சங்கீதம் 12 : 1 (OCVTA)
யெகோவாவே, உதவிசெய்யும், இறை பக்தியுள்ளவர் ஒருவருமே இல்லை; மனிதருள் உண்மையுள்ளவர்கள் குறைந்துவிட்டார்கள்.
சங்கீதம் 12 : 2 (OCVTA)
ஒவ்வொருவனும் தன் அயலானிடம் பொய்ப் பேசுகிறான்; அவர்களுடைய உதடுகளால் முகஸ்துதி பேசி இருதயத்தில் வஞ்சனை வைத்திருக்கிறார்கள்.
சங்கீதம் 12 : 3 (OCVTA)
முகஸ்துதி பேசும் எல்லா உதடுகளையும் பெருமை பேசும் ஒவ்வொரு நாவையும் யெகோவா அறுத்துப் போடுவாராக.
சங்கீதம் 12 : 4 (OCVTA)
“எங்கள் நாவினாலேயே நாங்கள் வெற்றி கொள்வோம்; எங்கள் சொற்களே எங்களுக்குத் துணை; எங்களுக்குத் தலைவர் யார்?” என்று அவர்கள் சொல்லுகிறார்கள்.
சங்கீதம் 12 : 5 (OCVTA)
“ஏழைகள் ஒடுக்கப்படுகிறார்கள்; எளியவர்கள் புலம்பிக் கொண்டிருக்கிறார்கள். இதினால் நான் இப்பொழுது எழுந்து, அவர்களைத் துன்புறுத்துவோரிடமிருந்து காப்பாற்றுவேன்” என்று யெகோவா கூறுகிறார்.
சங்கீதம் 12 : 6 (OCVTA)
யெகோவாவின் வார்த்தைகள் தூய்மையானவை. அவை களிமண் உலையில் ஏழு தரம் சுத்திகரிக்கப்பட்ட வெள்ளியைப்போல் இருக்கின்றன.
சங்கீதம் 12 : 7 (OCVTA)
யெகோவாவே, நீர் ஏழைகளாகிய அவர்களைப் பாதுகாப்பாய் வைத்துக்கொள்வீர்; கொடியவர்களிடமிருந்து எங்களை என்றென்றும் காத்துக்கொள்வீர்.
சங்கீதம் 12 : 8 (OCVTA)
இழிவான செயல்கள் மனிதர் மத்தியில் பாராட்டப்படுவதினால் கொடியவர்கள் வீம்புடன் சுற்றித் திரிகிறார்கள்.

1 2 3 4 5 6 7 8