நீதிமொழிகள் 18 : 1 (OCVTA)
நட்புணர்வு இல்லாதவர்கள் சுயநலத்தையே தேடுகிறார்கள், [QBR2] அவர்கள் எல்லாவித சரியான நிதானிப்புகளையும் எதிர்த்து விவாதிக்கிறார்கள்.
நீதிமொழிகள் 18 : 2 (OCVTA)
மூடர்கள் விளங்கிக்கொள்வதில் மகிழ்ச்சி கொள்வதில்லை, [QBR2] ஆனால் தங்கள் சொந்த அபிப்பிராயங்களை வெளிப்படுத்துவதில் மட்டும் பெருமகிழ்ச்சியடைகிறார்கள்.
நீதிமொழிகள் 18 : 3 (OCVTA)
கொடுமை வரும்போது அவமதிப்பும் வரும், [QBR2] வெட்கத்துடன் அவமானமும் வரும்.
நீதிமொழிகள் 18 : 4 (OCVTA)
வாயின் வார்த்தைகள் ஆழமான கடல், [QBR2] ஆனால் ஞானத்தின் ஊற்று பாய்ந்தோடும் நீரோடை.
நீதிமொழிகள் 18 : 5 (OCVTA)
கொடியவர்களுக்கு பாரபட்சம் காட்டுவதும், [QBR2] குற்றமில்லாதவர்களுக்கு நீதியை வழங்க மறுப்பதும் நல்லதல்ல.
நீதிமொழிகள் 18 : 6 (OCVTA)
மதியீனர்கள் பேச ஆரம்பித்தால் வாக்குவாதம் பிறக்கும், [QBR2] அவர்களுடைய வாயே அடிவாங்க வைக்கும்.
நீதிமொழிகள் 18 : 7 (OCVTA)
மதியீனருடைய வாய் அவர்களுக்கு அழிவு; [QBR2] அவர்களுடைய உதடுகளோ அவர்களுடைய வாழ்விற்கு கண்ணி.
நீதிமொழிகள் 18 : 8 (OCVTA)
புறங்கூறுகிறவர்களின் வார்த்தைகள் சுவையான உணவைப் போன்றவை; [QBR2] அவை மனிதருடைய உள்ளத்தின் ஆழத்தில் பதிந்துவிடும்.
நீதிமொழிகள் 18 : 9 (OCVTA)
தன்னுடைய வேலையில் சோம்பலாய் இருப்பவன் [QBR2] அழிப்பவனுக்குச் சகோதரன்.
நீதிமொழிகள் 18 : 10 (OCVTA)
யெகோவாவினுடைய பெயர் பலமான கோபுரம்; [QBR2] நீதிமான்கள் அதற்குள் ஓடி பாதுகாப்பாய் இருப்பார்கள்.
நீதிமொழிகள் 18 : 11 (OCVTA)
பணக்காரர்களின் செல்வம் அவர்களுடைய அரணான பட்டணம்; [QBR2] அதை அவர்கள் பாதுகாப்பான சுவரென்று எண்ணுகிறார்கள்.
நீதிமொழிகள் 18 : 12 (OCVTA)
வீழ்ச்சிக்கு முன்னால் இருதயம் பெருமையடைகிறது, [QBR2] ஆனால் மேன்மைக்கு முன்பு மனத்தாழ்மை வருகிறது.
நீதிமொழிகள் 18 : 13 (OCVTA)
கவனித்துக் கேட்குமுன் பதில் சொல்வது, [QBR2] முட்டாள்தனமாகவும் வெட்கமாகவும் இருக்கும்.
நீதிமொழிகள் 18 : 14 (OCVTA)
மனவலிமையால் நோயுற்ற உடலைத் தாங்கமுடியும்; [QBR2] மனம் உடைந்தால் யாரால் சகிக்கமுடியும்?
நீதிமொழிகள் 18 : 15 (OCVTA)
பகுத்தறியும் இருதயம் அறிவைச் சம்பாதிக்கிறது; [QBR2] ஞானமுள்ளவர்களின் காதுகள் அறிவை நாடும்.
நீதிமொழிகள் 18 : 16 (OCVTA)
அன்பளிப்பு அதைக் கொடுப்பவர்களுக்கு வழி திறக்கிறது; [QBR2] அது அவர்களை உயர்ந்தோருக்கு முன்பாகக் கொண்டுவருகிறது.
நீதிமொழிகள் 18 : 17 (OCVTA)
வழக்கில் எதிரி வந்து விசாரணை செய்யும் வரையே [QBR2] முதலில் பேசுபவர்கள் நியாயமானவர்கள்போல் காணப்படுவார்கள்.
நீதிமொழிகள் 18 : 18 (OCVTA)
சீட்டுப்போடுதல் சச்சரவுகளைத் தீர்க்கும், [QBR2] வலுவான எதிரிகளுக்கு இடையில் அது சிக்கலைத் தீர்க்கும்.
நீதிமொழிகள் 18 : 19 (OCVTA)
அரண்சூழ்ந்த பட்டணத்தைக் கைப்பற்றுவதைப் பார்க்கிலும், மனதைப் புண்படுத்திய சகோதரனை சமாதானப்படுத்துவது கடினம்; [QBR2] விவாதங்கள் தாழ்ப்பாள் இடப்பட்ட கோட்டை வாசலைப் போலிருக்கின்றன.
நீதிமொழிகள் 18 : 20 (OCVTA)
அவரவர் வாயின் பலனால் அவர்களுடைய வயிறு நிரம்பும்; [QBR2] அவர்களின் உதட்டின் வார்த்தைகளால் அவர்கள் திருப்தியடையலாம்.
நீதிமொழிகள் 18 : 21 (OCVTA)
வாழ்வும் சாவும் நாவின் சொற்களில் இருக்கிறது; [QBR2] நற்சொற்களை நேசிப்பவர்கள் அதின் பலனைச் சாப்பிடுவார்கள்.
நீதிமொழிகள் 18 : 22 (OCVTA)
மனைவியைப் பெறுகிறவன் நன்மையைப் பெற்றுக்கொள்கிறான்; [QBR2] அவன் யெகோவாவிடத்தில் தயவையும் பெறுவான்.
நீதிமொழிகள் 18 : 23 (OCVTA)
ஏழைகள் இரக்கத்திற்காக கெஞ்சுகிறார்கள்; [QBR2] ஆனால் பணக்காரர்களோ கடுமையாகப் பதிலளிக்கிறார்கள்.
நீதிமொழிகள் 18 : 24 (OCVTA)
நம்பக்கூடாத நண்பர்கள் விரைவில் அழிவைக் கொண்டுவருவார்கள்; [QBR2] ஆனால் சகோதரனைவிட நெருங்கிய நண்பரும் உண்டு. [PE]
❮
❯