“இறைவன் இல்லை” என்று [QBR2] மூடன் தன் இருதயத்தில் சொல்கிறான். [QBR] அவர்கள் சீர்கெட்டவர்கள், அவர்களுடைய செயல்கள் இழிவானவை; [QBR2] நன்மை செய்கிறவன் ஒருவனும் இல்லை.
சங்கீதம் 14 : 2 (OCVTA)
யெகோவா பரலோகத்திலிருந்து [QBR2] மனுமக்களை நோக்கிப் பார்க்கிறார், [QBR] அவர்களில் விவேகமுள்ளவனாவது [QBR2] இறைவனைத் தேடுகிறவனாவது உண்டோ என்று பார்க்கிறார். [QBR]
சங்கீதம் 14 : 3 (OCVTA)
எல்லோரும் வழிவிலகி, சீர்கெட்டுப் போனார்கள்; [QBR2] நன்மை செய்கிறவன் ஒருவனுமில்லை, [QBR2] ஒருவனாகிலும் இல்லை.
சங்கீதம் 14 : 4 (OCVTA)
தீயோர்களுக்கு எதுவும் தெரியாதோ? மனிதர் அப்பம் சாப்பிடுவதுபோல், அவர்கள் என் மக்களை விழுங்குகிறார்கள்; [QBR2] அவர்கள் யெகோவாவை வழிபடுவதுமில்லை. [QBR]
சங்கீதம் 14 : 5 (OCVTA)
அவர்கள் அங்கே பயத்தில் நடுங்குகிறார்கள்; [QBR2] ஏனெனில் இறைவன் நீதிமான்களின் கூட்டத்தில் இருக்கிறார். [QBR]
சங்கீதம் 14 : 6 (OCVTA)
தீமை செய்கிறவர்களே, நீங்கள் ஏழைகளின் திட்டங்களைக் குழப்புகிறீர்கள்; [QBR2] ஆனால் யெகோவாவோ ஏழைகளின் தஞ்சம்.
சங்கீதம் 14 : 7 (OCVTA)
சீயோனிலிருந்து இஸ்ரயேலுக்கு இரட்சிப்பு வெளிவருவதாக! [QBR2] யெகோவா தமது மக்களின் சிறையிருப்பைத் திருப்பும்போது [QBR2] யாக்கோபு மகிழட்டும், இஸ்ரயேல் களிகூரட்டும்! [PE]