சங்கீதம் 113 : 1 (OCVTA)
அல்லேலூயா, யெகோவாவின் பணியாட்களே, துதியுங்கள்; யெகோவாவினுடைய பெயரைத் துதியுங்கள்.
சங்கீதம் 113 : 2 (OCVTA)
யெகோவாவின் பெயர் இப்பொழுதும், எப்பொழுதும் துதிக்கப்படட்டும்.
சங்கீதம் 113 : 3 (OCVTA)
சூரியன் உதிக்கும் இடத்திலிருந்து அது மறையும் இடம்வரை யெகோவாவினுடைய பெயர் துதிக்கப்படட்டும்.
சங்கீதம் 113 : 4 (OCVTA)
யெகோவா எல்லா நாடுகளுக்கும் மேலாக புகழ்ந்து உயர்த்தப்பட்டிருக்கிறார்; அவருடைய மகிமை வானங்களுக்கு மேலாக இருக்கிறது.
சங்கீதம் 113 : 5 (OCVTA)
நம்முடைய இறைவனாகிய யெகோவாவைப்போல் யாருண்டு? உன்னதத்தின் சிங்காசனத்தில் அமர்ந்திருக்கிற அவரைப்போல் யார் உண்டு?
சங்கீதம் 113 : 6 (OCVTA)
வானங்களையும் பூமியையும் பார்க்கும்படி தம்மைத் தாழ்த்துகிற அவரைப்போல் யாருண்டு?
சங்கீதம் 113 : 7 (OCVTA)
அவர் ஏழைகளைத் தூசியிலிருந்து உயர்த்துகிறார், எளியவர்களைச் சாம்பற் குவியலில் இருந்து தூக்கிவிடுகிறார்.
சங்கீதம் 113 : 8 (OCVTA)
அவர் தமது மக்களைப் பிரபுக்களோடு அமரப்பண்ணுகிறார்.
சங்கீதம் 113 : 9 (OCVTA)
அவர் பிள்ளைப்பேறற்ற பெண்ணை பிள்ளைகளைப் பெறும் மகிழ்ச்சியுள்ள தாயாக்கி, அவளுடைய வீட்டிலே குடியிருக்கச்செய்கிறார். அல்லேலூயா.

1 2 3 4 5 6 7 8 9