சங்கீதம் 42 : 1 (OCVTA)
மான் நீரோடைகளைத் தேடி ஏங்குவது போல், [QBR2] இறைவனே என் ஆத்துமா உம்மைத் தேடி ஏங்குகிறது. [QBR]
சங்கீதம் 42 : 2 (OCVTA)
என் ஆத்துமா இறைவனுக்காக, உயிருள்ள இறைவனுக்காக தாகம் கொள்கிறது; [QBR2] நான் எப்பொழுது இறைவனுடைய சமுகத்தில் வந்து நிற்பேன்? [QBR]
சங்கீதம் 42 : 3 (OCVTA)
மனிதர்களோ நாள்முழுதும் என்னைப் பார்த்து, [QBR2] “உன் இறைவன் எங்கே?” என்று கேட்பதால், [QBR] இரவும் பகலும் [QBR2] என் கண்ணீரே எனக்கு உணவாயிற்று. [QBR]
சங்கீதம் 42 : 4 (OCVTA)
என் ஆத்துமா எனக்குள் உருகுகையில் [QBR2] இவைகள் என் நினைவுக்கு வருகின்றன: [QBR] முந்திய நாட்களில் நான் மக்கள் கூட்டத்துடன் சேர்ந்து, [QBR2] இறைவனின் வீட்டிற்கு அவர்களோடு ஊர்வலமாய் நடந்து சென்றேன்; [QBR] பண்டிகை கொண்டாடும் மக்கள் கூட்டத்தின் நடுவே, [QBR2] மகிழ்ச்சியின் சத்தத்தோடும் துதியின் சத்தத்தோடும் நடந்து சென்றேன்.
சங்கீதம் 42 : 5 (OCVTA)
என் ஆத்துமாவே, நீ ஏன் சோர்ந்து போகிறாய்? [QBR2] ஏன் இவ்விதமாய் எனக்குள் கலங்கியிருக்கிறாய்? [QBR] இறைவனில் உன் எதிர்பார்ப்பை வைத்திரு; [QBR2] நான் என் இறைவனின் இரட்சிப்பிற்காக [QBR2] இன்னும் அவரைத் துதிப்பேன்.
சங்கீதம் 42 : 6 (OCVTA)
என் இறைவனே, என் ஆத்துமா எனக்குள் சோர்ந்துபோகிறது; [QBR2] அதினால் நான் எர்மோன் மலைகள் இருக்கும் [QBR] யோர்தான் நதி தொடங்கும் நாட்டிலிருந்தும், [QBR2] மீசார் மலையிலிருந்தும் உம்மை நினைவுகூருவேன். [QBR]
சங்கீதம் 42 : 7 (OCVTA)
உமது அருவிகளின் இரைச்சலினால் [QBR2] ஆழம் ஆழத்தைக் கூப்பிடுகிறது; [QBR] உம்முடைய எல்லா அலைகளும், [QBR2] பேரலைகளும் எனக்கு மேலாக மோதிச் செல்கின்றன.
சங்கீதம் 42 : 8 (OCVTA)
பகலில் யெகோவா தமது உடன்படிக்கையின் அன்பை எனக்குக் கொடுக்கிறார்; [QBR2] இரவிலோ, அவருடைய பாடல் என்னோடு இருக்கிறது; [QBR2] என் வாழ்வின் இறைவனை நோக்கிய மன்றாட்டாகவே அது இருக்கிறது.
சங்கீதம் 42 : 9 (OCVTA)
நான் என் கன்மலையாகிய இறைவனிடம், [QBR2] “நீர் ஏன் என்னை மறந்து விட்டீர்? [QBR] பகைவனால் ஒடுக்கப்பட்டு [QBR2] நான் ஏன் துக்கத்துடன் திரியவேண்டும்?” என்கிறேன். [QBR]
சங்கீதம் 42 : 10 (OCVTA)
நாளெல்லாம் என் பகைவர்கள் என்னைப் பார்த்து, [QBR2] “உன் இறைவன் எங்கே?” [QBR] என்று என்னைப் நிந்திப்பதால், [QBR2] என் எலும்புகள் சாவுக்கேதுவான வேதனையை அடைகின்றன.
சங்கீதம் 42 : 11 (OCVTA)
என் ஆத்துமாவே, நீ ஏன் சோர்ந்து போகிறாய்? [QBR2] நீ ஏன் இவ்விதமாய் எனக்குள் கலங்கியிருக்கிறாய்? [QBR] இறைவனில் உன் எதிர்பார்ப்பை வைத்திரு; [QBR2] நான் என் இறைவனின் இரட்சிப்பிற்காக [QBR2] இன்னும் அவரைத் துதிப்பேன். [PE]
❮
❯