சங்கீதம் 114 : 1 (OCVTA)
இஸ்ரயேலர் எகிப்திலிருந்து வந்தபோது, யாக்கோபின் குடும்பத்தார் வேறுநாட்டைச் சேர்ந்த மக்களிடமிருந்து வெளியே வந்தபோது,
சங்கீதம் 114 : 2 (OCVTA)
யூதா, இறைவனின் பரிசுத்த இடமாயிற்று; இஸ்ரயேல் அவருடைய அரசாட்சி ஆயிற்று.
சங்கீதம் 114 : 3 (OCVTA)
கடல் அவர்களைக் கண்டு ஓடி ஒதுங்கியது; யோர்தான் நதி அதின் வழியை மாற்றியது.
சங்கீதம் 114 : 4 (OCVTA)
மலைகள் செம்மறியாட்டுக் கடாக்களைப்போலவும், குன்றுகள் ஆட்டுக்குட்டிகள்போலவும் துள்ளின.
சங்கீதம் 114 : 5 (OCVTA)
கடலே, நீ விலகி ஒதுங்கியது ஏன்? யோர்தான் நதியே, நீ ஓடாமல் நின்றது ஏன்?
சங்கீதம் 114 : 6 (OCVTA)
மலைகளே, நீங்கள் செம்மறியாட்டுக் கடாக்களைப்போலவும், குன்றுகளே, நீங்கள் செம்மறியாட்டுக் குட்டிகளைப் போலவும் துள்ளியது ஏன்?
சங்கீதம் 114 : 7 (OCVTA)
பூமியே, யெகோவாவின் சமுகத்தில் நடுங்கு, யாக்கோபின் இறைவனின் சமுகத்தில் நடுங்கு.
சங்கீதம் 114 : 8 (OCVTA)
அவர் கற்பாறையைக் குளமாகவும், கடினமான கற்பாறையை நீரூற்றுகளாகவும் மாற்றினாரே.

1 2 3 4 5 6 7 8