சங்கீதம் 136 : 1 (OCVTA)
யெகோவாவுக்கு நன்றி செலுத்துங்கள், அவர் நல்லவர், அவருடைய உடன்படிக்கையின் அன்பு என்றென்றும் நிலைத்திருக்கிறது.
சங்கீதம் 136 : 2 (OCVTA)
தெய்வங்களின் இறைவனுக்கு நன்றி செலுத்துங்கள், அவருடைய உடன்படிக்கையின் அன்பு என்றென்றும் நிலைத்திருக்கிறது.
சங்கீதம் 136 : 3 (OCVTA)
கர்த்தாதி யெகோவாவுக்கு நன்றி செலுத்துங்கள், அவருடைய உடன்படிக்கையின் அன்பு என்றென்றும் நிலைத்திருக்கிறது.
சங்கீதம் 136 : 4 (OCVTA)
அவர் மட்டுமே பெரிய அதிசயங்களைச் செய்கிறவர்; அவருடைய உடன்படிக்கையின் அன்பு என்றென்றும் நிலைத்திருக்கிறது.
சங்கீதம் 136 : 5 (OCVTA)
அவர் தமது அறிவாற்றலினால் வானங்களைப் படைத்தார்; அவருடைய உடன்படிக்கையின் அன்பு என்றென்றும் நிலைத்திருக்கிறது.
சங்கீதம் 136 : 6 (OCVTA)
அவர் நீர்நிலைகளுக்கு மேலாகப் பூமியைப் பரப்பினார்; அவருடைய உடன்படிக்கையின் அன்பு என்றென்றும் நிலைத்திருக்கிறது.
சங்கீதம் 136 : 7 (OCVTA)
அவர் பெரிய வெளிச்சங்களை உண்டாக்கினார்; அவருடைய உடன்படிக்கையின் அன்பு என்றென்றும் நிலைத்திருக்கிறது.
சங்கீதம் 136 : 8 (OCVTA)
அவர் பகலை ஆளச் சூரியனைப் படைத்தார்; அவருடைய உடன்படிக்கையின் அன்பு என்றென்றும் நிலைத்திருக்கிறது.
சங்கீதம் 136 : 9 (OCVTA)
இரவை ஆளச் சந்திரனையும் நட்சத்திரங்களையும் படைத்தார்; அவருடைய உடன்படிக்கையின் அன்பு என்றென்றும் நிலைத்திருக்கிறது.
சங்கீதம் 136 : 10 (OCVTA)
அவர் எகிப்தியருடைய தலைப்பிள்ளைகளை வீழ்த்தினார்; அவருடைய உடன்படிக்கையின் அன்பு என்றென்றும் நிலைத்திருக்கிறது.
சங்கீதம் 136 : 11 (OCVTA)
அவர்கள் மத்தியிலிருந்து இஸ்ரயேலரை வெளியே கொண்டுவந்தார்; அவருடைய உடன்படிக்கையின் அன்பு என்றென்றும் நிலைத்திருக்கிறது.
சங்கீதம் 136 : 12 (OCVTA)
அவர் வல்லமையுள்ள கரத்தினாலும் நீட்டிய புயத்தினாலும் அதைச் செய்தார்; அவருடைய உடன்படிக்கையின் அன்பு என்றென்றும் நிலைத்திருக்கிறது.
சங்கீதம் 136 : 13 (OCVTA)
செங்கடலை இரண்டாகப் பிரித்தவருக்கு நன்றி செலுத்துங்கள்; அவருடைய உடன்படிக்கையின் அன்பு என்றென்றும் நிலைத்திருக்கிறது.
சங்கீதம் 136 : 14 (OCVTA)
அவர் அதின் நடுவில் இஸ்ரயேலரைக் கொண்டுவந்தார்; அவருடைய உடன்படிக்கையின் அன்பு என்றென்றும் நிலைத்திருக்கிறது.
சங்கீதம் 136 : 15 (OCVTA)
ஆனால் பார்வோனையும் அவனுடைய படையையும் செங்கடலில் புரட்டித்தள்ளினார்; அவருடைய உடன்படிக்கையின் அன்பு என்றென்றும் நிலைத்திருக்கிறது.
சங்கீதம் 136 : 16 (OCVTA)
தம்முடைய மக்களை பாலைவனத்தில் வழிநடத்தினவருக்கு நன்றி செலுத்துங்கள்; அவருடைய உடன்படிக்கையின் அன்பு என்றென்றும் நிலைத்திருக்கிறது.
சங்கீதம் 136 : 17 (OCVTA)
அவர் பெரிய அரசர்களை வீழ்த்தியவருக்கு நன்றி செலுத்துங்கள்; அவருடைய உடன்படிக்கையின் அன்பு என்றென்றும் நிலைத்திருக்கிறது.
சங்கீதம் 136 : 18 (OCVTA)
அவர் வலிமைமிக்க அரசர்களை வீழ்த்தினார்; அவருடைய உடன்படிக்கையின் அன்பு என்றென்றும் நிலைத்திருக்கிறது.
சங்கீதம் 136 : 19 (OCVTA)
அவர் எமோரியரின் அரசனாகிய சீகோனை வீழ்த்தினார்; அவருடைய உடன்படிக்கையின் அன்பு என்றென்றும் நிலைத்திருக்கிறது.
சங்கீதம் 136 : 20 (OCVTA)
அவர் பாசானின் அரசனாகிய ஓகை வீழ்த்தினார்; அவருடைய உடன்படிக்கையின் அன்பு என்றென்றும் நிலைத்திருக்கிறது.
சங்கீதம் 136 : 21 (OCVTA)
அவர் அவர்களுடைய நாட்டை உரிமைச்சொத்தாகக் கொடுத்தார்; அவருடைய உடன்படிக்கையின் அன்பு என்றென்றும் நிலைத்திருக்கிறது.
சங்கீதம் 136 : 22 (OCVTA)
தமது அடியவனாகிய இஸ்ரயேலுக்கு அதை உரிமைச்சொத்தாகக் கொடுத்தார்; அவருடைய உடன்படிக்கையின் அன்பு என்றென்றும் நிலைத்திருக்கிறது.
சங்கீதம் 136 : 23 (OCVTA)
அவர் நம்முடைய தாழ்ந்த நிலையில் நம்மை நினைத்தார்; அவருடைய உடன்படிக்கையின் அன்பு என்றென்றும் நிலைத்திருக்கிறது.
சங்கீதம் 136 : 24 (OCVTA)
நம்முடைய பகைவரிடமிருந்து நம்மை விடுவித்தார்; அவருடைய உடன்படிக்கையின் அன்பு என்றென்றும் நிலைத்திருக்கிறது.
சங்கீதம் 136 : 25 (OCVTA)
அவர் ஒவ்வொரு உயிரினத்திற்கும் உணவு கொடுக்கிறார்; அவருடைய உடன்படிக்கையின் அன்பு என்றென்றும் நிலைத்திருக்கிறது.
சங்கீதம் 136 : 26 (OCVTA)
பரலோகத்தின் இறைவனுக்கு நன்றி செலுத்துங்கள்; அவருடைய உடன்படிக்கையின் அன்பு என்றென்றும் நிலைத்திருக்கிறது.

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26