சங்கீதம் 59 : 1 (OCVTA)
இறைவனே, பகைவர்களிடமிருந்து என்னை விடுவியும்; எனக்கெதிராக எழும்புகிறவர்களிடமிருந்து என்னைக் காத்துக்கொள்ளும்.
சங்கீதம் 59 : 2 (OCVTA)
தீமை செய்கிறவர்களிடமிருந்து என்னை விடுவியும்; என்னைக் கொல்ல முயற்சிக்கும் வெறியர்களிடமிருந்து என்னைக் காப்பாற்றும்.
சங்கீதம் 59 : 3 (OCVTA)
அவர்கள் எப்படி எனக்காகப் பதுங்கிக் காத்திருக்கிறார்கள் என்று பாரும்! யெகோவாவே, நான் குற்றமோ பாவமோ செய்யாதிருக்க, சிலர் பயங்கரமானச் சதியை எனக்கெதிராகச் செய்கிறார்கள்.
சங்கீதம் 59 : 4 (OCVTA)
நான் ஒரு தவறும் செய்யவில்லை; இருந்தும் என்னைத் தாக்குவதற்கு அவர்கள் ஆயத்தமாயிருக்கிறார்கள். எனக்கு உதவிசெய்ய எழுந்தருளும்; எனது நிலைமையைப் பாரும்!
சங்கீதம் 59 : 5 (OCVTA)
சேனைகளின் இறைவனாகிய யெகோவாவே, இஸ்ரயேலின் இறைவனே, இந்த எல்லா மக்களையும் தண்டிப்பதற்காக எழுந்தருளும்; கொடுமையான துரோகிகளுக்கு இரக்கம் காட்டாதிரும்.
சங்கீதம் 59 : 6 (OCVTA)
மாலையிலே அவர்கள் நாய்களைப்போல் குரைத்துக்கொண்டு திரும்பிவருகிறார்கள்; நகரத்தைச் சுற்றித் திரிகிறார்கள்.
சங்கீதம் 59 : 7 (OCVTA)
அவர்கள் வாய் திறந்து என்னத்தைப் பேசுகிறார்கள் என்று பாரும்; அவர்கள் தங்கள் உதடுகளிலிருந்து வரும் வார்த்தைகள் வாள் போன்றவை, அவர்கள், “நாங்கள் சொல்வதை கேட்கிறவர் யார்?” என்று கூறுகிறார்கள்.
சங்கீதம் 59 : 8 (OCVTA)
ஆனால் யெகோவாவே, நீரோ அவர்களைப் பார்த்துச் சிரிக்கிறீர்; அவர்களைப் பார்த்து ஏளனம் செய்கிறீர்.
சங்கீதம் 59 : 9 (OCVTA)
நீர் என் பெலன், உமக்காக நான் காத்திருக்கிறேன்; இறைவனே, நீரே என் கோட்டை,
சங்கீதம் 59 : 10 (OCVTA)
நான் சார்ந்திருக்கும் இறைவன். தமது உடன்படிக்கையின் அன்பினால் என்னைச் சந்திப்பார். என் பகைவர்களின் வீழ்ச்சியை பார்க்கும்படி செய்வார்.
சங்கீதம் 59 : 11 (OCVTA)
எங்கள் கேடயமான யெகோவாவே, அவர்களை ஒரேயடியாய் அழிக்கவேண்டாம்; அப்படியானால், என் மக்கள் அதைப்பற்றி மறந்துவிடுவார்கள். உமது வல்லமையினால் நிலையற்றவர்களாக்கி, அவர்களைத் தாழ்த்திவிடும்.
சங்கீதம் 59 : 12 (OCVTA)
அவர்களுடைய உதடுகளின் பேச்சு, அவர்களுடைய வாயின் பாவமாயிருக்கிறது; அவர்கள் சொல்லும் சாபமும் பொய்யும், அவர்களை பெருமையில் சிக்கவைப்பதாக.
சங்கீதம் 59 : 13 (OCVTA)
உமது கோபத்தால் அவர்களை தண்டித்துவிடும்; அவர்கள் இல்லாமல் போகும்வரை அவர்களை தண்டித்துவிடும். அப்பொழுது இறைவன், யாக்கோபின்மேல் ஆளுகை செய்கிறார் என்று பூமியின் எல்லைகள்வரை எல்லோரும் அறிந்துகொள்வார்கள்.
சங்கீதம் 59 : 14 (OCVTA)
மாலையிலே அவர்கள் நாய்களைப்போல் குரைத்துக்கொண்டு திரும்பிவருகிறார்கள்; நகரத்தைச் சுற்றித் திரிகிறார்கள்.
சங்கீதம் 59 : 15 (OCVTA)
உணவுக்காக அவர்கள் அலைந்து திரிகிறார்கள்; திருப்தியடையாவிட்டால் முறுமுறுத்துக் கொண்டே இரவைக் கடக்கிறார்கள்.
சங்கீதம் 59 : 16 (OCVTA)
ஆனால் நானோ, உமது பெலனைக் குறித்துப் பாடுவேன்; காலையிலே உமது உடன்படிக்கையின் அன்பை குறித்துப் பாடுவேன்; ஏனெனில் நீரே எனது கோட்டையும் துன்பகாலங்களில் என் புகலிடமுமாய் இருக்கிறீர்.
சங்கீதம் 59 : 17 (OCVTA)
என் பெலனே, நான் உமக்குத் துதி பாடுவேன்; இறைவனே, நீரே என் கோட்டையும், என் அன்பான இறைவனுமாயிருக்கிறீர்.
❮
❯
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17