எண்ணாகமம் 33 : 1 (OCVTA)
{இஸ்ரயேலரின் பயணம்} [PS] இஸ்ரயேலர், மோசே ஆரோன் என்பவர்களின் தலைமையின்கீழ் தங்கள் பிரிவுகளின்படியே எகிப்தைவிட்டு வெளியேறியபோது, அவர்கள் பயணத்தில் தரித்துநின்ற இடங்களாவன.
எண்ணாகமம் 33 : 2 (OCVTA)
யெகோவாவின் கட்டளைப்படியே, இஸ்ரயேலர் பயணித்த பயணங்களை, மோசே எழுதிவைத்தான். அவர்கள் பயணித்த பயணங்களின் விவரங்கள்:
எண்ணாகமம் 33 : 3 (OCVTA)
பஸ்காவுக்கு அடுத்தநாளான முதலாம் மாதத்தின் பதினைந்தாம் நாளில் [*எபிரெய நாட்காட்டியில் முதல் மாதம் மார்ச் நடுப்பகுதி முதல் ஏப்ரல் நடுப்பகுதி வரை ஒத்திருக்கிறது. பஸ்கா முடிந்த மறுநாளே முதல் மாதத்தின் பதினைந்தாம் நாளைக் குறிக்கிறது.] இஸ்ரயேலர் ராமசேஸ் நகரத்தை விட்டுப் புறப்பட்டார்கள். எல்லா எகிப்தியர்களும் பார்த்துக்கொண்டிருக்கையிலேயே அவர்கள் துணிச்சலுடன் அணிவகுத்து வெளியே போனார்கள்.
எண்ணாகமம் 33 : 4 (OCVTA)
எகிப்தியர்களோ தங்களுக்குள்ளே யெகோவா சாகடித்த முதற்பேறானவர்களையெல்லாம் அடக்கம் செய்துகொண்டிருந்தார்கள். ஏனெனில், யெகோவா அவர்களுடைய தெய்வங்களின்மேல் நியாயத்தீர்ப்பைக் கொண்டுவந்திருந்தார்.
எண்ணாகமம் 33 : 5 (OCVTA)
இஸ்ரயேலர் ராமசேஸை விட்டுப் புறப்பட்டு, சுக்கோத்தில் முகாமிட்டார்கள்.
எண்ணாகமம் 33 : 6 (OCVTA)
சுக்கோத்திலிருந்து புறப்பட்டு, பாலைவனத்தின் ஓரமாயுள்ள ஏத்தாமில் முகாமிட்டார்கள்.
எண்ணாகமம் 33 : 7 (OCVTA)
ஏத்தாமிலிருந்து புறப்பட்டு, பாகால் செபோனுக்கு கிழக்கேயுள்ள பிகாஈரோத் பள்ளத்தாக்கிற்குத் திரும்பி, மிக்தோலுக்கு அருகே முகாமிட்டார்கள்.
எண்ணாகமம் 33 : 8 (OCVTA)
ஈரோத் பள்ளத்தாக்கிலிருந்து புறப்பட்டு, கடலைக் கடந்து பாலைவனத்திற்குப் போய், ஏத்தாம் பாலைவனத்தில் மூன்றுநாள் பயணம்பண்ணி மாராவில் முகாமிட்டார்கள்.
எண்ணாகமம் 33 : 9 (OCVTA)
மாராவிலிருந்து புறப்பட்டு, ஏலிமுக்கு வந்தார்கள். அங்கே பன்னிரண்டு நீரூற்றுக்களும், எழுபது பேரீச்சமரங்களும் இருந்தன. அங்கே அவர்கள் முகாமிட்டார்கள்.
எண்ணாகமம் 33 : 10 (OCVTA)
ஏலிமிலிருந்து புறப்பட்டு, செங்கடலுக்கு அருகே முகாமிட்டார்கள்.
எண்ணாகமம் 33 : 11 (OCVTA)
செங்கடலில் இருந்து புறப்பட்டு, சீன் பாலைவனத்தில் முகாமிட்டார்கள்.
எண்ணாகமம் 33 : 12 (OCVTA)
சீன் பாலைவனத்திலிருந்து புறப்பட்டு, தொப்காவில் முகாமிட்டார்கள்.
எண்ணாகமம் 33 : 13 (OCVTA)
தொப்காவிலிருந்து புறப்பட்டு, ஆலூசில் முகாமிட்டார்கள்.
எண்ணாகமம் 33 : 14 (OCVTA)
ஆலூசிலிருந்து புறப்பட்டு, ரெவிதீமில் முகாமிட்டார்கள். அங்கே மக்களுக்குக் குடிக்கத் தண்ணீர் இருக்கவில்லை.
எண்ணாகமம் 33 : 15 (OCVTA)
ரெவிதீமிலிருந்து புறப்பட்டு, சீனாய் பாலைவனத்தில் முகாமிட்டார்கள்.
எண்ணாகமம் 33 : 16 (OCVTA)
சீனாய் பாலைவனத்திலிருந்து புறப்பட்டு, கிப்ரோத் அத்தாவில் முகாமிட்டார்கள்.
எண்ணாகமம் 33 : 17 (OCVTA)
கிப்ரோத் அத்தாவிலிருந்து புறப்பட்டு, ஆஸ்ரோத்தில் முகாமிட்டார்கள்.
எண்ணாகமம் 33 : 18 (OCVTA)
ஆஸ்ரோத்திலிருந்து புறப்பட்டு, ரித்மாவில் முகாமிட்டார்கள்.
எண்ணாகமம் 33 : 19 (OCVTA)
ரித்மாவிலிருந்து புறப்பட்டு, ரிம்மோன் பேரேசில் முகாமிட்டார்கள்.
எண்ணாகமம் 33 : 20 (OCVTA)
ரிம்மோன் பேரேசிலிருந்து புறப்பட்டு, லிப்னாவில் முகாமிட்டார்கள்.
எண்ணாகமம் 33 : 21 (OCVTA)
லிப்னாவிலிருந்து புறப்பட்டு, ரீசாவில் முகாமிட்டார்கள்.
எண்ணாகமம் 33 : 22 (OCVTA)
ரீசாவிலிருந்து புறப்பட்டு, கேலத்தாவில் முகாமிட்டார்கள்.
எண்ணாகமம் 33 : 23 (OCVTA)
கேலத்தாவிலிருந்து புறப்பட்டு, சாப்பேர் மலையில் முகாமிட்டார்கள்.
எண்ணாகமம் 33 : 24 (OCVTA)
சாப்பேர் மலையிலிருந்து புறப்பட்டு, ஆரதாவில் முகாமிட்டார்கள்.
எண்ணாகமம் 33 : 25 (OCVTA)
ஆரதாவிலிருந்து புறப்பட்டு, மக்கெலோத்தில் முகாமிட்டார்கள்.
எண்ணாகமம் 33 : 26 (OCVTA)
மக்கெலோத்திலிருந்து புறப்பட்டு, தாகாத்தில் முகாமிட்டார்கள்.
எண்ணாகமம் 33 : 27 (OCVTA)
தாகாத்திலிருந்து புறப்பட்டு, தாராகில் முகாமிட்டார்கள்.
எண்ணாகமம் 33 : 28 (OCVTA)
தாராகிலிருந்து புறப்பட்டு, மித்காவில் முகாமிட்டார்கள்.
எண்ணாகமம் 33 : 29 (OCVTA)
மித்காவிலிருந்து புறப்பட்டு, அஸ்மோனாவில் முகாமிட்டார்கள்.
எண்ணாகமம் 33 : 30 (OCVTA)
அஸ்மோனாவிலிருந்து புறப்பட்டு, மோசெரோத்தில் முகாமிட்டார்கள்.
எண்ணாகமம் 33 : 31 (OCVTA)
மோசெரோத்திலிருந்து புறப்பட்டு, பெனெயாக்கானில் முகாமிட்டார்கள்.
எண்ணாகமம் 33 : 32 (OCVTA)
பெனெயாக்கானிலிருந்து புறப்பட்டு கித்காத்தில் முகாமிட்டார்கள்.
எண்ணாகமம் 33 : 33 (OCVTA)
கித்காத்திலிருந்து புறப்பட்டு, யோத்பாத்தாவில் முகாமிட்டார்கள்.
எண்ணாகமம் 33 : 34 (OCVTA)
யோத்பாத்தாவிலிருந்து புறப்பட்டு, எப்ரோனாவில் முகாமிட்டார்கள்.
எண்ணாகமம் 33 : 35 (OCVTA)
எப்ரோனாவிலிருந்து புறப்பட்டு, எசியோன் கேபேரில் முகாமிட்டார்கள்.
எண்ணாகமம் 33 : 36 (OCVTA)
எசியோன் கேபேரிலிருந்து புறப்பட்டு, சீன் பாலைவனத்திலுள்ள காதேசில் முகாமிட்டார்கள்.
எண்ணாகமம் 33 : 37 (OCVTA)
காதேசிலிருந்து புறப்பட்டு, ஏதோமின் எல்லையிலுள்ள ஓர் மலையில் முகாமிட்டார்கள்.
எண்ணாகமம் 33 : 38 (OCVTA)
யெகோவாவின் கட்டளைப்படி ஆசாரியன் ஆரோன், “ஓர்” என்னும் மலையில் ஏறிப்போய், இஸ்ரயேலர் எகிப்திலிருந்து புறப்பட்ட நாற்பதாம் வருடம் ஐந்தாம் மாதம், முதலாம் நாளில் அங்கே இறந்தான்.
எண்ணாகமம் 33 : 39 (OCVTA)
“ஓர்” என்னும் மலையில் ஆரோன் இறந்தபோது அவனுக்கு வயது நூற்று இருபத்துமூன்று.
எண்ணாகமம் 33 : 40 (OCVTA)
கானானின் தெற்கு பகுதியில் வாழ்ந்த கானானிய அரசன் ஆராத், இஸ்ரயேலர் வருவதைப்பற்றிக் கேள்விப்பட்டான்.
எண்ணாகமம் 33 : 41 (OCVTA)
அவர்கள் ஓர் மலையில் இருந்து புறப்பட்டு, சல்மோனாவில் முகாமிட்டார்கள்.
எண்ணாகமம் 33 : 42 (OCVTA)
சல்மோனாவில் இருந்து புறப்பட்டு, பூனோனில் முகாமிட்டார்கள்;
எண்ணாகமம் 33 : 43 (OCVTA)
பூனோனில் இருந்து புறப்பட்டு, ஒபோத்தில் முகாமிட்டார்கள்.
எண்ணாகமம் 33 : 44 (OCVTA)
ஒபோத்தில் இருந்து புறப்பட்டு மோவாபின் எல்லையிலுள்ள அபாரீமின் மேடுகளில் முகாமிட்டார்கள்.
எண்ணாகமம் 33 : 45 (OCVTA)
அந்த இய்யாபாரீம் மேடுகளிலிருந்து புறப்பட்டு, தீபோன்காத்தில் முகாமிட்டார்கள்.
எண்ணாகமம் 33 : 46 (OCVTA)
தீபோன்காத்திலிருந்து புறப்பட்டு, அல்மோன் திப்லதாயில் முகாமிட்டார்கள்.
எண்ணாகமம் 33 : 47 (OCVTA)
அல்மோன் திப்லதாயில் இருந்து புறப்பட்டு, நேபோவுக்கு அருகேயுள்ள அபாரீம் மலைகளில் முகாமிட்டார்கள்.
எண்ணாகமம் 33 : 48 (OCVTA)
அபாரீம் மலைகளிலிருந்து புறப்பட்டு, எரிகோவுக்கு எதிரே யோர்தானுக்கு அண்மையில் மோவாப் சமவெளிகளில் முகாமிட்டார்கள்.
எண்ணாகமம் 33 : 49 (OCVTA)
மோவாப் சமவெளிகளில் யோர்தான் ஒரம் நெடுகிலும் பெத்யெசிமோத் தொடங்கி ஆபேல் சித்தீம்வரை முகாமிட்டார்கள். [PS]
எண்ணாகமம் 33 : 50 (OCVTA)
எரிகோவுக்கு எதிரே யோர்தானுக்கு அருகேயுள்ள மோவாபின் சமவெளிகளில் யெகோவா மோசேயுடன் பேசினார்.
எண்ணாகமம் 33 : 51 (OCVTA)
அவர் அவனிடம், “நீ இஸ்ரயேலருடன் பேசிச் சொல்லவேண்டியதாவது: நீங்கள் யோர்தானைக் கடந்து கானான் நாட்டிற்குப் போகும்போது,
எண்ணாகமம் 33 : 52 (OCVTA)
அங்கே உங்களுக்கு முன்பாக அந்நாட்டில் குடியிருக்கிறவர்களை எல்லாம் வெளியே துரத்திவிடுங்கள். அத்துடன் அவர்களுடைய செதுக்கப்பட்ட எல்லா சிலைகளையும், வார்ப்பிக்கப்பட்ட விக்கிரகங்களையும் அழித்து, உயர்ந்த மேடைகளையெல்லாம் உடைத்துவிடுங்கள்.
எண்ணாகமம் 33 : 53 (OCVTA)
நீங்கள் அந்நாட்டை உங்கள் உரிமையாக்கி அங்கே குடியேறுங்கள். ஏனெனில் அந்நாட்டை நீங்கள் உரிமையாக்கும்படி நான் அதை உங்களுக்குக் கொடுத்திருக்கிறேன்.
எண்ணாகமம் 33 : 54 (OCVTA)
நீங்கள் அந்நாட்டை உங்கள் வம்சங்களின் எண்ணிக்கையின்படியே பங்கிடுங்கள். பெரிய குழுவினருக்கு பெரிய உரிமைச்சொத்தையும், சிறிய குழுவினருக்குச் சிறிய உரிமைச்சொத்தையும் கொடுங்கள். சீட்டின்படி எது எவர்களுக்கு விழுகிறதோ அதுவே அவர்களுக்குரியதாகும். உங்கள் முற்பிதாக்களின் கோத்திரங்களின்படியே அதைப் பங்கிட்டுக்கொள்ளுங்கள். [PE][PS]
எண்ணாகமம் 33 : 55 (OCVTA)
“ ‘ஆனால் அந்நாட்டில் குடியிருப்பவர்களை நீங்கள் வெளியே துரத்திவிடாவிட்டால், நீங்கள் அங்கு விட்டுவிட்டவர்கள், உங்கள் கண்களுக்குக் கூரிய கருக்குகளாகவும், உங்கள் விலாக்களுக்கு முட்களாகவும் இருப்பார்கள். நீங்கள் வாழப்போகும் நாட்டில், அவர்கள் உங்களைத் துன்புறுத்துவார்கள்.
எண்ணாகமம் 33 : 56 (OCVTA)
அப்பொழுது நான் அவர்களுக்குச் செய்யத் திட்டமிட்டதை உங்களுக்கே செய்வேன் என்றார்.’ ” [PE]

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56

BG:

Opacity:

Color:


Size:


Font: