சங்கீதம் 146 : 1 (OCVTA)
யெகோவாவைத் துதி* எபிரெயத்தில் அல்லேலூயா வச 10 . என் ஆத்துமாவே, யெகோவாவைத் துதி.
சங்கீதம் 146 : 2 (OCVTA)
நான் என் வாழ்நாளெல்லாம் யெகோவாவைத் துதிப்பேன்; நான் உயிரோடிருக்கும்வரை என் இறைவனுக்குத் துதி பாடுவேன்.
சங்கீதம் 146 : 3 (OCVTA)
உன் நம்பிக்கையை இளவரசர்களிலும், உன்னை மீட்கமுடியாத மனுமக்களிலும் வைக்காதே.
சங்கீதம் 146 : 4 (OCVTA)
அவர்களுடைய ஆவி பிரியும்போது அவர்கள் மண்ணுக்கே திரும்பிப் போவார்கள்; அந்த நாளிலேயே அவர்களுடைய திட்டங்கள் ஒன்றுமில்லாமல் போகும்.
சங்கீதம் 146 : 5 (OCVTA)
யாக்கோபின் இறைவனைத் தங்கள் உதவியாகக் கொண்டிருப்போர், தங்களுடைய இறைவனாகிய யெகோவாவிடம் நம்பிக்கையை வைத்திருப்போர் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்.
சங்கீதம் 146 : 6 (OCVTA)
அவரே வானத்தையும் பூமியையும் கடலையும் அவற்றிலுள்ள எல்லாவற்றையும் படைத்தவர்; யெகோவாவாகிய அவர் என்றைக்கும் உண்மையுள்ளவராய் இருக்கிறார்.
சங்கீதம் 146 : 7 (OCVTA)
அவர் ஒடுக்கப்பட்டவர்களுக்கு நியாயஞ்செய்கிறார்; பசியுள்ளவர்களுக்கு உணவு கொடுக்கிறார். யெகோவா கைதிகளை விடுதலையாக்குகிறார்,
சங்கீதம் 146 : 8 (OCVTA)
யெகோவா குருடருக்குப் பார்வை கொடுக்கிறார், யெகோவா தாழ்த்தப்பட்டவர்களை உயர்த்துகிறார், யெகோவா நீதிமான்களில் அன்பாயிருக்கிறார்.
சங்கீதம் 146 : 9 (OCVTA)
யெகோவா அயல்நாட்டவர்களைப் பாதுகாக்கிறார், அநாதைகளையும் விதவைகளையும் ஆதரிக்கிறார், ஆனால் கொடியவர்களின் வழிகளை அவர் முறியடிக்கிறார்.
சங்கீதம் 146 : 10 (OCVTA)
யெகோவா என்றென்றும் ஆளுகை செய்கிறார்; சீயோனே, உன் இறைவன் எல்லாத் தலைமுறைகளுக்கும் அரசாளுகிறார். யெகோவாவைத் துதி.

1 2 3 4 5 6 7 8 9 10