சங்கீதம் 130 : 1 (OCVTA)
யெகோவாவே, துயரத்தின் ஆழங்களிலிருந்து உம்மை நோக்கிக் கூப்பிடுகிறேன்.
சங்கீதம் 130 : 2 (OCVTA)
யெகோவாவே, என் குரலைக் கேளும்; இரக்கத்திற்காக கூப்பிடும் எனது குரலை உமது காதுகள் கவனமாய்க் கேட்கட்டும்.
சங்கீதம் 130 : 3 (OCVTA)
யெகோவாவே, நீர் பாவங்களைப் பதிவுசெய்து வைத்திருப்பீரானால், யெகோவாவே, யார் உம்முன் நிற்கமுடியும்?
சங்கீதம் 130 : 4 (OCVTA)
ஆனால், நாங்கள் பயபக்தியுடன் உங்களுக்கு சேவைசெய்ய உம்மிடத்தில் மன்னிப்பு உண்டு.
சங்கீதம் 130 : 5 (OCVTA)
நான் யெகோவாவுக்காகக் காத்திருக்கிறேன், என் ஆத்துமா காத்திருக்கிறது; அவருடைய வார்த்தையிலேயே என் எதிர்பார்ப்பை வைத்திருக்கிறேன்.
சங்கீதம் 130 : 6 (OCVTA)
விடியற்காலைக்காகக் காத்திருக்கும் காவற்காரரைப் பார்க்கிலும், ஆம், விடியற்காலைக்காகக் காத்திருக்கும் காவற்காரரைப் பார்க்கிலும், என் ஆத்துமா யெகோவாவுக்குக் காத்திருக்கிறது.
சங்கீதம் 130 : 7 (OCVTA)
இஸ்ரயேலே, உன் நம்பிக்கையை யெகோவாவிலேயே இருப்பதாக; ஏனெனில் யெகோவாவிடத்தில் உடன்படிக்கையின் அன்பும், அவரிடத்தில் முழுமையான மீட்பும் உண்டு.
சங்கீதம் 130 : 8 (OCVTA)
அவர்தாமே இஸ்ரயேலரை அவர்களின் எல்லாப் பாவங்களிலிருந்தும் மீட்பார்.

1 2 3 4 5 6 7 8