சங்கீதம் 50 : 1 (OCVTA)
வல்லமையுள்ள இறைவனாகிய யெகோவா பேசுகிறார், [QBR2] அவர் சூரியன் உதிக்கும் இடத்திலிருந்து, [QBR2] அது மறையும் இடம் வரையுமுள்ள முழு உலகத்தையும் அழைக்கிறார். [QBR]
சங்கீதம் 50 : 2 (OCVTA)
பூரண அழகுள்ள சீயோனிலிருந்து [QBR2] இறைவன் பிரகாசிக்கிறார். [QBR]
சங்கீதம் 50 : 3 (OCVTA)
நம்முடைய இறைவன் வருகிறார், [QBR2] அவர் மவுனமாய் இருக்கமாட்டார்; [QBR] அவருக்கு முன்னாக நெருப்பு சுட்டெரித்துச் செல்கிறது; [QBR2] அவரைச் சுற்றிப் புயல் சீற்றத்துடன் வீசுகிறது. [QBR]
சங்கீதம் 50 : 4 (OCVTA)
அவர் தமது மக்களை நியாயந்தீர்க்கும்படியாக, [QBR2] மேலேயுள்ள வானங்களையும் பூமியையும் அழைத்துச் சொல்கிறார்: [QBR]
சங்கீதம் 50 : 5 (OCVTA)
“பலியினால் என்னுடன் உடன்படிக்கை செய்த, [QBR2] பரிசுத்தவான்களை ஒன்றுகூட்டுங்கள்.” [QBR]
சங்கீதம் 50 : 6 (OCVTA)
வானங்கள் அவருடைய நீதியை அறிவிக்கின்றன; [QBR2] அவர் நியாதிபதியாகிய இறைவன்.
சங்கீதம் 50 : 7 (OCVTA)
“என் மக்களே, கேளுங்கள், நான் பேசுவேன்; [QBR2] இஸ்ரயேலே, நான் உனக்கு விரோதமாகச் சாட்சி கூறுவேன்: [QBR2] நான் இறைவன், நானே உங்கள் இறைவன். [QBR]
சங்கீதம் 50 : 8 (OCVTA)
எப்பொழுதும் எனக்கு முன்பாக இருக்கும் உங்கள் பலிகளுக்காகவோ, [QBR2] அல்லது உங்கள் தகன காணிக்கைகளுக்காகவோ நான் உங்களைக் கண்டிக்கவில்லை. [QBR]
சங்கீதம் 50 : 9 (OCVTA)
உங்கள் வீட்டிலிலுள்ள காளைகளோ, [QBR2] உங்கள் தொழுவத்திலுள்ள வெள்ளாடுகளோ எனக்கு வேண்டியதில்லை. [QBR]
சங்கீதம் 50 : 10 (OCVTA)
ஏனெனில் காட்டிலுள்ள எல்லா மிருகங்களும் [QBR2] ஆயிரக்கணக்கான குன்றுகளிலுள்ள ஆடுமாடுகளும் என்னுடையவைகள். [QBR]
சங்கீதம் 50 : 11 (OCVTA)
மலைகளிலுள்ள ஒவ்வொரு பறவையையும் நான் அறிவேன்; [QBR2] வயல்வெளிகளிலுள்ள உயிரினங்களும் என்னுடையவைகள். [QBR]
சங்கீதம் 50 : 12 (OCVTA)
நான் பசியாயிருந்தால் உங்களிடம் சொல்லமாட்டேன்; [QBR2] ஏனெனில் உலகமும் அதிலுள்ள யாவும் என்னுடையவைகள். [QBR]
சங்கீதம் 50 : 13 (OCVTA)
நான் காளைகளின் இறைச்சியை உண்டு, [QBR2] ஆட்டுக்கடாக்களின் இரத்தத்தைக் குடிப்பேனோ?
சங்கீதம் 50 : 14 (OCVTA)
“நீங்கள் இறைவனாகிய எனக்கு உங்கள் நன்றிக் காணிக்கைகளைப் பலியிடுங்கள்; [QBR2] மகா உன்னதமான இறைவனாகிய எனக்கு உங்கள் நேர்த்திக் கடன்களை நிறைவேற்றுங்கள். [QBR]
சங்கீதம் 50 : 15 (OCVTA)
துன்ப நாளில் என்னை நோக்கி மன்றாடிக் கூப்பிடுங்கள், [QBR2] நான் உங்களை விடுவிப்பேன்; நீங்கள் என்னை மகிமைப்படுத்துவீர்கள்.” [PE][PS]
சங்கீதம் 50 : 16 (OCVTA)
கொடியவர்களுக்கு இறைவன் சொல்கிறதாவது: [QBR] “என் சட்டங்களைக் கூறுவதற்கும், [QBR2] என் உடன்படிக்கையை உங்கள் உதடுகளினால் உச்சரிப்பதற்கும் [QBR2] உங்களுக்கு என்ன உரிமை இருக்கிறது? [QBR]
சங்கீதம் 50 : 17 (OCVTA)
என்னுடைய அறிவுறுத்தலை வெறுத்து, [QBR2] என் வார்த்தைகளை உங்களுக்குப் பின்னாக எறிந்துவிடுகிறீர்கள். [QBR]
சங்கீதம் 50 : 18 (OCVTA)
நீங்கள் திருடனைக் காணும்போது அவனோடு சேர்ந்துகொள்கிறீர்கள்; [QBR2] விபசாரக்காரருடனும் நீங்கள் பங்குகொள்கிறீர்கள். [QBR]
சங்கீதம் 50 : 19 (OCVTA)
நீங்கள் உங்கள் வாயைத் தீமைக்காக பயன்படுத்துகிறீர்கள்; [QBR2] உங்கள் நாவை வஞ்சகத்தைப் பேசப் பயன்படுத்துகிறீர்கள். [QBR]
சங்கீதம் 50 : 20 (OCVTA)
நீங்கள் உங்கள் சகோதரனுக்கு விரோதமாய்ப் பேசுகிறீர்கள்; [QBR2] இடைவிடாமல் உங்கள் சகோதரனையே தூற்றுகிறீர்கள். [QBR]
சங்கீதம் 50 : 21 (OCVTA)
இவற்றை நீங்கள் செய்தபோது நான் மவுனமாய் இருந்தேன்; [QBR2] நானும் உங்களைப்போலவே இருப்பேன் என்று நினைத்தீர்கள். [QBR] ஆனால் நான் உங்களைக் கடிந்துகொண்டு, [QBR2] உங்கள் கண்களுக்கு முன்பாகவே உங்களைக் குற்றஞ்சாட்டுவேன்.
சங்கீதம் 50 : 22 (OCVTA)
“இறைவனை மறக்கிறவர்களே, இதைக் கவனியுங்கள்; [QBR2] இல்லாவிட்டால் நான் உங்களை முற்றிலும் தண்டித்துப் போடுவேன்; [QBR2] ஒருவரும் உங்களைத் தப்புவிக்கமாட்டார்கள். [QBR]
சங்கீதம் 50 : 23 (OCVTA)
நன்றி பலியைச் செலுத்துகிறவன் என்னைக் கனம்பண்ணுகிறான்; [QBR2] இறைவனாகிய என் இரட்சிப்பை நான் குற்றமற்றவனுக்குக் காண்பிப்பேன்.” [PE]

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23

BG:

Opacity:

Color:


Size:


Font: