எண்ணாகமம் 1 : 1 (OCVTA)
முதல் கணக்கெடுப்பு இஸ்ரயேலர் எகிப்திலிருந்து வந்த இரண்டாம் வருடம் இரண்டாம் மாதம் முதலாம் நாள், சீனாய் பாலைவனத்தில், சபைக் கூடாரத்தில் யெகோவா மோசேயுடன் பேசினார். அவர் சொன்னதாவது:
எண்ணாகமம் 1 : 2 (OCVTA)
“நீ இஸ்ரயேலின் முழு சமுதாயத்தையும், வம்சங்களின்படியும், குடும்பங்களின்படியும் கணக்கிடவேண்டும். ஒவ்வொருவரையும் பெயர் பெயராகப் பதிவு செய்யவேண்டும்.
எண்ணாகமம் 1 : 3 (OCVTA)
நீயும், ஆரோனும் படையில் பணிபுரியக்கூடிய இருபது வயதையும், அதற்கு மேற்பட்ட வயதையும் உடைய எல்லா இஸ்ரயேல் மனிதர்களையும், அவர்களுடைய பிரிவுகளின்படி கணக்கிடுங்கள்.
எண்ணாகமம் 1 : 4 (OCVTA)
இதற்காக ஒவ்வொரு கோத்திரத்திலிருந்தும், குடும்பத்தின் தலைவன் உனக்கு உதவிசெய்ய வேண்டும்.
எண்ணாகமம் 1 : 5 (OCVTA)
“உனக்கு உதவியாய் இருக்கவேண்டியவர்களின் பெயர்களாவன: “ரூபன் கோத்திரத்திலிருந்து சேதேயூரின் மகன் எலிசூர்;
எண்ணாகமம் 1 : 6 (OCVTA)
சிமியோன் கோத்திரத்திலிருந்து சூரிஷதாயின் மகன் செலூமியேல்,
எண்ணாகமம் 1 : 7 (OCVTA)
யூதா கோத்திரத்திலிருந்து அம்மினதாபின் மகன் நகசோன்,
எண்ணாகமம் 1 : 8 (OCVTA)
இசக்கார் கோத்திரத்திலிருந்து சூவாரின் மகன் நெதனெயேல்,
எண்ணாகமம் 1 : 9 (OCVTA)
செபுலோன் கோத்திரத்திலிருந்து ஏலோனின் மகன் எலியாப்,
எண்ணாகமம் 1 : 10 (OCVTA)
யோசேப்பின் மகன்களான எப்பிராயீமின் கோத்திரத்திலிருந்து அம்மியூதின் மகன் எலிஷாமா, மனாசே கோத்திரத்திலிருந்து பெதாசூரின் மகன் கமாலியேல்,
எண்ணாகமம் 1 : 11 (OCVTA)
பென்யமீன் கோத்திரத்திலிருந்து கீதியோனியின் மகன் அபீதான்,
எண்ணாகமம் 1 : 12 (OCVTA)
தாண் கோத்திரத்திலிருந்து அம்மிஷதாயின் மகன் அகியேசேர்,
எண்ணாகமம் 1 : 13 (OCVTA)
ஆசேர் கோத்திரத்திலிருந்து ஓகிரானின் மகன் பாகியேல்,
எண்ணாகமம் 1 : 14 (OCVTA)
காத் கோத்திரத்திலிருந்து தேகுயேலின் மகன் எலியாசாப்,
எண்ணாகமம் 1 : 15 (OCVTA)
நப்தலி கோத்திரத்திலிருந்து ஏனானின் மகன் அகீரா.”
எண்ணாகமம் 1 : 16 (OCVTA)
தங்களுடைய முற்பிதாக்களின் கோத்திரங்களின் தலைவர்களாக, இஸ்ரயேல் சமுதாயத்திலிருந்து நியமிக்கப்பட்ட மனிதர்கள் இவர்களே. இஸ்ரயேல் வம்சங்களின் தலைவர்களும்* தலைவர்களும் அல்லது ஆயிரம்பேருக்குத் தலைவர்கள். இவர்களே.
எண்ணாகமம் 1 : 17 (OCVTA)
மோசேயும், ஆரோனும் பெயர் கொடுக்கப்பட்ட இம்மனிதரைச் சேர்த்துக்கொண்டார்கள்.
எண்ணாகமம் 1 : 18 (OCVTA)
இரண்டாம் மாதம் முதலாம் நாளில், இஸ்ரயேலின் முழு சமுதாயத்தையும் ஒன்றுகூட்டினார்கள். மக்கள் தங்கள் பரம்பரையைத் தங்கள் வம்சங்களின்படியும், குடும்பங்களின்படியும் குறிப்பிட்டார்கள். இருபது வயதையும், அதற்கு மேற்பட்ட வயதையும் உடைய மனிதர்கள் ஒவ்வொருவரும், பெயர் பெயராகப் பதிவு செய்யப்பட்டார்கள்.
எண்ணாகமம் 1 : 19 (OCVTA)
யெகோவா மோசேக்குக் கட்டளையிட்டபடியே அவர்கள் செய்தார்கள். இப்படியாக சீனாய் பாலைவனத்தில் அவன் அவர்களைக் கணக்கிட்டான்.
எண்ணாகமம் 1 : 20 (OCVTA)
இஸ்ரயேலின் முதற்பேறான ரூபன் சந்ததியிலிருந்து, இராணுவத்தில் பணிபுரியக்கூடிய, இருபது வயதையும், அதற்கு மேற்பட்ட வயதையும் உடைய எல்லோரும் பதிவு செய்யப்பட்டார்கள். அவர்கள் ஒவ்வொருவரும், தங்களுடைய வம்ச பதிவின்படியும், குடும்ப பதிவின்படியும் பெயர் பெயராகப் பதிவு செய்யப்பட்டார்கள்.
எண்ணாகமம் 1 : 21 (OCVTA)
ரூபன் கோத்திரத்திலிருந்த எண்ணிக்கை 46,500 பேர்.
எண்ணாகமம் 1 : 22 (OCVTA)
சிமியோனின் சந்ததிகளிலிருந்து, இராணுவத்தில் பணிபுரியக்கூடிய, இருபது வயதையும் அதற்கு மேற்பட்ட வயதையும் உடைய எல்லோரும் பதிவு செய்யப்பட்டார்கள். அவர்கள் ஒவ்வொருவரும், தங்களுடைய வம்ச பதிவின்படியும், குடும்ப பதிவின்படியும், பெயர் பெயராகப் பதிவு செய்யப்பட்டார்கள்.
எண்ணாகமம் 1 : 23 (OCVTA)
சிமியோன் கோத்திரத்திலிருந்த எண்ணிக்கை 59,300 பேர்.
எண்ணாகமம் 1 : 24 (OCVTA)
காத்தின் சந்ததிகளிலிருந்து, இராணுவத்தில் பணிபுரியக்கூடிய இருபது வயதையும், அதற்கு மேற்பட்ட வயதையும் உடைய எல்லோரும் பதிவு செய்யப்பட்டார்கள். அவர்கள் ஒவ்வொருவரும், தங்களுடைய வம்ச பதிவின்படியும், குடும்ப பதிவின்படியும், பெயர் பெயராகப் பதிவு செய்யப்பட்டார்கள்.
எண்ணாகமம் 1 : 25 (OCVTA)
காத் கோத்திரத்திலிருந்த எண்ணிக்கை 45,650 பேர்.
எண்ணாகமம் 1 : 26 (OCVTA)
யூதாவின் சந்ததிகளிலிருந்து, இராணுவத்தில் பணிபுரியக்கூடிய இருபது வயதையும், அதற்கு மேற்பட்ட வயதையும் உடைய எல்லோரும் பதிவு செய்யப்பட்டார்கள். அவர்கள் ஒவ்வொருவரும், தங்களுடைய வம்ச பதிவின்படியும், குடும்ப பதிவின்படியும், பெயர் பெயராகப் பதிவு செய்யப்பட்டார்கள்.
எண்ணாகமம் 1 : 27 (OCVTA)
யூதாவின் கோத்திரத்திலிருந்த எண்ணிக்கை 74,600 பேர்.
எண்ணாகமம் 1 : 28 (OCVTA)
இசக்கார் சந்ததிகளிலிருந்து, இராணுவத்தில் பணிபுரியக்கூடிய இருபது வயதையும், அதற்கு மேற்பட்ட வயதையும் உடைய எல்லோரும் பதிவு செய்யப்பட்டார்கள். அவர்கள் ஒவ்வொருவரும், தங்களுடைய வம்ச பதிவின்படியும், குடும்ப பதிவின்படியும், பெயர் பெயராகப் பதிவு செய்யப்பட்டார்கள்.
எண்ணாகமம் 1 : 29 (OCVTA)
இசக்காரின் கோத்திரத்திலிருந்த எண்ணிக்கை 54,400 பேர்.
எண்ணாகமம் 1 : 30 (OCVTA)
செபுலோனின் சந்ததிகளிலிருந்து, இராணுவத்தில் பணிபுரியக்கூடிய இருபது வயதையும், அதற்கு மேற்பட்ட வயதையும் உடைய எல்லோரும் பதிவு செய்யப்பட்டார்கள். அவர்கள் ஒவ்வொருவரும், தங்களுடைய வம்ச பதிவின்படியும், குடும்ப பதிவின்படியும் பெயர் பெயராகப் பதிவு செய்யப்பட்டார்கள்.
எண்ணாகமம் 1 : 31 (OCVTA)
செபுலோனின் கோத்திரத்திலிருந்த எண்ணிக்கை 57,400 பேர்.
எண்ணாகமம் 1 : 32 (OCVTA)
யோசேப்பின் மகனான எப்பிராயீமின் சந்ததிகளிலிருந்து, இராணுவத்தில் பணிபுரியக்கூடிய இருபது வயதையும், அதற்கு மேற்பட்ட வயதையும் உடைய எல்லோரும் பதிவு செய்யப்பட்டார்கள். அவர்கள் ஒவ்வொருவரும், தங்களுடைய வம்ச பதிவின்படியும், குடும்ப பதிவின்படியும் பெயர் பெயராகப் பதிவு செய்யப்பட்டார்கள்.
எண்ணாகமம் 1 : 33 (OCVTA)
எப்பிராயீமின் கோத்திரத்திலிருந்த எண்ணிக்கை 40,500 பேர்.
எண்ணாகமம் 1 : 34 (OCVTA)
யோசேப்பின் மகனான மனாசேயின் சந்ததிகளிலிருந்து, இராணுவத்தில் பணிபுரியக்கூடிய இருபது வயதையும், அதற்கு மேற்பட்ட வயதையும் உடைய எல்லோரும் பதிவு செய்யப்பட்டார்கள். அவர்கள் ஒவ்வொருவரும், தங்களுடைய வம்ச பதிவின்படியும், குடும்ப பதிவின்படியும் பெயர் பெயராகப் பதிவு செய்யப்பட்டார்கள்.
எண்ணாகமம் 1 : 35 (OCVTA)
மனாசேயின் கோத்திரத்திலிருந்த எண்ணிக்கை 32,200 பேர்.
எண்ணாகமம் 1 : 36 (OCVTA)
பென்யமீனின் சந்ததிகளிலிருந்து, இராணுவத்தில் பணிபுரியக்கூடிய இருபது வயதையும், அதற்கு மேற்பட்ட வயதையும் உடைய எல்லோரும் பதிவு செய்யப்பட்டார்கள். அவர்கள் ஒவ்வொருவரும் தங்களுடைய வம்ச பதிவின்படியும், குடும்ப பதிவின்படியும் பெயர் பெயராகப் பதிவு செய்யப்பட்டார்கள்.
எண்ணாகமம் 1 : 37 (OCVTA)
பென்யமீனின் கோத்திரத்திலிருந்த எண்ணிக்கை 35,400 பேர்.
எண்ணாகமம் 1 : 38 (OCVTA)
தாணின் சந்ததிகளிலிருந்து, இராணுவத்தில் பணிபுரியக்கூடிய இருபது வயதையும், அதற்கு மேற்பட்ட வயதையும் உடைய எல்லோரும் பதிவு செய்யப்பட்டார்கள். அவர்கள் ஒவ்வொருவரும், தங்களுடைய வம்ச பதிவின்படியும், குடும்ப பதிவின்படியும், பெயர் பெயராகப் பதிவு செய்யப்பட்டார்கள்.
எண்ணாகமம் 1 : 39 (OCVTA)
தாணின் கோத்திரத்திலிருந்த எண்ணிக்கை 62,700 பேர்.
எண்ணாகமம் 1 : 40 (OCVTA)
ஆசேரின் சந்ததிகளிலிருந்து, இராணுவத்தில் பணிபுரியக்கூடிய இருபது வயதையும், அதற்கு மேற்பட்ட வயதையும், உடைய எல்லோரும் பதிவு செய்யப்பட்டார்கள். அவர்கள் ஒவ்வொருவரும், தங்களுடைய வம்ச பதிவின்படியும், குடும்ப பதிவின்படியும் பெயர் பெயராகப் பதிவு செய்யப்பட்டார்கள்.
எண்ணாகமம் 1 : 41 (OCVTA)
ஆசேரின் கோத்திரத்திலிருந்த எண்ணிக்கை 41,500 பேர்.
எண்ணாகமம் 1 : 42 (OCVTA)
நப்தலியின் சந்ததிகளிலிருந்து, இராணுவத்தில் பணிபுரியக்கூடிய இருபது வயதையும், அதற்கு மேற்பட்ட வயதையும் உடைய எல்லோரும் பதிவு செய்யப்பட்டார்கள். அவர்கள் ஒவ்வொருவரும், தங்களுடைய வம்ச பதிவின்படியும், குடும்ப பதிவின்படியும் பெயர் பெயராகப் பதிவு செய்யப்பட்டார்கள்.
எண்ணாகமம் 1 : 43 (OCVTA)
நப்தலியின் கோத்திரத்திலிருந்த எண்ணிக்கை 53,400 பேர்.
எண்ணாகமம் 1 : 44 (OCVTA)
மோசேயினாலும், ஆரோனாலும், தன்தன் குடும்பத்தைப் பிரதிநிதித்துவப்படுத்திய இஸ்ரயேலரின் பன்னிரண்டு தலைவர்களினாலும் எண்ணப்பட்ட மனிதர்கள் இவர்களே.
எண்ணாகமம் 1 : 45 (OCVTA)
இஸ்ரயேலின் இராணுவத்தில் பணிசெய்யக்கூடிய இருபது வயதையும், அதற்கு மேற்பட்ட வயதையும் உடைய இஸ்ரயேலர் எல்லோரும் அவர்களுடைய குடும்பங்களின்படியே எண்ணப்பட்டார்கள்.
எண்ணாகமம் 1 : 46 (OCVTA)
மொத்த எண்ணிக்கை 6,03,550 பேர்.
எண்ணாகமம் 1 : 47 (OCVTA)
ஆனால், மற்றவர்களோடு லேவி கோத்திரத்தின் குடும்பங்கள் கணக்கிடப்படவில்லை.
எண்ணாகமம் 1 : 48 (OCVTA)
யெகோவா மோசேயிடம் சொல்லியிருந்ததாவது:
எண்ணாகமம் 1 : 49 (OCVTA)
“நீ லேவி கோத்திரத்தைக் கணக்கிடவோ, அவர்களை மற்ற இஸ்ரயேலருடன் மக்கள் தொகை கணக்கெடுக்கவோ வேண்டாம்.
எண்ணாகமம் 1 : 50 (OCVTA)
ஆனால் நீ லேவியரை சாட்சிபகரும் இறைசமுகக் கூடாரத்திற்கும், அதன் எல்லா பணிப்பொருட்களுக்கும், அதற்குரிய எல்லாவற்றிற்கும்மேல் பொறுப்பாக நியமிக்கவேண்டும். இறைசமுகக் கூடாரத்தையும், அதன் பணிமுட்டுகளையும் அவர்களே சுமக்கவேண்டும். அவர்களே அதைப் பராமரித்து, அதைச் சுற்றிலும் முகாமிடவேண்டும்.
எண்ணாகமம் 1 : 51 (OCVTA)
எப்பொழுதாவது இறைசமுகக் கூடாரத்தை நகர்த்தவேண்டுமானால், லேவியரே அதைக் கழற்றவேண்டும். இறைசமுகக் கூடாரத்தை அமைக்கவேண்டுமென்றாலும் அதை லேவியரே செய்யவேண்டும். அதற்கு அருகில் செல்லும் வேறு எவனும் கொல்லப்படவேண்டும்.
எண்ணாகமம் 1 : 52 (OCVTA)
இஸ்ரயேலர் தங்கள் பிரிவுகளின்படியே கூடாரங்களை அமைக்கவேண்டும். ஒவ்வொருவனும் தன் சொந்தக் கூடாரத்தில் தன் சொந்தக் கொடியின்கீழ் இருக்கவேண்டும்.
எண்ணாகமம் 1 : 53 (OCVTA)
ஆனாலும், இஸ்ரயேல் சமுதாயத்தின்மேல் கோபம் வராதபடிக்கு லேவியர்கள் உடன்படிக்கைக் கூடாரத்தைச் சுற்றி தங்கள் முகாமிடவேண்டும். உடன்படிக்கைக் கூடாரத்தின் பராமரிப்புக்கு லேவியரே பொறுப்பாயிருக்க வேண்டும்.”
எண்ணாகமம் 1 : 54 (OCVTA)
யெகோவா மோசேக்குக் கட்டளையிட்டபடியே இஸ்ரயேலர் இவற்றையெல்லாம் செய்தார்கள்.
❮
❯
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
32
33
34
35
36
37
38
39
40
41
42
43
44
45
46
47
48
49
50
51
52
53
54