சங்கீதம் 124 : 1 (OCVTA)
யெகோவா நமது பக்கத்தில் இல்லாவிட்டால், இதை இஸ்ரயேலர் சொல்லட்டும்:
சங்கீதம் 124 : 2 (OCVTA)
மனிதர் நம்மை தாக்கும்போது யெகோவா தாமே நமது பக்கத்தில் இல்லாவிட்டால்,
சங்கீதம் 124 : 3 (OCVTA)
அவர்கள் கோபம் நமக்கு எதிராகப் பற்றியெரிந்தபோது, அவர்கள் நம்மை உயிருடன் விழுங்கியிருப்பார்களே;
சங்கீதம் 124 : 4 (OCVTA)
வெள்ளம் நம்மை மூழ்கடித்திருக்குமே, நீரோட்டம் நம்மீது புரண்டு ஓடியிருக்குமே,
சங்கீதம் 124 : 5 (OCVTA)
பொங்கி வந்த வெள்ளம் நம்மீது பாய்ந்தோடியிருக்குமே.
சங்கீதம் 124 : 6 (OCVTA)
அவர்கள் நம்மை பற்களால் கிழித்துப்போட இடமளிக்காத யெகோவாவுக்குத் துதி உண்டாகட்டும்.
சங்கீதம் 124 : 7 (OCVTA)
வேடனுடைய கண்ணியிலிருந்து தப்பின பறவையைப்போல் நாம் தப்பிப் பிழைத்தோம்; கண்ணி அறுந்தது, நாம் தப்பினோம்.
சங்கீதம் 124 : 8 (OCVTA)
வானத்தையும் பூமியையும் படைத்தவரான யெகோவாவினுடைய பெயரிலே நமக்கு உதவி உண்டு.

1 2 3 4 5 6 7 8