எண்ணாகமம் 26 : 1 (OCVTA)
இரண்டாம் குடிமதிப்பு கொள்ளைநோய் நீங்கியபின் யெகோவா மோசேயிடமும் ஆரோனின் மகனான ஆசாரியன் எலெயாசாரிடமும் கூறியதாவது,
எண்ணாகமம் 26 : 2 (OCVTA)
“நீங்கள் முழு இஸ்ரயேல் சமுதாயத்தையும் குடும்பம் குடும்பமாக குடிமதிப்பிடுங்கள். இஸ்ரயேலின் இராணுவத்தில் பணிபுரியக்கூடிய இருபது வயதும், அதற்கு மேற்பட்ட வயதும் உடையவர்களைக் கணக்கிடுங்கள்” என்றார்.
எண்ணாகமம் 26 : 3 (OCVTA)
எனவே மோசேயும், ஆசாரியன் எலெயாசாரும் யோர்தானுக்கு அருகே, எரிகோவுக்கு எதிராகவுள்ள மோவாப் சமவெளியில் அவர்களுடன் பேசினார்கள்.
எண்ணாகமம் 26 : 4 (OCVTA)
“யெகோவா மோசேக்குக் கட்டளையிட்டபடி உங்களில் இருபது வயதும் அதற்கு மேற்பட்ட வயதும் உடையவர்களைக் குடிமதிப்பிடுங்கள்” என்றார்கள். எகிப்திலிருந்து வெளியேவந்த இஸ்ரயேலர் இவர்களே:
எண்ணாகமம் 26 : 5 (OCVTA)
இஸ்ரயேலின் மூத்த மகனான ரூபனின் சந்ததிகளாவன, ஆனோக் மூலமாக ஆனோக்கிய வம்சமும், பல்லூ மூலமாக பல்லூவிய வம்சமும் வந்தன.
எண்ணாகமம் 26 : 6 (OCVTA)
எஸ்ரோன் மூலமாக எஸ்ரோனிய வம்சமும், கர்மீயின் மூலமாக கர்மீய வம்சமும் வந்தன.
எண்ணாகமம் 26 : 7 (OCVTA)
ரூபனின் வம்சங்கள் இவைகளே: 43,730 பேர் அவர்களில் கணக்கிடப்பட்டார்கள்.
எண்ணாகமம் 26 : 8 (OCVTA)
பல்லூவின் மகன் எலியாப்,
எண்ணாகமம் 26 : 9 (OCVTA)
எலியாபின் மகன்கள் நெமுயேல், தாத்தான், அபிராம் என்பவர்கள். இஸ்ரயேல் சமுதாயத்திற்கு அதிகாரிகளாயிருந்த தாத்தானும் அபிராமுமே மோசேயையும் ஆரோனையும் எதிர்த்துக் கலகம் பண்ணினார்கள். கோராகைப் பின்பற்றியவர்கள் யெகோவாவுக்கு விரோதமாகக் கலகம்பண்ணியபோது இவர்களும் அவர்களோடிருந்தார்கள்.
எண்ணாகமம் 26 : 10 (OCVTA)
பூமி பிளவுண்டு கோராகுடன் சேர்த்து அவர்களை விழுங்கிப்போட்டது. நெருப்பு 250 பேரை சுட்டெரித்தபோது, கோராகைப் பின்பற்றியவர்களும் செத்தார்கள். அந்த நிகழ்ச்சி இஸ்ரயேலுக்கு ஒரு எச்சரிப்பின் அடையாளமாய் இருந்தது.
எண்ணாகமம் 26 : 11 (OCVTA)
ஆனாலும், கோராகின் சந்ததிகள் எல்லோருமே சாகவில்லை.
எண்ணாகமம் 26 : 12 (OCVTA)
வம்சம் வம்சமாக சிமியோனின் சந்ததிகளாவன. நெமுயேல் மூலமாக நெமுயேலின் வம்சமும், யாமின் மூலமாக யாமினிய வம்சமும், யாகீன் மூலமாக யாகீனிய வம்சமும் வந்தன.
எண்ணாகமம் 26 : 13 (OCVTA)
சேராகின் மூலமாக சேராகிய வம்சமும், சாவூலின் மூலமாக சாவூலிய வம்சமும் வந்தன.
எண்ணாகமம் 26 : 14 (OCVTA)
சிமியோனின் வம்சங்கள் இவையே. 22,200 பேர் அவர்களில் கணக்கிடப்பட்டார்கள்.
எண்ணாகமம் 26 : 15 (OCVTA)
வம்சம் வம்சமாக காத்தின் சந்ததிகளாவன: சிப்போனின் மூலமாக சிப்போனிய வம்சமும், அகியின் மூலமாக அகியரின் வம்சமும், சூனியின் மூலமாக சூனியரின் வம்சமும் வந்தன.
எண்ணாகமம் 26 : 16 (OCVTA)
ஒஸ்னியின் மூலமாக ஒஸ்னிய வம்சமும், ஏரியின் மூலமாக ஏரிய வம்சமும் வந்தன.
எண்ணாகமம் 26 : 17 (OCVTA)
ஆரோதியின் மூலமாக ஆரோதிய வம்சமும், அரேலியின் மூலமாக அரேலிய வம்சமும் வந்தன.
எண்ணாகமம் 26 : 18 (OCVTA)
காத்தின் வம்சங்கள் இவையே. 40,500 பேர் அவர்களில் கணக்கிடப்பட்டார்கள்.
எண்ணாகமம் 26 : 19 (OCVTA)
ஏர், ஓனான் ஆகியோர் யூதாவின் மகன்கள். ஆனால் அவர்கள் கானான் நாட்டில் இறந்துபோனார்கள்.
எண்ணாகமம் 26 : 20 (OCVTA)
வம்சம் வம்சமாக யூதாவின் சந்ததிகளாவன: சேலாவின் மூலமாக சேலாவிய வம்சமும், பாரேஸின் மூலமாக பாரேஸிய வம்சமும், சேராவின் மூலமாக, சேராவிய வம்சமும் வந்தன.
எண்ணாகமம் 26 : 21 (OCVTA)
பாரேஸின் சந்ததிகளாவன: எஸ்ரோன் மூலமாக எஸ்ரோனிய வம்சமும், ஆமூலின் மூலமாக ஆமூலிய வம்சமும் வந்தன.
எண்ணாகமம் 26 : 22 (OCVTA)
யூதாவின் வம்சங்கள் இவையே. 76,500 பேர் அவர்களில் கணக்கிடப்பட்டார்கள்.
எண்ணாகமம் 26 : 23 (OCVTA)
வம்சம் வம்சமாக இசக்காரின் சந்ததிகளாவன: தோலாவின் மூலமாக தோலாவிய வம்சமும், பூவாவின் மூலமாக பூவாவிய வம்சமும் உண்டாயின.
எண்ணாகமம் 26 : 24 (OCVTA)
யாசூபின் மூலமாக யாசூபிய வம்சமும், சிம்ரோனின் மூலமாக சிம்ரோனிய வம்சமும் உண்டாயின.
எண்ணாகமம் 26 : 25 (OCVTA)
இசக்காரின் வம்சங்கள் இவையே. 64,300 பேர் அவர்களில் கணக்கிடப்பட்டார்கள்.
எண்ணாகமம் 26 : 26 (OCVTA)
வம்சம் வம்சமாக செபுலோன் சந்ததிகளாவன: சேரேத்தின் மூலமாக செரேத்திய வம்சமும், ஏலோனின் மூலமாக ஏலோனிய வம்சமும், யாலயேலின் மூலமாக யாலயேலிய வம்சமும் வந்தன.
எண்ணாகமம் 26 : 27 (OCVTA)
செபுலோனின் வம்சங்கள் இவையே. 60,500 பேர் அவர்களில் கணக்கிடப்பட்டார்கள்.
எண்ணாகமம் 26 : 28 (OCVTA)
வம்சம் வம்சமாக மனாசே, எப்பிராயீம் வழியாக வந்த யோசேப்பின் சந்ததிகளாவன:
எண்ணாகமம் 26 : 29 (OCVTA)
மனாசேயின் சந்ததிகள்: மாக்கீரின் மூலமாக மாகீரிய வம்சம் வந்தது. மாகீர், கீலேயாத்தின் தகப்பன் கீலேயாத்தின் வழியாக கீலேயாத்திய வம்சம் வந்தது.
எண்ணாகமம் 26 : 30 (OCVTA)
கீலேயாத்தின் சந்ததிகளாவன: ஈயேசேரின் மூலமாக ஈயேசேரியரின் வம்சமும், ஏலேக்கின் மூலமாக ஏலேக்கிய வம்சமும் வந்தன.
எண்ணாகமம் 26 : 31 (OCVTA)
அஸ்ரியேலின் மூலமாக அஸ்ரியேலிய வம்சமும், சீகேமின் மூலமாக சீகேமிய வம்சமும் வந்தன.
எண்ணாகமம் 26 : 32 (OCVTA)
செமிதாவின் மூலமாக செமிதாவிய வம்சமும், எப்பேரின் மூலமாக ஏப்பேரிய வம்சமும் வந்தன.
எண்ணாகமம் 26 : 33 (OCVTA)
எப்பேரின் மகனான செலொப்பியாத்திற்கு மகன்கள் இருக்கவில்லை. அவனுக்கு மகள்கள் மட்டுமே இருந்தார்கள். அவர்களின் பெயர்கள் மக்லாள், நோவாள், ஒக்லாள், மில்காள், திர்சாள் என்பனவாகும்.
எண்ணாகமம் 26 : 34 (OCVTA)
மனாசேயின் வம்சங்கள் இவைகளே: 52,700 பேர் அவர்களில் கணக்கிடப்பட்டார்கள்.
எண்ணாகமம் 26 : 35 (OCVTA)
வம்சம் வம்சமாக எப்பிராயீம் சந்ததிகளாவன: சுத்தெலாகின் மூலமாக சுத்தெலாகிய வம்சமும், பெகேரின் மூலமாக பெகேரிய வம்சமும், தாகானின் மூலமாக தாகானிய வம்சமும் வந்தன.
எண்ணாகமம் 26 : 36 (OCVTA)
சுத்தெலாதின் சந்ததிகளாவன: ஏரானின் மூலமாக ஏரானிய வம்சம் வந்தது.
எண்ணாகமம் 26 : 37 (OCVTA)
எப்பிராயீமின் வம்சங்கள் இவைகளே. 32,500 பேர் அவர்களில் எண்ணப்பட்டார்கள். வம்சம் வம்சமாக இவர்கள் யோசேப்பின் சந்ததிகளாவர்.
எண்ணாகமம் 26 : 38 (OCVTA)
வம்சம் வம்சமாக பென்யமீன் சந்ததிகளாவன: பேலாவின் மூலமாக பேலாவிய வம்சமும், அஸ்பேலின் மூலமாக அஸ்பேலின் வம்சமும், அகிராமின் மூலமாக அகிராமிய வம்சமும் வந்தன.
எண்ணாகமம் 26 : 39 (OCVTA)
சுப்பாமின் மூலமாக சுப்பாமிய வம்சமும், உப்பாமின் மூலமாக உப்பாமிய வம்சமும் வந்தன.
எண்ணாகமம் 26 : 40 (OCVTA)
ஆர்த், நாகமான் மூலமாக வந்த பேலாவின் சந்ததிகளாவன: ஆரேதின் மூலமாக ஆரேதிய வம்சமும், நாகமானின் மூலமாக நாகமானிய வம்சமும் வந்தன.
எண்ணாகமம் 26 : 41 (OCVTA)
பென்யமீனின் வம்சங்கள் இவையே: 45,600 பேர் அவர்களில் கணக்கிடப்பட்டார்கள்.
எண்ணாகமம் 26 : 42 (OCVTA)
வம்சம் வம்சமாக தாணின் சந்ததிகளாவன: சூகாமின் மூலமாக சூகாமிய வம்சம் உண்டாயிற்று. தாணின் வம்சங்களாவன;
எண்ணாகமம் 26 : 43 (OCVTA)
அவர்கள் அனைவரும் சூகாமிய வம்சத்தைச் சேர்ந்தவர்கள். 64,400 பேர் அவர்களில் கணக்கிடப்பட்டார்கள்.
எண்ணாகமம் 26 : 44 (OCVTA)
வம்சம் வம்சமாக ஆசேரின் சந்ததிகளாவன: இம்னாவின் மூலமாக இம்னாவிய வம்சமும்; இஸ்வியின் மூலமாக இஸ்விய வம்சமும்; பெரீயாவின் மூலமாக பெரீயாவிய வம்சமும் வந்தன;
எண்ணாகமம் 26 : 45 (OCVTA)
பெரீயா சந்ததியின் மூலமாக வந்தவர்கள்: ஏபேரின் மூலமாக ஏபேரிய வம்சமும், மல்கியேலின் மூலமாக மல்கியேலிய வம்சமும் வந்தன.
எண்ணாகமம் 26 : 46 (OCVTA)
ஆசேருக்கு செராக்கு என்னும் பெயருள்ள ஒரு மகள் இருந்தாள்.
எண்ணாகமம் 26 : 47 (OCVTA)
ஆசேரின் வம்சங்கள் இவைகளே: 53,400 பேர். அவர்களில் கணக்கிடப்பட்டார்கள்.
எண்ணாகமம் 26 : 48 (OCVTA)
வம்சம் வம்சமாக நப்தலியின் சந்ததிகளாவன: யாத்சியேலின் மூலமாக யாத்சியேலிய வம்சமும்; கூனியின் மூலமாக கூனியரின் சந்ததியும் வந்தன;
எண்ணாகமம் 26 : 49 (OCVTA)
எத்செரின் மூலமாக எத்சேரிய வம்சமும், சில்லேமின் மூலமாக சில்லேமிய வம்சமும் உண்டாயின.
எண்ணாகமம் 26 : 50 (OCVTA)
நப்தலியின் வம்சங்கள் இவையே. 45,400 பேர் அவர்களில் கணக்கிடப்பட்டார்கள்.
எண்ணாகமம் 26 : 51 (OCVTA)
இஸ்ரயேலிய மனிதர்களின் மொத்த எண்ணிக்கை 6,01,730 பேர்.
எண்ணாகமம் 26 : 52 (OCVTA)
யெகோவா மோசேயிடம் சொன்னதாவது:
எண்ணாகமம் 26 : 53 (OCVTA)
“பெயர்களின் எண்ணிக்கை அடிப்படையில் நாடு அவர்களுக்கு உரிமைச்சொத்தாகப் பகிர்ந்தளிக்கப்படவேண்டும்.
எண்ணாகமம் 26 : 54 (OCVTA)
கணக்கிடப்பட்டவர்களில் பெரிய குழுவினருக்கு பெரிதான உரிமைச்சொத்தும், சிறிய குழுவிற்குச் சிறிதான உரிமைச்சொத்தும் கொடு. கணக்கிடப்பட்டவர்களின் எண்ணிக்கையின்படியே ஒவ்வொரு குழுவும் உரிமைச்சொத்தைப் பெற்றுக்கொள்ள வேண்டும்.
எண்ணாகமம் 26 : 55 (OCVTA)
சீட்டுப்போடுவதன் மூலமே நாடு பங்கிடப்படவேண்டும் என்பதில் கவனமாயிரு. ஒவ்வொரு குழுவும் உரிமையாக்கிக்கொள்ளும் நிலம் அவர்களின் முற்பிதாக்களின் கோத்திரப் பெயர்களின் எண்ணிக்கைப்படியே இருக்கவேண்டும்.
எண்ணாகமம் 26 : 56 (OCVTA)
ஒவ்வொரு உரிமைச்சொத்து நிலமும் பெரிய குழுக்களுக்குள்ளும், சிறிய குழுக்களுக்குள்ளும் சீட்டுப்போட்டே பங்கிடப்படவேண்டும்” என்றார்.
எண்ணாகமம் 26 : 57 (OCVTA)
வம்சம் வம்சமாக எண்ணப்பட்ட லேவியர்கள் இவர்களே. கெர்சோனின் மூலமாக கெர்சோனிய வம்சமும், கோகாத்தின் மூலமாக கோகாத்திய வம்சமும், மெராரியின் மூலமாக மெராரிய வம்சமும் வந்தன.
எண்ணாகமம் 26 : 58 (OCVTA)
லேவியின் மற்ற வம்சங்களாவன: லிப்னீய வம்சம், எப்ரோனிய வம்சம், மகலிய வம்சம், மூசிய வம்சம், கோராகிய வம்சம் என்பவைகளே. அம்ராமின் முற்பிதா கோகாத்;
எண்ணாகமம் 26 : 59 (OCVTA)
அம்ராமின் மனைவியின் பெயர் யோகெபேத். அவள் லேவிய சந்ததியைச் சேர்ந்தவள். அவள் எகிப்திலே லேவிக்குப் பிறந்தவள். அவள், ஆரோன், மோசே ஆகியோரையும் அவர்களின் சகோதரியான மிரியாமையும் அம்ராமுக்குப் பெற்றாள்.
எண்ணாகமம் 26 : 60 (OCVTA)
நாதாப், அபியூ, எலெயாசார், இத்தாமார் ஆகியோரின் தகப்பன் ஆரோன்.
எண்ணாகமம் 26 : 61 (OCVTA)
நாதாபும், அபியூவும் அங்கீகரிக்கப்படாத நெருப்பினால் யெகோவாவுக்கு முன்பாகக் காணிக்கையைச் செலுத்தியபோது இறந்துபோனார்கள்.
எண்ணாகமம் 26 : 62 (OCVTA)
கணக்கிடப்பட்டபடி, ஒரு மாதமும் அதற்கு மேற்பட்ட வயதும் உடையவர்களான லேவிய ஆசாரியர்களின் மொத்தத்தொகை 23,000 பேர். இவர்களுக்கு மற்ற இஸ்ரயேலருக்குள் உரிமைச்சொத்து கிடைக்காதபடியால், லேவியர் அவர்களுடன் சேர்த்து எண்ணப்படவில்லை.
எண்ணாகமம் 26 : 63 (OCVTA)
யோர்தானுக்கு அருகே எரிகோவுக்கு எதிராகவுள்ள மோவாப் சமவெளியில் மோசேயும், ஆசாரியன் எலெயாசாரும் இஸ்ரயேலரைக் கணக்கெடுத்தபோது கணக்கிடப்பட்டவர்கள் இவர்களே.
எண்ணாகமம் 26 : 64 (OCVTA)
ஆனால் முன்பு மோசேயினாலும், ஆசாரியன் ஆரோனாலும் சீனாய் வனாந்திரத்தில் கணக்கிடப்பட்ட இஸ்ரயேலர்களில் ஒருவனும் இவர்கள் மத்தியில் இருக்கவில்லை.
எண்ணாகமம் 26 : 65 (OCVTA)
ஏனெனில், “அந்த இஸ்ரயேலர் பாலைவனத்தில் நிச்சயம் சாவார்கள்” என யெகோவா அவர்களுக்குச் சொல்லியிருந்தார். அவ்வாறே எப்புன்னேயின் மகன் காலேபையும், நூனின் மகன் யோசுவாவையும் தவிர வேறு ஒருவரும் உயிரோடிருக்கவில்லை.

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 58 59 60 61 62 63 64 65