சங்கீதம் 66 : 1 (OCVTA)
பூமியிலுள்ளவர்களே, நீங்கள் எல்லோரும் சந்தோஷத்துடன் [QBR2] இறைவனை ஆர்ப்பரித்துத் துதியுங்கள்! [QBR]
சங்கீதம் 66 : 2 (OCVTA)
அவருடைய பெயரின் மகிமையைப் பாடுங்கள்; [QBR2] அவருடைய துதியை மகிமையுள்ளதாக்குங்கள். [QBR]
சங்கீதம் 66 : 3 (OCVTA)
இறைவனிடம் சொல்லுங்கள், “உமது செயல்கள் எவ்வளவு பிரமிக்கத்தக்கவை! [QBR2] உமது வல்லமை பெரிதானது; [QBR2] அதினால் பகைவர்கள் உமக்கு வஞ்சகம் பேசி அடங்குவார்கள். [QBR]
சங்கீதம் 66 : 4 (OCVTA)
பூமியிலுள்ள அனைவரும் உம்மைப் பணிந்து வழிபடுகிறார்கள்; [QBR2] அவர்கள் உமக்குத் துதி பாடுகிறார்கள், [QBR2] அவர்கள் உமது பெயருக்குத் துதி பாடுகிறார்கள்.”
சங்கீதம் 66 : 5 (OCVTA)
இறைவன் செய்துள்ளவற்றை வந்து பாருங்கள்; [QBR2] மனிதரிடையே அவர் செய்யும் செயல்கள் எவ்வளவு பயப்படத்தக்கவை. [QBR]
சங்கீதம் 66 : 6 (OCVTA)
அவர் கடலை வறண்ட நிலமாக மாற்றினார்; [QBR2] மக்கள் கால்நடையாய் தண்ணீரைக் கடந்தார்கள்; [QBR2] வாருங்கள், அவரில் களிகூருவோம். [QBR]
சங்கீதம் 66 : 7 (OCVTA)
அவர் தமது வல்லமையினால் என்றென்றைக்கும் அரசாளுகிறார்; [QBR2] அவருடைய கண்கள் நாடுகளைக் கவனித்துப் பார்த்துக் கொண்டிருக்கின்றன; [QBR2] கலகக்காரர் அவருக்கு எதிராக எழும்பாதிருக்கட்டும்.
சங்கீதம் 66 : 8 (OCVTA)
எல்லா மக்களும், நம்முடைய இறைவனைத் துதியுங்கள்; [QBR2] அவரைத் துதிக்கும் சத்தம் கேட்கப்படுவதாக. [QBR]
சங்கீதம் 66 : 9 (OCVTA)
அவர் நம்முடைய உயிர்களைப் பாதுகாத்திருக்கிறார்; [QBR2] நம்முடைய பாதங்கள் சறுக்கிவிடாதபடி காத்துக்கொள்கிறார். [QBR]
சங்கீதம் 66 : 10 (OCVTA)
இறைவனே, நீர் எங்களைச் சோதித்துப் பார்த்தீர்; [QBR2] வெள்ளியைப்போல் எங்களைப் புடமிட்டுச் சுத்திகரித்தீர். [QBR]
சங்கீதம் 66 : 11 (OCVTA)
எங்களைச் சிறைபிடித்து, [QBR2] எங்கள் முதுகுகளில் பாரங்களை சுமத்தினீர். [QBR]
சங்கீதம் 66 : 12 (OCVTA)
மனிதரை எங்கள் தலையின்மேல் ஏறிப்போகச் செய்தீர்; [QBR2] நாங்கள் நெருப்பையும் தண்ணீரையும் கடந்துசென்றோம், [QBR2] ஆனால் நீர் எங்களைச் செழிப்பான இடத்திற்கு கொண்டுவந்தீர்.
சங்கீதம் 66 : 13 (OCVTA)
நான் தகன காணிக்கைகளுடன் உமது ஆலயத்திற்கு வருவேன்; [QBR2] எனது நேர்த்திக் கடன்களை நிறைவேற்றுவேன். [QBR]
சங்கீதம் 66 : 14 (OCVTA)
நான் துன்பத்திலிருந்தபோது [QBR2] என் உதடுகளைத் திறந்து, என் வாயினால் சொன்ன நேர்த்திக் கடன்களைச் செய்வேன். [QBR]
சங்கீதம் 66 : 15 (OCVTA)
நான் கொழுத்த மிருகங்களையும் [QBR2] செம்மறியாட்டுக் கடாக்களையும் உமக்குப் பலியிடுவேன்; [QBR2] நான் எருதுகளையும் வெள்ளாடுகளையும் காணிக்கையாகச் செலுத்துவேன்.
சங்கீதம் 66 : 16 (OCVTA)
இறைவனுக்குப் பயப்படுகிறவர்களே, நீங்கள் எல்லோரும் வந்து, செவிகொடுங்கள்; [QBR2] அவர் எனக்குச் செய்தவற்றை நான் உங்களுக்குச் சொல்ல விரும்புகிறேன். [QBR]
சங்கீதம் 66 : 17 (OCVTA)
நான் என் வாயினால் அவரைச் சத்தமிட்டுக் கூப்பிட்டேன்; [QBR2] அவருடைய துதி என் நாவில் இருந்தது. [QBR]
சங்கீதம் 66 : 18 (OCVTA)
என் இருதயத்தில் பாவத்திற்கு இடமளித்திருந்தால், [QBR2] யெகோவா எனக்குச் செவிகொடுக்கமாட்டார்; [QBR]
சங்கீதம் 66 : 19 (OCVTA)
இறைவனோ நிச்சயமாய் எனக்குச் செவிகொடுத்து, [QBR2] என் மன்றாட்டின் குரலைக் கேட்டார். [QBR]
சங்கீதம் 66 : 20 (OCVTA)
என் மன்றாட்டைத் தள்ளிவிடாமல், [QBR2] என்னிடமிருந்து தமது உடன்படிக்கையின் அன்பை விலக்காமலிருந்த [QBR2] இறைவனுக்குத் துதி உண்டாகட்டும். [PE]

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20

BG:

Opacity:

Color:


Size:


Font: