சங்கீதம் 3 : 1 (OCVTA)
யெகோவாவே, என் பகைவர்கள் எத்தனை பேராய் இருக்கிறார்கள்! எத்தனைபேர் எனக்கு விரோதமாக எழும்புகிறார்கள்.
சங்கீதம் 3 : 2 (OCVTA)
அநேகர் என்னைக்குறித்து, “இறைவன் அவனை விடுவிக்கமாட்டார்” என்று சொல்கிறார்கள்.* எபிரெய மொழிப் பிரதிகளில் சேலா என்ற வார்த்தை இங்கும் 4 மற்றும் 8 ஆவது வசனத்தின் பின் பகுதியிலும் வருகிறது.
சங்கீதம் 3 : 3 (OCVTA)
ஆனால் யெகோவாவே, நீர் என்னைச் சுற்றிலும் கேடயமும், என் மகிமையும் என் தலையை உயர்த்துகிறவருமாய் இருக்கிறீர்.
சங்கீதம் 3 : 4 (OCVTA)
நான் சத்தமிட்டு யெகோவாவைக் கூப்பிடுகிறேன்; அவர் தமது பரிசுத்த மலையிலிருந்து எனக்குப் பதில் கொடுக்கிறார்.
சங்கீதம் 3 : 5 (OCVTA)
நான் படுத்துக்கொண்டு உறங்குகிறேன்; யெகோவா என்னைத் தாங்குவதால், நான் திரும்பவும் விழித்தெழுகிறேன்.
சங்கீதம் 3 : 6 (OCVTA)
எல்லாப் பக்கங்களிலும் பதினாயிரம்பேர் எனக்கு விரோதமாய் நின்றாலும், நான் பயப்படமாட்டேன்.
சங்கீதம் 3 : 7 (OCVTA)
யெகோவாவே, எழுந்தருளும்; என் இறைவனே, என்னை விடுவியும். என் எதிரிகள் எல்லோரையும் கன்னத்தில் அடித்து, கொடியவர்களின் பற்களை உடைத்துப்போடும்.
சங்கீதம் 3 : 8 (OCVTA)
யெகோவாவிடமிருந்தே விடுதலை வருகிறது. உம்முடைய ஆசீர்வாதம் உமது மக்களின்மேல் இருப்பதாக.

1 2 3 4 5 6 7 8