் கொண்டுவருகிறது; உமது கடுங்கோபத்திற்குத் தப்பி மீந்தவர்களை நீர் அடக்குவீர்.
சங்கீதம் 76 : 11 (OCVTA)
உங்கள் யெகோவாவாகிய இறைவனுக்கு நேர்த்திக் கடன்களைச் செய்து, அவைகளை நிறைவேற்றுங்கள். அவரைச் சுற்றியிருக்கிற நாடுகளெல்லாம் பயப்படத்தக்கவரான அவருக்கே அன்பளிப்புகளைக் கொண்டுவரட்டும்.
சங்கீதம் 76 : 12 (OCVTA)
அவர் ஆளுநர்களின் ஆவியை நொறுக்குகிறார்; பூமியின் அரசர்கள் அவருக்குப் பயப்படுகிறார்கள்.
❮
❯
1
2
3
4
5
6
7
8
9
10
11
12