சங்கீதம் 100 : 1 (OCVTA)
பூமியிலுள்ளவர்களே, எல்லோரும் மகிழ்ச்சியுடன் யெகோவாவை ஆர்ப்பரியுங்கள்.
சங்கீதம் 100 : 2 (OCVTA)
மகிழ்ச்சியுடன் யெகோவாவை வழிபடுங்கள், மகிழ்ச்சிப் பாடல்களோடு அவர்முன் வாருங்கள்.
சங்கீதம் 100 : 3 (OCVTA)
யெகோவாவே இறைவன் என்று அறியுங்கள். அவரே நம்மை உண்டாக்கினார், நாம் அவருடையவர்கள்; நாம் அவருடைய மக்கள், அவருடைய மேய்ச்சலின் ஆடுகள்.
சங்கீதம் 100 : 4 (OCVTA)
அவருடைய வாசல்களில் நன்றியோடும், அவருடைய ஆலய முற்றங்களில் துதியோடும், உட்செல்லுங்கள் அவருக்கு நன்றி செலுத்தி, அவருடைய பெயரைத் துதியுங்கள்.
சங்கீதம் 100 : 5 (OCVTA)
யெகோவா நல்லவர், அவருடைய அன்பு என்றென்றைக்கும் நிலைத்திருக்கிறது; அவருடைய உண்மை எல்லாத் தலைமுறைகளுக்கும் தொடர்ந்து வருகிறது.

1 2 3 4 5