நான் என் வாழ்நாளெல்லாம் யெகோவாவைத் துதிப்பேன்; [QBR2] நான் உயிரோடிருக்கும்வரை என் இறைவனுக்குத் துதி பாடுவேன். [QBR]
சங்கீதம் 146 : 3 (OCVTA)
உன் நம்பிக்கையை இளவரசர்களிலும், [QBR2] உன்னை மீட்கமுடியாத மனுமக்களிலும் வைக்காதே. [QBR]
சங்கீதம் 146 : 4 (OCVTA)
அவர்களுடைய ஆவி பிரியும்போது அவர்கள் மண்ணுக்கே திரும்பிப் போவார்கள்; [QBR2] அந்த நாளிலேயே அவர்களுடைய திட்டங்கள் ஒன்றுமில்லாமல் போகும். [QBR]
சங்கீதம் 146 : 5 (OCVTA)
யாக்கோபின் இறைவனைத் தங்கள் உதவியாகக் கொண்டிருப்போர், [QBR2] தங்களுடைய இறைவனாகிய யெகோவாவிடம் [QBR2] நம்பிக்கையை வைத்திருப்போர் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்.
சங்கீதம் 146 : 6 (OCVTA)
அவரே வானத்தையும் பூமியையும் [QBR2] கடலையும் அவற்றிலுள்ள எல்லாவற்றையும் படைத்தவர்; [QBR2] யெகோவாவாகிய அவர் என்றைக்கும் உண்மையுள்ளவராய் இருக்கிறார். [QBR]
சங்கீதம் 146 : 7 (OCVTA)
அவர் ஒடுக்கப்பட்டவர்களுக்கு நியாயஞ்செய்கிறார்; [QBR2] பசியுள்ளவர்களுக்கு உணவு கொடுக்கிறார். [QBR] யெகோவா கைதிகளை விடுதலையாக்குகிறார், [QBR2]