நீதிமொழிகள் 31 : 1 (OCVTA)
அரசன் லேமுயேலின் வார்த்தைகள்: இது அவனுடைய தாயினால் அவனுக்குப் போதிக்கப்பட்ட இறைவாக்கு.
நீதிமொழிகள் 31 : 2 (OCVTA)
என் மகனே! என் கர்ப்பத்தின் மகனே! நேர்த்திக்கடன் மூலம் நான் பெற்ற மகனே! கேள்,
நீதிமொழிகள் 31 : 3 (OCVTA)
நீ பெண்களிடம் உன் பெலனைக் கொடுக்காதே, அரசர்களை அழிப்பவர்களிடம் சேராதே.
நீதிமொழிகள் 31 : 4 (OCVTA)
லேமுயேலே, திராட்சைமது அருந்துவது அரசர்களுக்கு உகந்ததல்ல, அது அரசர்களுக்குத் தகுந்ததல்ல, ஆளுநர்கள் மதுபானத்தை விரும்புவது நல்லதல்ல.
நீதிமொழிகள் 31 : 5 (OCVTA)
அரசர்கள் குடிப்பதினால் சட்டத்தை மறந்து போவார்கள் ஒடுக்கப்பட்டவர்களின் சட்ட உரிமைகளை வழங்க மறுப்பார்கள்.
நீதிமொழிகள் 31 : 6 (OCVTA)
அழிந்து போகிறவர்களுக்கு மதுபானத்தைக் கொடு, வேதனையிலுள்ளவர்களுக்கு திராட்சை மதுவைக் கொடு!
நீதிமொழிகள் 31 : 7 (OCVTA)
அவர்கள் குடித்துத் தங்கள் வறுமையை மறக்கட்டும், தங்கள் துயரத்தை ஒருபோதும் நினையாதிருக்கட்டும்.
நீதிமொழிகள் 31 : 8 (OCVTA)
தங்களுக்காகப் பேச முடியாதவர்களுக்காகப் பேசு, ஆதரவற்றோர்களின் உரிமைகளுக்காகப் பேசு.
நீதிமொழிகள் 31 : 9 (OCVTA)
அவர்களுக்காகப் பேசி, நியாயமாகத் தீர்ப்பு வழங்கு; ஏழைகள் மற்றும் தேவையுள்ளவர்களின் உரிமைகளைக் காப்பாற்று. முடிவுரை: நற்குணமுடைய மனைவி
நீதிமொழிகள் 31 : 10 (OCVTA)
நற்குணமுடைய மனைவியை யாரால் கண்டடைய முடியும்? அவள் மதிப்போ பவளக்கற்களைவிட மிகவும் உயர்ந்தது.
நீதிமொழிகள் 31 : 11 (OCVTA)
அவளின் கணவன் அவளில் முழுநம்பிக்கை வைத்திருக்கிறான்; அவனுக்கு செல்வாக்கு குறையாது.
நீதிமொழிகள் 31 : 12 (OCVTA)
அவள் தன் வாழ்நாட்கள் முழுவதும் அவனுக்குத் தீமையை அல்ல, நன்மையையே கொண்டுவருகிறாள்.
நீதிமொழிகள் 31 : 13 (OCVTA)
அவள் கம்பளியையும் சணலையும் தெரிந்தெடுத்து, மிக ஆர்வத்துடன் தன் கைகளினால் வேலை செய்கிறாள்.
நீதிமொழிகள் 31 : 14 (OCVTA)
அவள் தூர இடத்திலிருந்து உணவுப் பொருட்களை ஏற்றிவரும் வியாபாரக் கப்பலைப்போல் இருக்கிறாள்.
நீதிமொழிகள் 31 : 15 (OCVTA)
அவள் விடியுமுன்னே இருட்டோடே எழும்புகிறாள்; அவள் தன் குடும்பத்திற்கு உணவை ஆயத்தப்படுத்தி, தன் வேலைக்காரிகளுக்கு பகிர்ந்து கொடுக்கிறாள்.
நீதிமொழிகள் 31 : 16 (OCVTA)
அவள் ஒரு வயலைப்பற்றிக் கருத்தாய் விசாரித்து, அதை வாங்குகிறாள்; அவள் தன் வருமானத்தினால் திராட்சைத் தோட்டத்தை உண்டாக்குகிறாள்.
நீதிமொழிகள் 31 : 17 (OCVTA)
மிகவும் சுறுசுறுப்புடன் தன் வேலைகளைச் செய்கிறாள்; அதைச் செய்ய தனது கைகளை பலப்படுத்துகிறாள்.
நீதிமொழிகள் 31 : 18 (OCVTA)
தன் தொழில் இலாபகரமாய் இருக்கும்படி பார்த்துக்கொள்கிறாள்; அவளுடைய விளக்கு இரவிலும் அணைவதில்லை* இரவுவரைக் கடினமாக உழைக்கிறாள் என்று அர்த்தம். .
நீதிமொழிகள் 31 : 19 (OCVTA)
அவள் தன் கைகளில் இராட்டினத்தைப் பிடித்துக்கொண்டு, தன் விரல்களினால் நூற்பந்தைப் பற்றிக்கொள்கிறாள்.
நீதிமொழிகள் 31 : 20 (OCVTA)
அவள் ஏழைகளுக்குத் தன் கைகளைத் திறந்து, தேவையுள்ளோர்களுக்குத் தன் உதவிக் கரத்தை நீட்டுகிறாள்.
நீதிமொழிகள் 31 : 21 (OCVTA)
அவளின் வீட்டார் எல்லோருக்கும் குளிர்க்கால உடை இருப்பதால், உறைபனிக்காலம் வரும்போது அவள் பயப்படமாட்டாள்.
நீதிமொழிகள் 31 : 22 (OCVTA)
அவள் தனது படுக்கைக்குரிய போர்வையைத் தானே நெய்கிறாள்; சிறந்த பட்டாடை மற்றும் பலவண்ண உடைகளையும் உடுத்திக்கொள்கிறாள்.
நீதிமொழிகள் 31 : 23 (OCVTA)
அவளுடைய கணவன் பட்டண வாசலில், குடிமக்களின் தலைவர்களோடு உட்கார்ந்திருக்கையில் மதிக்கப்படுகிறான்.
நீதிமொழிகள் 31 : 24 (OCVTA)
அவள் சிறந்த பட்டாடைகளை நெய்து அவற்றை விற்கிறாள், அவள் இடைக் கச்சைகளையும் செய்து வியாபாரிகளுக்கு விநியோகம் செய்கிறாள்.
நீதிமொழிகள் 31 : 25 (OCVTA)
அவள் பெலத்தையும் கவுரவத்தையும் உடுத்தியிருக்கிறாள்; வருங்காலத்தை மகிழ்வுடன் எதிர்நோக்குகிறாள்.
நீதிமொழிகள் 31 : 26 (OCVTA)
அவள் ஞானமாய்ப் பேசுகிறாள், அவளுடைய நாவில் தயவான அறிவுரைகள் இருக்கின்றன.
நீதிமொழிகள் 31 : 27 (OCVTA)
அவள் தன் வீட்டுக் காரியங்கள்மேல் எப்போதும் அக்கறையாயிருக்கிறாள்; அவள் சோம்பலாயிருந்து உணவுக்காக எதிர்பார்த்து இருப்பதில்லை.
நீதிமொழிகள் 31 : 28 (OCVTA)
அவளுடைய பிள்ளைகள் எழுந்து அவளை, “ஆசீர்வதிக்கப்பட்டவள்” என்கிறார்கள்; அவளுடைய கணவனும் அவளை இப்படிப் புகழ்கிறான்:
நீதிமொழிகள் 31 : 29 (OCVTA)
“அநேகம் பெண்கள் சிறப்பான செயல்களைச் செய்கிறார்கள், ஆனால் நீயோ அவர்கள் எல்லோரிலும் உயர்வானவள்.”
நீதிமொழிகள் 31 : 30 (OCVTA)
கவர்ச்சித் தோற்றம் வஞ்சகமானது, அழகும் அழிந்துபோகும்; ஆனால் யெகோவாவுக்குப் பயந்து நடக்கிற பெண்ணே புகழப்படத்தக்கவள்.
நீதிமொழிகள் 31 : 31 (OCVTA)
அவளுடைய கைகளின் பலனுக்காக அவளைப் பாராட்டுங்கள், அவளுடைய செயல்கள் பட்டண வாசலில் அவளுக்குப் புகழ்ச்சியைக் கொண்டுவரட்டும்.

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31