சங்கீதம் 118 : 1 (OCVTA)
யெகோவாவுக்கு நன்றி செலுத்துங்கள், அவர் நல்லவர்; அவருடைய அன்பு என்றென்றும் நிலைத்திருக்கிறது.
சங்கீதம் 118 : 2 (OCVTA)
“அவருடைய அன்பு என்றென்றும் நிலைத்திருக்கிறது” என்று இஸ்ரயேலர் சொல்வார்களாக.
சங்கீதம் 118 : 3 (OCVTA)
“அவருடைய அன்பு என்றென்றும் நிலைத்திருக்கிறது” என்று ஆரோன் குடும்பத்தவரான ஆசாரியர்கள் சொல்வார்களாக.
சங்கீதம் 118 : 4 (OCVTA)
“அவருடைய அன்பு என்றென்றும் நிலைத்திருக்கிறது” என்று யெகோவாவுக்குப் பயந்து நடக்கிறவர்கள் சொல்வார்களாக.
சங்கீதம் 118 : 5 (OCVTA)
நான் நெருக்கத்திலிருந்து யெகோவாவைக் கூப்பிட்டேன் எனக்குப் பதிலளித்து, விசாலமான இடத்தில் என்னை நடத்தினார்.
சங்கீதம் 118 : 6 (OCVTA)
யெகோவா என்னோடு இருக்கிறார், நான் பயப்படமாட்டேன்; மனிதன் எனக்கு என்ன செய்யமுடியும்?
சங்கீதம் 118 : 7 (OCVTA)
யெகோவா என்னோடு இருக்கிறார், அவரே என் உதவியாளர்; என்னைப் பகைக்கிறவர்களுக்கு நேரிடுவதை நான் காண்பேன்.
சங்கீதம் 118 : 8 (OCVTA)
மனிதனில் நம்பிக்கை வைப்பதைப் பார்க்கிலும், யெகோவாவிடத்தில் தஞ்சம் அடைவதே மேலானது.
சங்கீதம் 118 : 9 (OCVTA)
அதிகாரிகள் மீது நம்பிக்கை வைப்பதைப் பார்க்கிலும், யெகோவாவிடத்தில் தஞ்சம் அடைவதே சிறந்தது.
சங்கீதம் 118 : 10 (OCVTA)
எல்லா மக்களும் என்னைச் சூழ்ந்துகொண்டார்கள்; ஆனாலும் யெகோவாவின் பெயரில் நான் அவர்களை மேற்கொண்டேன்.
சங்கீதம் 118 : 11 (OCVTA)
அவர்கள் எல்லாப் பக்கங்களிலும் என்னை வளைத்துக்கொண்டார்கள்; ஆனாலும் யெகோவாவின் பெயரிலேயே நான் அவர்களை மேற்கொண்டேன்.
சங்கீதம் 118 : 12 (OCVTA)
அவர்கள் தேனீக்களைப்போல என்னைச் சூழ்ந்துகொண்டார்கள்; ஆனாலும் அவர்கள் எரியும் முட்செடிகளைப்போல் விரைவாக மறைந்துபோனார்கள்; யெகோவாவின் பெயரால் நான் அவர்களை மேற்கொண்டேன்.
சங்கீதம் 118 : 13 (OCVTA)
நான் பின்னோக்கித் தள்ளப்பட்டு, விழப்போனேன்; ஆனால் யெகோவாவோ எனக்கு உதவி செய்தார்.
சங்கீதம் 118 : 14 (OCVTA)
யெகோவா என் பெலமும், என் பாடலுமாய் இருக்கிறார்; அவரே எனக்கு இரட்சிப்புமானார்.
சங்கீதம் 118 : 15 (OCVTA)
நீதிமான்களின் கூடாரங்களில், வெற்றியின் மகிழ்ச்சிக் குரல் திரும்பத்திரும்ப ஒலிக்கின்றன: “யெகோவாவின் வலதுகரம் வல்லமையான செயல்களைச் செய்திருக்கிறது.
சங்கீதம் 118 : 16 (OCVTA)
யெகோவாவின் வலதுகரம் உயர்ந்திருக்கிறது; யெகோவாவின் வலதுகரம் வல்லமையான காரியங்களைச் செய்திருக்கிறது.”
சங்கீதம் 118 : 17 (OCVTA)
நான் வாழுவேன், சாகமாட்டேன். நான் வாழ்ந்து யெகோவா செய்தவற்றை அறிவிப்பேன்.
சங்கீதம் 118 : 18 (OCVTA)
யெகோவா என்னைக் கடுமையாகத் தண்டித்தார், ஆனாலும் அவர் என்னை மரணத்திற்கு ஒப்புக்கொடுக்கவில்லை.
சங்கீதம் 118 : 19 (OCVTA)
நீதியின் வாசல்களை* நீதியின் வாசல்களை அல்லது இறைவனுடைய மக்கள் செல்லும் ஆலய வாசல். எனக்காகத் திறவுங்கள்; நான் உள்ளே சென்று யெகோவாவுக்கு நன்றி செலுத்துவேன்.
சங்கீதம் 118 : 20 (OCVTA)
இதுவே யெகோவாவின் வாசல்; நீதிமான்கள் அதின் உள்ளே செல்வார்கள்.
சங்கீதம் 118 : 21 (OCVTA)
நீர் எனக்குப் பதிலளித்தபடியால், நான் உமக்கு நன்றி செலுத்துகிறேன்; என் இரட்சிப்பு நீரே.
சங்கீதம் 118 : 22 (OCVTA)
வீடு கட்டுகிறவர்கள் புறக்கணித்த கல்லே மூலைக்குத் தலைக்கல்லாயிற்று.
சங்கீதம் 118 : 23 (OCVTA)
யெகோவாவே இதைச் செய்தார், இது நமது கண்களுக்கு ஆச்சரியமாக இருக்கிறது.
சங்கீதம் 118 : 24 (OCVTA)
யெகோவா உண்டாக்கின நாள் இதுவே; இதிலே நாம் மகிழ்ந்து களிகூருவோம்.
சங்கீதம் 118 : 25 (OCVTA)
யெகோவாவே, எங்களை இரட்சியும்; யெகோவாவே, எங்களுக்கு வெற்றியைத் தாரும்.
சங்கீதம் 118 : 26 (OCVTA)
யெகோவாவின் பெயரில் வருகிறவர் ஆசீர்வதிக்கப்பட்டவர்; யெகோவாவினுடைய ஆலயத்திலிருந்து உங்களை ஆசீர்வதிக்கிறோம்.
சங்கீதம் 118 : 27 (OCVTA)
யெகோவாவே இறைவன், அவர் தமது ஒளியை நம்மேல் பிரகாசிக்கச் செய்திருக்கிறார்; பண்டிகை பலியைக் கையில் எடுத்துக்கொண்டு, பலிபீடத்தின் கொம்புகளில் கயிற்றைக் கட்டி ஊர்வலத்தில் கலந்துகொள்ளுங்கள்.
சங்கீதம் 118 : 28 (OCVTA)
நீரே என் இறைவன், நான் உமக்கு நன்றி செலுத்துவேன்; நீரே என் இறைவன், நான் உம்மைப் புகழ்ந்து உயர்த்துவேன்.
சங்கீதம் 118 : 29 (OCVTA)
யெகோவாவுக்கு நன்றி செலுத்துங்கள், அவர் நல்லவர்; அவருடைய அன்பு என்றென்றும் நிலைத்திருக்கிறது.
❮
❯
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29