சங்கீதம் 47 : 1 (OCVTA)
நாடுகளே, நீங்கள் எல்லோரும் உங்கள் கைகளைத் தட்டுங்கள்; மகிழ்ச்சியின் சத்தத்துடன் ஆர்ப்பரித்து இறைவனைத் துதியுங்கள்.
சங்கீதம் 47 : 2 (OCVTA)
உன்னதமானவராகிய யெகோவா அச்சத்திற்கு உரியவர், அவர் பூமி முழுவதற்கும் மகா அரசர்.
சங்கீதம் 47 : 3 (OCVTA)
அவர் மக்களை நமக்குக் கீழ்ப்படுத்தினார், மக்கள் கூட்டத்தை நம்முடைய பாதங்களுக்குக் கீழ்ப்படுத்தினார்.
சங்கீதம் 47 : 4 (OCVTA)
இறைவன் தமக்கு அன்பான யாக்கோபியரை, தமது உரிமைச்சொத்தாக தேர்ந்தெடுப்பார்.
சங்கீதம் 47 : 5 (OCVTA)
இறைவன் மகிழ்ச்சியின் ஆரவாரத்தின் மத்தியில் எழுந்தருளினார்; யெகோவா எக்காள சத்தத்தோடும் உயர்த்தப்பட்டிருக்கிறார்.
சங்கீதம் 47 : 6 (OCVTA)
இறைவனுக்குத் துதிகளைப் பாடுங்கள், துதிகளைப் பாடுங்கள்; நமது அரசருக்குத் துதிகளைப் பாடுங்கள், துதிகளைப் பாடுங்கள்.
சங்கீதம் 47 : 7 (OCVTA)
ஏனெனில் இறைவனே பூமி முழுவதற்கும் அரசராய் இருக்கிறார்; அவருக்குத் துதியின் சங்கீதத்தைப் பாடுங்கள்.
சங்கீதம் 47 : 8 (OCVTA)
இறைவன் நாடுகளுக்கு மேலாக ஆளுகை செய்கிறார்; அவர் தமது பரிசுத்த சிங்காசனத்தின்மேல் அமர்ந்திருக்கிறார்.
சங்கீதம் 47 : 9 (OCVTA)
மக்களின் தலைவர்கள், ஆபிரகாமின் இறைவனுடைய மக்களாக ஒன்றுகூடுகிறார்கள். ஏனெனில் பூமியின் அரசர்கள் இறைவனுக்கே உரியவர்கள்; அவர் மிகவும் புகழ்ந்து உயர்த்தப்பட்டிருக்கிறார்.

1 2 3 4 5 6 7 8 9