சங்கீதம் 29 : 1 (OCVTA)
பரலோகவாசிகளே, யெகோவாவை கனம்பண்ணுங்கள்; அவருடைய மகிமைக்காகவும் வல்லமைக்காகவும் யெகோவாவை கனம்பண்ணுங்கள்.
சங்கீதம் 29 : 2 (OCVTA)
யெகோவாவினுடைய பெயருக்குரிய மகிமைக்காக கனம்பண்ணுங்கள்; பரிசுத்த அலங்காரத்துடன் யெகோவாவை வழிபடுங்கள்.
சங்கீதம் 29 : 3 (OCVTA)
யெகோவாவினுடைய குரல் வெள்ளத்தின்மேல் ஒலிக்கிறது; மகிமையின் இறைவன் முழங்குகிறார்; பெருவெள்ளத்தின்மேல் யெகோவா முழங்குகிறார்.
சங்கீதம் 29 : 4 (OCVTA)
யெகோவாவினுடைய குரல் வல்லமையுள்ளது; யெகோவாவினுடைய குரல் மாட்சிமை பொருந்தியது.
சங்கீதம் 29 : 5 (OCVTA)
யெகோவாவினுடைய குரல் கேதுரு மரங்களை உடைக்கிறது; யெகோவா லெபனோனின் கேதுரு மரங்களைத் துண்டுகளாக உடைக்கிறார்.
சங்கீதம் 29 : 6 (OCVTA)
அவர் லெபனோனை ஒரு கன்றுக்குட்டியைப் போலவும், சிரியோன்* அதாவது, எர்மோன் மலை மலையை ஒரு இளம் காட்டெருதைப் போலவும் துள்ளப்பண்ணுகிறார்.
சங்கீதம் 29 : 7 (OCVTA)
யெகோவாவினுடைய குரல் மின்னல் கீற்றுகளுடன் பளிச்சிடுகிறது.
சங்கீதம் 29 : 8 (OCVTA)
யெகோவாவினுடைய குரல் பாலைவனத்தை நடுங்கச் செய்கிறது; காதேஷின் பாலைவனத்தை யெகோவா அதிரப்பண்ணுகிறார்.
சங்கீதம் 29 : 9 (OCVTA)
யெகோவாவினுடைய குரல் கர்வாலி மரங்களை முறிக்கிறது. காடுகளை அழித்து வெளியாக்குகிறது; அவருடைய ஆலயத்திலோ அனைவரும், “மகிமை!” என அறிவிக்கிறார்கள்.
சங்கீதம் 29 : 10 (OCVTA)
யெகோவா வெள்ளத்தின்மேல் சிங்காசனத்தில் அமர்ந்திருக்கிறார்; யெகோவா என்றென்றும் அரசனாக சிங்காசனத்தில் அமர்ந்திருக்கிறார்.
சங்கீதம் 29 : 11 (OCVTA)
யெகோவா தமது மக்களுக்குப் பெலன் கொடுக்கிறார்; யெகோவா தமது மக்களை சமாதானத்தால் ஆசீர்வதிக்கிறார்.

1 2 3 4 5 6 7 8 9 10 11