எண்ணாகமம் 13 : 1 (OCVTA)
{கானானை வேவு பார்த்தல்} [PS] யெகோவா மோசேயிடம் சொன்னதாவது,
எண்ணாகமம் 13 : 2 (OCVTA)
“நான் இஸ்ரயேலருக்குக் கொடுக்கவிருக்கும் கானான் நாட்டை ஆராய்ந்து அறிவதற்கு சில மனிதரை அனுப்பு. ஒவ்வொரு கோத்திரத்திலிருந்தும் அதன் தலைவர்களில் ஒருவனை அனுப்பு” என்றார். [PE][PS]
எண்ணாகமம் 13 : 3 (OCVTA)
யெகோவா கட்டளையிட்டபடியே, மோசே அவர்களைப் பாரான் பாலைவனத்திலிருந்து அனுப்பினான். அவர்கள் எல்லோரும் இஸ்ரயேலரின் தலைவர்களாயிருந்தார்கள்.
எண்ணாகமம் 13 : 4 (OCVTA)
அவர்களுடைய பெயர்களாவன: ரூபன் கோத்திரத்திலிருந்து சக்கூரின் மகன் சம்முவா,
எண்ணாகமம் 13 : 5 (OCVTA)
சிமியோன் கோத்திரத்திலிருந்து ஓரியின் மகன் சாப்பாத்,
எண்ணாகமம் 13 : 6 (OCVTA)
யூதா கோத்திரத்திலிருந்து எப்புன்னேயின் மகன் காலேப்,
எண்ணாகமம் 13 : 7 (OCVTA)
இசக்கார் கோத்திரத்திலிருந்து யோசேப்பின் மகன் ஈகால்,
எண்ணாகமம் 13 : 8 (OCVTA)
எப்பிராயீம் கோத்திரத்திலிருந்து நூனின் மகன் ஓசேயா,
எண்ணாகமம் 13 : 9 (OCVTA)
பென்யமீன் கோத்திரத்திலிருந்து ரப்பூவின் மகன் பல்த்தி,
எண்ணாகமம் 13 : 10 (OCVTA)
செபுலோன் கோத்திரத்திலிருந்து சோதியின் மகன் காதியேல்,
எண்ணாகமம் 13 : 11 (OCVTA)
யோசேப்பு கோத்திரத்தானான மனாசேயின் கோத்திரத்திலிருந்து சூசியின் மகன் காதி,
எண்ணாகமம் 13 : 12 (OCVTA)
தாண் கோத்திரத்திலிருந்து கெமல்லியின் மகன் அம்மியேல்,
எண்ணாகமம் 13 : 13 (OCVTA)
ஆசேர் கோத்திரத்திலிருந்து மிகாயேலின் மகன் சேத்தூர்,
எண்ணாகமம் 13 : 14 (OCVTA)
நப்தலி கோத்திரத்திலிருந்து ஒப்பேசியின் மகன் நாகபி,
எண்ணாகமம் 13 : 15 (OCVTA)
காத் கோத்திரத்திலிருந்து மாகியின் மகன் கூயேல்.
எண்ணாகமம் 13 : 16 (OCVTA)
நாட்டை ஆராய்ந்து அறிவதற்கு மோசே அனுப்பிய மனிதர்களின் பெயர்கள் இவையே. மோசே நூனின் மகன் ஒசேயாவுக்கு யோசுவா என்று பெயரிட்டான். [PS]
எண்ணாகமம் 13 : 17 (OCVTA)
கானானை ஆராய்ந்து அறியும்படிக்கு மோசே அவர்களை அனுப்பியபோது, அவன் அவர்களிடம், “நீங்கள் தெற்கு பிரதேசத்தின் வழியாக மலைநாட்டிற்குப் போங்கள்.
எண்ணாகமம் 13 : 18 (OCVTA)
போய், அந்த நாடு எப்படிப்பட்டதுதென்றும், அங்கே வாழும் மக்கள் பலசாலிகளா, பலவீனர்களா, அதிகமானவர்களா, குறைவானவர்களா என்றும் பாருங்கள்.
எண்ணாகமம் 13 : 19 (OCVTA)
அவர்கள் வாழும் நிலம் எப்படிப்பட்டது? நல்லதோ? கெட்டதோ? அவர்கள் வாழும் பட்டணங்கள் எப்படிப்பட்டவை? அரண் அற்றவையோ? அரணுள்ளவையோ?
எண்ணாகமம் 13 : 20 (OCVTA)
மண் எப்படிப்பட்டது? அது வளமுள்ளதா, வளமற்றதா? மரங்கள் இருக்கின்றனவா, இல்லையா? என்றும் பாருங்கள். அந்த நாட்டின் பழங்களில் சிலவற்றைக் கொண்டுவரவும் முயற்சி செய்யுங்கள்” என்றான். அது திராட்சை முதற்பழம் பழுக்கும் காலமாய் இருந்தது. [PE][PS]
எண்ணாகமம் 13 : 21 (OCVTA)
அவர்கள் போய் சீன் பாலைவனம்தொடங்கி, லேபோ ஆமாத்துக்கு முன்பாக உள்ள ரேகோப் வரையும் நாட்டை ஆராய்ந்து பார்த்தார்கள்.
எண்ணாகமம் 13 : 22 (OCVTA)
அவர்கள் தெற்கு பக்கத்தின் வழியாகப்போய் எப்ரோனுக்கு வந்தார்கள். அங்கே அகீமான், சேசாய், தல்மாய் ஆகிய ஏனாக்கின் சந்ததியினர் வாழ்ந்தார்கள். எப்ரோன் எகிப்திலுள்ள சோவான் கட்டப்படுவதற்கு ஏழு வருடத்திற்கு முன்பே கட்டப்பட்டது.
எண்ணாகமம் 13 : 23 (OCVTA)
அவர்கள் எஸ்கோல் பள்ளத்தாக்கை வந்தடைந்தபோது, ஒரு தனி திராட்சைப்பழக் குலையுடைய ஒரு கிளையை வெட்டினார்கள். அதனுடன் சில மாதுளம் பழங்களையும், அத்திப்பழங்களையும் ஒரு தடியில்போட்டு, இரண்டுபேர் தூக்கிக்கொண்டு போனார்கள்.
எண்ணாகமம் 13 : 24 (OCVTA)
அங்கே இஸ்ரயேலர் திராட்சைக் குலையை வெட்டியதனால் அந்த இடம், “எஸ்கோல் [*எஸ்கோல் என்றால் கொத்து என்று அர்த்தம்.] ” பள்ளத்தாக்கு என்று அழைக்கப்பட்டது.
எண்ணாகமம் 13 : 25 (OCVTA)
அவர்கள் நாற்பது நாட்களுக்கு நாட்டை ஆராய்ந்துபார்த்து பின்பு திரும்பி வந்தார்கள். [PS]
எண்ணாகமம் 13 : 26 (OCVTA)
{நாட்டைப் பற்றிய அறிக்கை} [PS] அவர்கள் பாரான் பாலைவனத்திலுள்ள காதேசில் இருந்த மோசே, ஆரோன் மற்றும் இஸ்ரயேலின் முழு சமுதாயத்தினரிடமும் வந்தார்கள். தாம் ஆராய்ந்து அறிந்தவற்றை அவர்களுக்கும், சபையார் அனைவருக்கும் சொன்னதோடு, அந்நாட்டிலிருந்து கொண்டுவந்திருந்த பழங்களையும் அவர்களுக்குக் காட்டினார்கள்.
எண்ணாகமம் 13 : 27 (OCVTA)
அவர்கள் மோசேயிடம், “நீர் அனுப்பிய நாட்டிற்கு நாங்கள் போனோம். அது பாலும் தேனும் [†பாலும் தேனும் என்றால் செழிப்பான என்று அர்த்தம்] வழிந்தோடும் நாடு! இதோ அதன் பழங்கள்.
எண்ணாகமம் 13 : 28 (OCVTA)
ஆனால் அங்குள்ள மக்களோ மிகவும் பலம் வாய்ந்தவர்கள். அத்துடன் நகரங்களும் அரணுள்ளவையும், விசாலமானவையுமாய் இருக்கின்றன. அங்கே ஏனாக்கின் சந்ததிகளைக்கூட நாங்கள் கண்டோம்.
எண்ணாகமம் 13 : 29 (OCVTA)
அமலேக்கியர் நாட்டின் தெற்கு பகுதியில் வாழ்கிறார்கள். ஏத்தியர், எபூசியர், எமோரியர் ஆகியோர் மலைநாட்டில் வாழ்கிறார்கள். கடல் அருகேயும், யோர்தான் நதியோரம் கானானியர் வாழ்கிறார்கள்” என்று விவரமாய்ச் சொன்னார்கள். [PE][PS]
எண்ணாகமம் 13 : 30 (OCVTA)
அப்பொழுது காலேப், மக்களை மோசேக்கு முன்பாக அமைதிப்படுத்தி, அவர்களிடம், “நாம் இப்பொழுதே போய் அந்நாட்டை நமக்கு உடைமையாக்கிக் கொள்ளவேண்டும். நிச்சயமாக நாம் அதைச் சொந்தமாக்கிக் கொள்ளலாம்” என்றான். [PE][PS]
எண்ணாகமம் 13 : 31 (OCVTA)
ஆனால் காலேப்புடன் போன மனிதர்களோ, “அந்த மக்களை எதிர்க்க நம்மால் முடியாது. ஏனெனில், அவர்கள் எங்களைப்பார்க்கிலும் பலசாலிகள்” என்றார்கள்.
எண்ணாகமம் 13 : 32 (OCVTA)
அவர்கள் தாம் ஆராய்ந்து அறிந்து வந்த நாட்டைப்பற்றி இஸ்ரயேலர் மத்தியில் பிழையான செய்தியைப் பரப்பினார்கள். நாங்கள் ஆராய்ந்து அறிந்து வந்த நாடு அங்கு வாழ்கிறவர்களை அழித்தொழிக்கும் நாடு. நாங்கள் அங்கு கண்ட மக்களும் உருவத்தில் பெரியவர்கள்.
எண்ணாகமம் 13 : 33 (OCVTA)
அரக்கர்களின் வழிவந்த ஏனாக்கின் சந்ததிகளான அரக்கர்களையும் அங்கு கண்டோம். நாங்கள் எங்கள் பார்வையில் அவர்களுக்கு முன்னால் வெட்டுக்கிளிகளைப்போல் காணப்பட்டோம். அவர்களுடைய பார்வையிலும் நாங்கள் அப்படியே காணப்பட்டோம் என்றார்கள். [PE]
❮
❯