சங்கீதம் 34 : 1 (OCVTA)
யெகோவாவை நான் எவ்வேளையிலும் புகழ்ந்து உயர்த்துவேன்; [QBR2] அவருக்குரிய துதி எப்பொழுதும் என் உதடுகளில் இருக்கும். [QBR]
சங்கீதம் 34 : 2 (OCVTA)
நான் யெகோவாவுக்குள் மகிமைப்படுவேன்; [QBR2] ஒடுக்கப்பட்டோர் இதைக் கேட்டு மகிழட்டும். [QBR]
சங்கீதம் 34 : 3 (OCVTA)
என்னோடு சேர்ந்து யெகோவாவை மகிமைப்படுத்துங்கள்; [QBR2] நாம் ஒன்றுகூடி அவருடைய பெயரைப் புகழ்ந்து உயர்த்துவோம்.
சங்கீதம் 34 : 4 (OCVTA)
நான் யெகோவாவிடம் உதவி தேடினேன்; அவர் எனக்குப் பதில் தந்தார்; [QBR2] அவர் என்னுடைய எல்லாப் பயத்திலிருந்தும் என்னை விடுவித்தார். [QBR]
சங்கீதம் 34 : 5 (OCVTA)
அவரை நோக்கிப் பார்க்கிறவர்கள் பிரகாசமாய் இருக்கிறார்கள்; [QBR2] அவர்களுடைய முகங்கள் ஒருபோதும் வெட்கப்படுவதில்லை. [QBR]
சங்கீதம் 34 : 6 (OCVTA)
இந்த ஏழை கூப்பிட்டான், யெகோவா செவிகொடுத்து; [QBR2] அவனை அவனுடைய எல்லாப் பிரச்சனைகளிலிருந்தும் காப்பாற்றினார். [QBR]
சங்கீதம் 34 : 7 (OCVTA)
அவருக்குப் பயந்து நடக்கிறவர்களைச் சுற்றிலும் [QBR2] யெகோவாவின் தூதன் முகாமிட்டு அவர்களை விடுவிக்கிறார்.
சங்கீதம் 34 : 8 (OCVTA)
யெகோவா நல்லவர் என்பதை ருசித்துப்பாருங்கள்; [QBR2] அவரிடத்தில் தஞ்சமடைகிறவர்கள் ஆசீர்வதிக்கப்படுவார்கள். [QBR]
சங்கீதம் 34 : 9 (OCVTA)
யெகோவாவினுடைய பரிசுத்தவான்களே, நீங்கள் அவருக்குப் பயந்து நடங்கள்; [QBR2] ஏனெனில் அவருக்குப் பயந்து நடப்பவர்களுக்கு எவ்விதக் குறைவும் ஏற்படுவதில்லை. [QBR]
சங்கீதம் 34 : 10 (OCVTA)
இளம் சிங்கங்கள் பெலமிழந்து பசியாயிருக்கலாம்; [QBR2] ஆனால் யெகோவாவைத் தேடுகிறவர்களுக்கோ ஒரு நன்மையும் குறைவுபடுவதில்லை. [QBR]
சங்கீதம் 34 : 11 (OCVTA)
என் பிள்ளைகளே, வாருங்கள்; வந்து எனக்குச் செவிகொடுங்கள்; [QBR2] யெகோவாவுக்குப் பயந்து நடப்பதைக் குறித்து நான் உங்களுக்குப் போதிப்பேன். [QBR]
சங்கீதம் 34 : 12 (OCVTA)
உங்களில் யாராவது வாழ்வை நேசித்து [QBR2] அநேக நல்ல நாட்களைக் காண விரும்பினால், [QBR]
சங்கீதம் 34 : 13 (OCVTA)
நீங்கள் உங்கள் நாவை தீமையைப் பேசுவதிலிருந்து விலக்கி, [QBR2] உங்கள் உதடுகளைப் பொய்ப் பேசுவதிலிருந்து காத்துக்கொள்ளுங்கள். [QBR]
சங்கீதம் 34 : 14 (OCVTA)
தீமையைவிட்டு விலகி, நன்மையைச் செய்யுங்கள்; [QBR2] சமாதானத்தைத் தேடி, அதைப் பின்தொடருங்கள்.
சங்கீதம் 34 : 15 (OCVTA)
யெகோவாவினுடைய கண்கள் நீதிமான்கள்மேல் இருக்கின்றன; [QBR2] அவருடைய காதுகள் அவர்களுடைய கதறுதலைக் கவனமாய்க் கேட்கின்றன; [QBR]
சங்கீதம் 34 : 16 (OCVTA)
ஆனால் தீமை செய்கிறவர்களைப் பற்றிய நினைவை [QBR2] பூமியிலிருந்தே அகற்றிப்போடும்படி, [QBR2] யெகோவாவினுடைய முகம் அவர்களுக்கு விரோதமாய் இருக்கிறது.
சங்கீதம் 34 : 17 (OCVTA)
நீதிமான்கள் கூப்பிடும்போது, யெகோவா அவர்களுக்குச் செவிகொடுக்கிறார்; [QBR2] அவர் அவர்களுடைய எல்லாத் துன்பங்களிலுமிருந்தும் அவர்களை விடுவிக்கிறார். [QBR]
சங்கீதம் 34 : 18 (OCVTA)
யெகோவா உள்ளம் உடைந்து போனவர்களுக்கு அருகே இருக்கிறார்; [QBR2] ஆவியில் நொந்து இருக்கிறவர்களை யெகோவா காப்பாற்றுகிறார்.
சங்கீதம் 34 : 19 (OCVTA)
நீதிமானுக்கு அநேக துன்பங்கள் வரலாம், [QBR2] ஆனாலும் அவை எல்லாவற்றிலிருந்தும் யெகோவா அவனை விடுவிக்கிறார். [QBR]
சங்கீதம் 34 : 20 (OCVTA)
அவர் அவனுடைய எலும்புகளையெல்லாம் பாதுகாக்கிறார்; [QBR2] அவற்றில் ஒன்றுகூட முறிக்கப்படாது.
சங்கீதம் 34 : 21 (OCVTA)
தீமை கொடியவர்களைக் கொல்லும்; [QBR2] நீதிமான்களின் பகைவர்கள் குற்றவாளிகளாவார்கள். [QBR]
சங்கீதம் 34 : 22 (OCVTA)
யெகோவா தமது பணியாட்களைக் காப்பாற்றுகிறார்; [QBR2] அவரிடத்தில் தஞ்சம் அடைகிற யாரும் குற்றவாளியாகத் தீர்க்கப்படமாட்டான். [PE]
❮
❯