ஒவ்வொருவனும் தன் அயலானிடம் பொய்ப் பேசுகிறான்; [QBR2] அவர்களுடைய உதடுகளால் முகஸ்துதி பேசி [QBR2] இருதயத்தில் வஞ்சனை வைத்திருக்கிறார்கள்.
சங்கீதம் 12 : 3 (OCVTA)
முகஸ்துதி பேசும் எல்லா உதடுகளையும் [QBR2] பெருமை பேசும் ஒவ்வொரு நாவையும் யெகோவா அறுத்துப் போடுவாராக. [QBR]
சங்கீதம் 12 : 4 (OCVTA)
“எங்கள் நாவினாலேயே நாங்கள் வெற்றி கொள்வோம்; [QBR2] எங்கள் சொற்களே எங்களுக்குத் துணை; எங்களுக்குத் தலைவர் யார்?” [QBR2] என்று அவர்கள் சொல்லுகிறார்கள்.
சங்கீதம் 12 : 5 (OCVTA)
“ஏழைகள் ஒடுக்கப்படுகிறார்கள்; எளியவர்கள் புலம்பிக் கொண்டிருக்கிறார்கள். [QBR2] இதினால் நான் இப்பொழுது எழுந்து, [QBR2] அவர்களைத் துன்புறுத்துவோரிடமிருந்து காப்பாற்றுவேன்” என்று யெகோவா கூறுகிறார். [QBR]
சங்கீதம் 12 : 6 (OCVTA)
யெகோவாவின் வார்த்தைகள் தூய்மையானவை. [QBR2] அவை களிமண் உலையில் [QBR2] ஏழு தரம் சுத்திகரிக்கப்பட்ட வெள்ளியைப்போல் இருக்கின்றன.