சங்கீதம் 125 : 1 (OCVTA)
யெகோவாவை நம்புகிறவர்கள் சீயோன் மலையைப்போல் என்றென்றும் அசையாமல் நிலைத்திருப்பார்கள்.
சங்கீதம் 125 : 2 (OCVTA)
மலைகள் எருசலேமைச் சுற்றிலும் இருப்பதைப்போல், யெகோவா இப்பொழுதும் எப்பொழுதும் தமது மக்களைச் சுற்றியிருக்கிறார்.
சங்கீதம் 125 : 3 (OCVTA)
நீதிமான்களுக்கென ஒதுக்கப்பட்ட நாட்டின்மேல், கொடியவர்களின் ஆட்சி நீடிக்காது; இல்லையெனில், நீதியற்றவர்களும் தீமைசெய்யத் தங்கள் கைகளை நீட்டலாம்.
சங்கீதம் 125 : 4 (OCVTA)
யெகோவாவே, நல்லவர்களுக்கு, இருதயத்தில் நேர்மையாய் இருப்போருக்கு நன்மை செய்யும்.
சங்கீதம் 125 : 5 (OCVTA)
குறுக்கு வழிகளுக்குத் திரும்புகிறவர்களையோ, யெகோவா தீயவரோடேகூட தண்டிப்பார். இஸ்ரயேலின்மீது சமாதானம் உண்டாவதாக.

1 2 3 4 5