எண்ணாகமம் 2 : 1 (OCVTA)
கோத்திர முகாம்களின் ஒழுங்குமுறை யெகோவா மோசேயிடமும் ஆரோனிடமும் சொன்னதாவது:
எண்ணாகமம் 2 : 2 (OCVTA)
“இஸ்ரயேலர் சபைக் கூடாரத்தைச் சுற்றி சற்றுத் தொலைவில் தங்கள் முகாம்களை அமைக்கவேண்டும். ஒவ்வொருவனும் தன்தன் சின்னத்தின்கீழ் குடும்பத்தின் கொடியுடன் இருக்கவேண்டும்.”
எண்ணாகமம் 2 : 3 (OCVTA)
சூரிய உதயத்தை நோக்கிய கிழக்குப் பக்கத்தில், யூதாவின் முகாம் பிரிவுகள் தங்கள் சின்னத்தின்கீழ் முகாமிடவேண்டும். அம்மினதாபின் மகன் நகசோன், யூதா மக்களின் தலைவன்.
எண்ணாகமம் 2 : 4 (OCVTA)
அவனுடைய பிரிவின் தொகை 74,600 பேர்.
எண்ணாகமம் 2 : 5 (OCVTA)
இசக்காரின் கோத்திரத்தார் அவர்களுக்கு அருகில் முகாமிடவேண்டும். சூவாரின் மகன் நெதனெயேல், இசக்கார் மக்களுக்குத் தலைவன்.
எண்ணாகமம் 2 : 6 (OCVTA)
அவனுடைய பிரிவின் தொகை 54,400 பேர்.
எண்ணாகமம் 2 : 7 (OCVTA)
செபுலோனின் கோத்திரம் அடுத்ததாக இருக்கும். ஏலோனின் மகன் எலியாப், செபுலோன் மக்களுக்குத் தலைவன்.
எண்ணாகமம் 2 : 8 (OCVTA)
அவனுடைய பிரிவின் தொகை 57,400 பேர்.
எண்ணாகமம் 2 : 9 (OCVTA)
யூதாவின் பக்கத்துக்கு அவர்களுடைய பிரிவுகளின்படி நியமிக்கப்பட்ட எல்லா மனிதரும் 1,86,400 பேர். அவர்களே முதலில் புறப்படுவார்கள்.
எண்ணாகமம் 2 : 10 (OCVTA)
தென்புறத்தில் ரூபனின் முகாம் பிரிவுகள், தங்கள் சின்னத்தின்கீழ் இருக்கும். சேதேயூரின் மகன் எலிசூர், ரூபன் மக்களுக்குத் தலைவன்.
எண்ணாகமம் 2 : 11 (OCVTA)
அவனுடைய பிரிவின் தொகை 46,500 பேர்.
எண்ணாகமம் 2 : 12 (OCVTA)
சிமியோன் கோத்திரம் அவர்களை அடுத்து முகாமிடவேண்டும். சூரிஷதாயின் மகன் செலூமியேல் சிமியோன் மக்களுக்குத் தலைவன்.
எண்ணாகமம் 2 : 13 (OCVTA)
அவனுடைய பிரிவின் தொகை 59,300 பேர்.
எண்ணாகமம் 2 : 14 (OCVTA)
காத் கோத்திரம் அடுத்ததாக இருக்கும். தேகுயேலின் மகன் எலியாசாப், காத் மக்களுக்குத் தலைவன்.
எண்ணாகமம் 2 : 15 (OCVTA)
அவனுடைய பிரிவின் தொகை 45,650 பேர்.
எண்ணாகமம் 2 : 16 (OCVTA)
ரூபனுடைய பக்கத்துக்கு அவர்களுடைய பிரிவுகளின்படி நியமிக்கப்பட்ட எல்லா மனிதரும் 1,51,450 பேர். அவர்கள் இரண்டாவதாகப் புறப்படுவார்கள்.
எண்ணாகமம் 2 : 17 (OCVTA)
சபைக் கூடாரமும், லேவியரின் முகாமும் மற்ற முகாம்களுக்கு நடுவிலிருந்து புறப்படும். அவர்கள் தாம் முகாமிட்ட அதே ஒழுங்கின்படி ஒவ்வொருவரும் தன்தன் சின்னத்தின் கீழாகப் போவார்கள்.
எண்ணாகமம் 2 : 18 (OCVTA)
மேற்குப் பக்கத்தில் எப்பிராயீமின் முகாமின் பிரிவுகள், தங்கள் கொடியின்கீழ் இருக்கும். அம்மியூதின் மகன் எலிஷாமா, எப்பிராயீம் மக்களுக்குத் தலைவன்.
எண்ணாகமம் 2 : 19 (OCVTA)
அவனுடைய பிரிவின் தொகை 40,500 பேர்.
எண்ணாகமம் 2 : 20 (OCVTA)
மனாசே கோத்திரம் அவர்களுக்கு அடுத்ததாக இருக்கும். பெதாசூரின் மகன் கமாலியேல், மனாசே மக்களுக்குத் தலைவன்.
எண்ணாகமம் 2 : 21 (OCVTA)
அவனுடைய பிரிவின் தொகை 32,200 பேர்.
எண்ணாகமம் 2 : 22 (OCVTA)
பென்யமீன் கோத்திரம் அதற்கு அடுத்ததாக இருக்கும். கீதெயோனின் மகன் அபீதான், பென்யமீன் மக்களுக்குத் தலைவன்.
எண்ணாகமம் 2 : 23 (OCVTA)
அவனுடைய பிரிவின் தொகை 35,400 பேர்.
எண்ணாகமம் 2 : 24 (OCVTA)
எப்பிராயீமின் பக்கத்திற்கு அவர்களுடைய பிரிவுகளின்படி நியமிக்கப்பட்ட எல்லா மனிதரும் 1,08,100 பேர். அவர்கள் மூன்றாவதாகப் புறப்படுவார்கள்.
எண்ணாகமம் 2 : 25 (OCVTA)
வடக்குப் பக்கத்தில் தாண் முகாமின் பிரிவுகள் தங்கள் சின்னத்தின்கீழ் இருக்கும். அம்மிஷதாயின் மகன் அகியேசேர், தாண் மக்களுக்குத் தலைவன்.
எண்ணாகமம் 2 : 26 (OCVTA)
அவனுடைய பிரிவின் தொகை 62,700 பேர்.
எண்ணாகமம் 2 : 27 (OCVTA)
ஆசேர் கோத்திரம் அவர்களை அடுத்ததாக முகாமிடவேண்டும். ஓகிரானின் மகன் பாகியேல், ஆசேர் மக்களுக்குத் தலைவன்.
எண்ணாகமம் 2 : 28 (OCVTA)
அவனுடைய பிரிவின் தொகை 41,500 பேர்.
எண்ணாகமம் 2 : 29 (OCVTA)
நப்தலி கோத்திரம் அடுத்ததாக இருக்கும். ஏனானின் மகன் அகீரா, நப்தலி மக்களுக்குத் தலைவன்.
எண்ணாகமம் 2 : 30 (OCVTA)
அவனுடைய பிரிவின் தொகை 53,400 பேர்.
எண்ணாகமம் 2 : 31 (OCVTA)
தாணின் பக்கத்திற்கு நியமிக்கப்பட்ட மனிதர்களின் மொத்தத்தொகை 1,57,600 பேர். அவர்கள் கடைசியாக தங்கள் கொடிகளின் கீழ் புறப்படுவார்கள்.
எண்ணாகமம் 2 : 32 (OCVTA)
அவரவருடைய குடும்பங்களின்படி கணக்கிடப்பட்ட இஸ்ரயேலர்கள் இவர்களே. அவர்களுடைய பிரிவுகளின்படி முகாம்களில் இருந்த எல்லோருடைய எண்ணிக்கை 6,03,550 பேர்.
எண்ணாகமம் 2 : 33 (OCVTA)
ஆனாலும், யெகோவா மோசேக்குக் கட்டளையிட்டபடி, லேவியர் மற்ற இஸ்ரயேலருடன் கணக்கிடப்படவில்லை.
எண்ணாகமம் 2 : 34 (OCVTA)
அப்படியே யெகோவா மோசேக்குக் கட்டளையிட்ட எல்லாவற்றையும் இஸ்ரயேலர் செய்தார்கள். அந்த முறையாக அவர்கள் தங்கள் கொடிகளின் கீழே முகாமிட்டு இருந்தார்கள். அவ்விதமாகவே அவர்கள் போகும்போது ஒவ்வொருவரும் தன் வம்சத்துடனும், குடும்பத்துடனும் புறப்பட்டார்கள்.
❮
❯
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
32
33
34