நீதிமொழிகள் 5 : 1 (OCVTA)
விபசாரத்தைக் குறித்து எச்சரிக்கை என் மகனே, என் ஞானத்தைக் கவனத்தில்கொள், எனது புத்திமதிகளை மிகக் கவனமாகக் கேள்.
நீதிமொழிகள் 5 : 2 (OCVTA)
அப்பொழுது அறிவுடைமையுடன் நடந்துகொள்வாய்; உன் உதடுகள் அறிவைப் பாதுகாக்கும்.
நீதிமொழிகள் 5 : 3 (OCVTA)
ஏனெனில் விபசாரியின் உதடுகள் தேனைச் சிந்தும், அவளுடைய பேச்சு எண்ணெயைவிட மிருதுவாயிருக்கும்;
நீதிமொழிகள் 5 : 4 (OCVTA)
ஆனால் முடிவோ, அவள் வேம்பைப்போல் கசப்பாயும், இருபக்கமும் கூர்மையுள்ள வாளைப்போலவும் இருப்பாள்.
நீதிமொழிகள் 5 : 5 (OCVTA)
அவளுடைய பாதங்கள் மரணத்திற்குச் செல்கின்றன; அவள் காலடிகளோ நேரே பாதாளத்திற்கு வழிநடத்துகின்றன.
நீதிமொழிகள் 5 : 6 (OCVTA)
அவளோ வாழ்வின் வழியைப் பற்றிச் சிந்திப்பதேயில்லை, அவளுடைய பாதைகள் கோணலானவை, அவள் அதை அறியாதிருக்கிறாள்.
நீதிமொழிகள் 5 : 7 (OCVTA)
ஆகவே என் பிள்ளைகளே, எனக்குச் செவிகொடுங்கள்; நான் சொல்வதைவிட்டு விலகவேண்டாம்.
நீதிமொழிகள் 5 : 8 (OCVTA)
அவளுக்குத் தூரமான வழியில் நடங்கள், அவளுடைய வீட்டின் வாசலையும் மிதிக்கவேண்டாம்.
நீதிமொழிகள் 5 : 9 (OCVTA)
இல்லையென்றால், உங்களுடைய கனத்தை மற்றவர்களிடமும் உங்களுடைய வாழ்நாட்களை கொடூரர்களிடமும் இழந்துவிடுவீர்கள்;
நீதிமொழிகள் 5 : 10 (OCVTA)
வேறுநாட்டைச் சேர்ந்தவர் உங்கள் செல்வத்தை அனுபவிப்பார்கள், உங்களுடைய கடும் உழைப்பு இன்னொருவனின் வீட்டைச் செல்வச் சிறப்பாக்கும்.
நீதிமொழிகள் 5 : 11 (OCVTA)
உங்களுடைய வாழ்க்கையின் முடிவில், உங்கள் தசையும் உடலும் நலியும்போது வேதனையால் புலம்புவீர்கள்.
நீதிமொழிகள் 5 : 12 (OCVTA)
அப்பொழுது நீங்கள், “ஐயோ, நான் அறிவுரையை வெறுத்தேனே, திருத்தத்தை எனது இருதயம் அலட்சியம் செய்ததே!
நீதிமொழிகள் 5 : 13 (OCVTA)
நான் எனக்கு போதித்தவர்களுக்குக் கீழ்ப்படியவில்லையே, எனக்கு அறிவுரை சொன்னவர்களுக்கு செவிகொடுக்கவில்லையே.
நீதிமொழிகள் 5 : 14 (OCVTA)
நான் இறைவனின் மக்கள் கூட்டத்தில் தீராத பிரச்சனைக்குள்ளாகி விட்டேனே” என்று சொல்வீர்கள்.
நீதிமொழிகள் 5 : 15 (OCVTA)
நீ உனது சொந்தக் கிணற்றின் தண்ணீரையே குடி, நீ உனது சொந்த நீரூற்றிலிருந்தே தண்ணீரைப் பருகு.
நீதிமொழிகள் 5 : 16 (OCVTA)
உனது ஊற்றுகள் வீதிகளில் வழிந்தோட வேண்டுமோ? உனது நீரோடைகள் பொது இடங்களில் ஓடவேண்டுமோ?
நீதிமொழிகள் 5 : 17 (OCVTA)
அவை உன்னுடையவைகளாக மட்டுமே இருக்கட்டும், அவற்றை அறியாதவருடன் பகிர்ந்துகொள்ளக் கூடாது.
நீதிமொழிகள் 5 : 18 (OCVTA)
உனது ஊற்று ஆசீர்வதிக்கப்படுவதாக, நீ உனது வாலிப காலத்தின் மனைவியுடன் மகிழ்ந்திருப்பாயாக.
நீதிமொழிகள் 5 : 19 (OCVTA)
அவள் உனக்கு அன்பான பெண்மான் போலவும் அழகியமான் போலவும் இருப்பாளாக, அவளுடைய மார்பகங்களே எந்நாளும் உன்னைத் திருப்தியாக்கட்டும்; அவளுடைய அன்பினால் நீ எப்பொழுதும் கவரப்படுவாயாக.
நீதிமொழிகள் 5 : 20 (OCVTA)
என் மகனே, ஒரு விபசாரியினால் நீ ஏன் கவரப்படவேண்டும்? இன்னொருவனின் மனைவியின் மார்பை நீ ஏன் தழுவவேண்டும்?
நீதிமொழிகள் 5 : 21 (OCVTA)
மனிதரின் வழிகள் எல்லாம் யெகோவாவுக்குமுன் வெளியரங்கமாய் இருக்கின்றன, அவர்களுடைய பாதைகளை எல்லாம் அவர் ஆராய்ந்து பார்க்கிறார்.
நீதிமொழிகள் 5 : 22 (OCVTA)
கொடியவர்கள் தம்முடைய தீயசெயல்களாலே அகப்படுகிறார்கள்; அவர்களுடைய பாவக்கயிறுகள் அவர்களை இறுக்கிக் கட்டுகின்றன.
நீதிமொழிகள் 5 : 23 (OCVTA)
அவர்கள் நற்கட்டுப்பாடு இல்லாததினால் சாவார்கள், அவர்களுடைய மூடத்தனத்தின் மிகுதியினால் வழிவிலகிப் போவார்கள்.
❮
❯
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23