சங்கீதம் 147 : 1 (OCVTA)
யெகோவாவைத் துதியுங்கள். நமது இறைவனுக்குத் துதிகளைப் பாடுவது எவ்வளவு நல்லது, [QBR2] அவரைத் துதிப்பது எவ்வளவு மகிழ்ச்சியும் தகுதியுமாயிருக்கிறது.
சங்கீதம் 147 : 2 (OCVTA)
யெகோவா எருசலேமைக் கட்டியெழுப்புகிறார்; [QBR2] அவர் நாடுகடத்தப்பட்ட இஸ்ரயேலரை ஒன்றுசேர்க்கிறார். [QBR]
சங்கீதம் 147 : 3 (OCVTA)
அவர் உள்ளம் உடைந்தவர்களைச் சுகப்படுத்தி, [QBR2] அவர்களுடைய காயங்களைக் கட்டுகிறார். [QBR]
சங்கீதம் 147 : 4 (OCVTA)
அவர் நட்சத்திரங்களின் தொகையை எண்ணி, [QBR2] அவை ஒவ்வொன்றையும் பெயரிட்டு அழைக்கிறார். [QBR]
சங்கீதம் 147 : 5 (OCVTA)
நம்முடைய யெகோவா பெரியவரும், வல்லமை மிகுந்தவருமாய் இருக்கிறார்; [QBR2] அவருடைய அறிவுக்கு எல்லையே இல்லை. [QBR]
சங்கீதம் 147 : 6 (OCVTA)
யெகோவா தாழ்மையுள்ளவர்களை ஆதரிக்கிறார்; [QBR2] ஆனால் கொடியவர்களையோ தரையில் வீழ்த்துகிறார்.
சங்கீதம் 147 : 7 (OCVTA)
யெகோவாவை நன்றியுடன் துதி பாடுங்கள்; [QBR2] யாழினால் நம் இறைவனுக்கு இசை மீட்டுங்கள்.
சங்கீதம் 147 : 8 (OCVTA)
அவர் ஆகாயத்தை மேகங்களினால் மூடுகிறார்; [QBR2] பூமிக்கு மழையைக் கொடுத்து, [QBR2] மலைகளில் புல்லை வளரப்பண்ணுகிறார். [QBR]
சங்கீதம் 147 : 9 (OCVTA)
மிருகங்களுக்கும் கூப்பிடுகிற காக்கைக் குஞ்சுகளுக்கும் [QBR2] அவர் உணவு கொடுக்கிறார்.
சங்கீதம் 147 : 10 (OCVTA)
குதிரையின் பலத்தில் அவர் பிரியம் கொள்வதில்லை, [QBR2] படைவீரனின் கால் வலிமையில் அவர் மகிழ்ச்சி அடைவதுமில்லை; [QBR]
சங்கீதம் 147 : 11 (OCVTA)
யெகோவா தமக்குப் பயந்து, [QBR2] தங்கள் நம்பிக்கையை அவருடைய உடன்படிக்கையின் அன்பில் [QBR2] வைத்திருக்கிறவர்களில் மகிழ்ச்சியாயிருக்கிறார்.
சங்கீதம் 147 : 12 (OCVTA)
எருசலேமே யெகோவாவைப் பாராட்டு; [QBR2] சீயோனே உன் இறைவனைத் துதி.
சங்கீதம் 147 : 13 (OCVTA)
ஏனெனில் அவர் உன் வாசல்களின் தாழ்ப்பாள்களைப் பலப்படுத்தி, [QBR2] உன்னிடத்திலுள்ள உன் மக்களை ஆசீர்வதிக்கிறார். [QBR]
சங்கீதம் 147 : 14 (OCVTA)
அவர் உன் எல்லைகளுக்குச் சமாதானத்தைக் கொடுத்து, [QBR2] சிறந்த கோதுமையினால் உன்னைத் திருப்தியாக்குகிறார்.
சங்கீதம் 147 : 15 (OCVTA)
அவர் பூமிக்குத் தமது கட்டளையை அனுப்புகிறார்; [QBR2] அவருடைய வார்த்தை விரைந்து செல்கிறது. [QBR]
சங்கீதம் 147 : 16 (OCVTA)
அவர் மூடுபனியை கம்பளியைப்போல் பரப்புகிறார்; [QBR2] உறைபனித் துகள்களை சாம்பலைப்போல் தூவுகிறார். [QBR]
சங்கீதம் 147 : 17 (OCVTA)
அவர் தமது பனிக்கட்டி மழையை சிறு கற்களைப்போல் வீசியெறிகிறார்; [QBR2] அவருடைய பனியின் குளிர்காற்றை யாரால் தாங்கமுடியும்? [QBR]
சங்கீதம் 147 : 18 (OCVTA)
அவர் தமது வார்த்தையை அனுப்பி, அவைகளை உருகச்செய்கிறார்; [QBR2] அவர் தமது தென்றல் காற்றுகளை வீசச்செய்ய, வெள்ளம் ஓடுகிறது.
சங்கீதம் 147 : 19 (OCVTA)
அவர் தமது வார்த்தையை யாக்கோபுக்கும், [QBR2] தமது சட்டங்களையும் விதிமுறைகளையும் இஸ்ரயேலுக்கும் வெளிப்படுத்தியிருக்கிறார். [QBR]
சங்கீதம் 147 : 20 (OCVTA)
அவர் இப்படி வேறு எந்த மக்களுக்கும் வெளிப்படுத்தவில்லை; [QBR2] அவர்கள் அவருடைய சட்டங்களை அறியாதிருக்கிறார்கள். யெகோவாவைத் துதி. [PE]

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20

BG:

Opacity:

Color:


Size:


Font: