சங்கீதம் 110 : 1 (OCVTA)
யெகோவா, என் ஆண்டவரிடம் சொன்னதாவது: “நான் உமது பகைவரை உமது கால்களுக்குப் பாதபடி ஆக்கும்வரை நீர் என் வலதுபக்கத்தில் அமர்ந்திரும்.”
சங்கீதம் 110 : 2 (OCVTA)
யெகோவா உமது வல்லமையான செங்கோலை சீயோனிலிருந்து விரிவுபடுத்துவார்; “நீர் உமது பகைவரின் மத்தியில் ஆளுகை செய்வீர்!”
சங்கீதம் 110 : 3 (OCVTA)
உமது மக்கள் உமது யுத்தத்தின் நாளில், தாங்களாகவே முன்வருவார்கள்; அதிகாலையின் கருப்பையிலிருந்து வரும் பனியைப்போல் உமது வாலிபர்கள் பரிசுத்த அணிவகுப்புடன் வருவார்கள்.
சங்கீதம் 110 : 4 (OCVTA)
“மெல்கிசேதேக்கின் முறைமையின்படி, நீர் என்றென்றைக்கும் ஆசாரியராகவே இருக்கிறீர்”* எபி. 5:6 என்று யெகோவா ஆணையிட்டிருக்கிறார்; அவர் தமது மனதை மாற்றமாட்டார்.
சங்கீதம் 110 : 5 (OCVTA)
யெகோவா உமது வலதுபக்கத்தில் இருக்கிறார்; அவர் தமது கோபத்தின் நாளில் அரசர்களை தண்டிப்பார்.
சங்கீதம் 110 : 6 (OCVTA)
அவர் பிற நாடுகளை நியாயந்தீர்ப்பார்; இறந்தவர்களைக் குவித்துப் பூமி முழுவதிலும் உள்ள ஆளுநர்களை தண்டிப்பார்.
சங்கீதம் 110 : 7 (OCVTA)
வழியில் உள்ள நீரோடையிலிருந்து அவர் தண்ணீர் குடிப்பார்; ஆகையால் அவர் தமது தலைநிமிர்ந்து நிற்பார்.
❮
❯
1
2
3
4
5
6
7