லூக்கா 1 : 1 (OCVTA)
{முகவுரை} [PS] மதிப்புக்குரிய தெயோப்பிலுவே, நமது மத்தியில் நிறைவேறிய நிகழ்வுகளின் [*நிகழ்வுகளின் அல்லது நிச்சயமாக விசுவாசித்த] விவரத்தை ஒழுங்காக எழுத, அநேகர் முன்வந்தார்கள்.
லூக்கா 1 : 2 (OCVTA)
துவக்கத்திலிருந்து கண்கண்ட சாட்சிகளாகவும், வார்த்தையை அறிவிக்கும் ஊழியர்களாகவும் இருந்த அவர்கள், எங்களுக்குக் கொடுக்கப்பட்டபடியே எழுதினார்கள்.
லூக்கா 1 : 3 (OCVTA)
நானும் உமக்கு அவற்றை ஒழுங்காக எழுதுவதற்குத் தீர்மானித்தேன். துவக்கத்திலிருந்து நடந்த எல்லாவற்றையும் கவனமாய் விசாரித்தறிந்து, இதை எழுதுகிறேன்.
லூக்கா 1 : 4 (OCVTA)
இதனால் உமக்குப் போதிக்கப்பட்ட விஷயங்கள் நிச்சயமாக உண்மையானவை என்பதை நீர் அறிந்துகொள்ளலாம். [PS]
லூக்கா 1 : 5 (OCVTA)
{யோவானின் பிறப்பின் முன்னறிவிப்பு} [PS] ஏரோது அரசன் யூதேயாவை ஆட்சி செய்த காலத்தில், சகரியா என்னும் பெயருடைய ஒரு ஆசாரியன் இருந்தான். இவன் அபியாவின் ஆசாரியப் பிரிவைச் சேர்ந்தவன். இவனுடைய மனைவி எலிசபெத்தும், ஆசாரியனாகிய ஆரோனின் சந்ததியைச் சேர்ந்தவள்.
லூக்கா 1 : 6 (OCVTA)
அவர்கள் இருவரும் இறைவனின் பார்வையில் நீதிமான்களாக இருந்தார்கள். மற்றவர்களால் குற்றஞ்சாட்டப்பட இடமில்லாமல், கர்த்தருடைய எல்லாக் கட்டளைகளையும் ஒழுங்குவிதிகளையும் கைக்கொண்டார்கள்.
லூக்கா 1 : 7 (OCVTA)
ஆனாலும் எலிசபெத் மலடியாக இருந்ததினால், அவர்களுக்குப் பிள்ளையில்லாதிருந்தது; அவர்கள் இருவரும், இப்பொழுது வயது சென்றவர்களாய் இருந்தார்கள். [PE][PS]
லூக்கா 1 : 8 (OCVTA)
ஒருமுறை அபியாவின் பிரிவை சேர்ந்தவர்கள், ஆலயத்தில் பணிபுரிந்தபோது, சகரியாவும் இறைவனுக்கு முன்பாக ஆசாரியப் பணியைச் செய்தான்.
லூக்கா 1 : 9 (OCVTA)
ஒரு நாள் ஆசாரியர்களின் வழக்கத்தின்படி கடமைகளைச் செய்வதற்கு சீட்டு போட்டபோது, கர்த்தருடைய ஆலயத்திற்குள் போய் தூபங்காட்டும் பணியைச் செய்வதற்கு சகரியா தெரிந்தெடுக்கப்பட்டான்.
லூக்கா 1 : 10 (OCVTA)
தூபங்காட்டும் வேளை வந்தபோது வழிபாட்டிற்கு கூடிவந்த மக்கள் வெளியே மன்றாடிக்கொண்டிருந்தார்கள். [PE][PS]
லூக்கா 1 : 11 (OCVTA)
அப்பொழுது கர்த்தரின் தூதன் ஒருவன், தூபபீடத்தின் வலதுபக்கத்திலே நின்று சகரியாவுக்குக் காட்சியளித்தான்.
லூக்கா 1 : 12 (OCVTA)
சகரியா அவனைக் கண்டு திடுக்கிட்டுப் பயந்தான்.
லூக்கா 1 : 13 (OCVTA)
அந்தத் தூதனோ அவனைப் பார்த்து: “சகரியாவே, பயப்படாதே; உனது மன்றாட்டு கேட்கப்பட்டது. உனது மனைவி எலிசபெத் உனக்கு ஒரு மகனைப் பெறுவாள், நீ அவனுக்கு யோவான் என்று பெயரிட வேண்டும்.
லூக்கா 1 : 14 (OCVTA)
அவன் உனக்கு மகிழ்ச்சியும் மனக்களிப்புமாய் இருப்பான். அவனுடைய பிறப்பின் நிமித்தம், அநேகர் பெருமகிழ்ச்சியடைவார்கள்;
லூக்கா 1 : 15 (OCVTA)
அவன் கர்த்தருடைய பார்வையில் பெரியவனாயிருப்பான். அவன் ஒருபோதும் திராட்சை இரசத்தையோ, மதுபானத்தையோ அருந்த மாட்டான், அவன் தனது தாயின் வயிற்றில் இருக்கும்போதே பரிசுத்த ஆவியானவரால் நிரப்பப்படுவான்.
லூக்கா 1 : 16 (OCVTA)
அவன் இஸ்ரயேல் மக்களில் பலரை அவர்களுடைய இறைவனாகிய கர்த்தரிடத்திற்குத் திரும்பவும் கொண்டுவருவான்.
லூக்கா 1 : 17 (OCVTA)
அவன் எலியாவின் ஆவியோடும் வல்லமையோடும் கர்த்தருக்கு முன்பாகப் போவான்; தந்தையரின் இருதயத்தைப் பிள்ளைகள் பக்கமாகத் திருப்புவான், கீழ்ப்படியாதவர்களை நீதிமான்களுடைய ஞானத்திற்குத் திருப்புவான். இவ்விதமாய் கர்த்தருக்காக முன்னேற்பாடு செய்திருக்கிற மக்களை அவன் ஆயத்தம் செய்வான்” என்றான். [PE][PS]
லூக்கா 1 : 18 (OCVTA)
அப்பொழுது சகரியா அந்தத் தூதனிடம், “இது நடக்கும் என்று நான் எப்படி நம்பலாம்? நான் கிழவனாய் இருக்கிறேன், என் மனைவியும் வயது சென்றவளாய் இருக்கிறாளே” என்றான். [PE][PS]
லூக்கா 1 : 19 (OCVTA)
அதற்கு அந்தத் தூதன், “நான் இறைவனின் சமுகத்தில் நிற்கின்ற காபிரியேல்; உன்னுடன் பேசுவதற்காகவும், இந்த நற்செய்தியை உனக்கு அறிவிப்பதற்காகவும் நான் அனுப்பப்பட்டிருக்கிறேன்.
லூக்கா 1 : 20 (OCVTA)
நீயோ எனது வார்த்தைகளை நம்பவில்லை, ஆதலால் இவை நிகழும் நாள்வரைக்கும் நீ பேச முடியாமல் ஊமையாயிருப்பாய்; நான் சொன்னவையோ நியமித்த காலத்தில் நிறைவேறும்” என்றான். [PE][PS]
லூக்கா 1 : 21 (OCVTA)
அதேவேளையில், சகரியாவின் வருகைக்காக வெளியே காத்துக்கொண்டிருந்த மக்கள், அவன் ஏன் ஆலயத்தில் நீண்ட நேரமாய் இருக்கிறான் என யோசிக்கத் தொடங்கினார்கள்.
லூக்கா 1 : 22 (OCVTA)
அவன் வெளியே வந்தபோது, அவர்களோடு பேச அவனால் முடியவில்லை. அவன் அவர்களுக்கு சைகை காட்டியதால், அவன் ஆலயத்தில் ஒரு தரிசனத்தைக் கண்டிருக்கிறான் என்று அவர்கள் அறிந்துகொண்டார்கள். ஆனால் அவன் பேசமுடியாதவனாகவே இருந்தான். [PE][PS]
லூக்கா 1 : 23 (OCVTA)
அவனது பணிசெய்யும் காலம் முடிவடைந்தபோது, அவன் தன் வீட்டிற்குத் திரும்பிப்போனான்.
லூக்கா 1 : 24 (OCVTA)
இந்த நாட்களுக்குப்பின் அவன் மனைவி எலிசபெத் கருத்தரித்தாள், அவள் ஐந்து மாதங்களாக பிறர் கண்களில் படாதிருந்தாள்.
லூக்கா 1 : 25 (OCVTA)
அப்பொழுது அவள், “கர்த்தரே இதைச் செய்தார், இந்த நாட்களில் அவர் எனக்குத் தயவுகாட்டி, என் மக்களிடையே எனக்கிருந்த அவமானத்தை நீக்கிவிட்டார்” என்றாள். [PS]
லூக்கா 1 : 26 (OCVTA)
{இயேசுவின் பிறப்பை முன்னறிவித்தல்} [PS] ஆறாம் மாதத்தில், கலிலேயாவிலுள்ள நாசரேத் என்னும் ஒரு பட்டணத்திற்கு இறைவன் காபிரியேல் தூதனை,
லூக்கா 1 : 27 (OCVTA)
ஒரு கன்னிகையிடம் அனுப்பினார்; அவள் தாவீதின் சந்ததியானாகிய யோசேப்பு என்னும் பெயருள்ள ஒருவனுக்கு திருமணம் செய்ய நிச்சயிக்கப்பட்டிருந்தாள். அந்தக் கன்னிகையின் பெயர் மரியாள்.
லூக்கா 1 : 28 (OCVTA)
கர்த்தருடைய தூதன் அவளிடம் போய், “மிகவும் தயவு பெற்றவளே வாழ்க! கர்த்தர் உன்னுடன் இருக்கிறார்” என்றான். [PE][PS]
லூக்கா 1 : 29 (OCVTA)
தூதன் சொன்ன வார்த்தையைக் கேட்ட மரியாள் மிகவும் கலக்கமடைந்து, இந்த வாழ்த்துதல் எத்தகையதோ என்று யோசிக்கத் தொடங்கினாள்.
லூக்கா 1 : 30 (OCVTA)
ஆனால் அந்தத் தூதன் அவளிடம், “மரியாளே, பயப்படாதே! நீ இறைவனிடத்தில் தயவு பெற்றிருக்கிறாய்.
லூக்கா 1 : 31 (OCVTA)
நீ கருத்தரித்து ஒரு மகனைப் பெற்றெடுப்பாய், அவருக்கு இயேசு என்று பெயரிட வேண்டும்.
லூக்கா 1 : 32 (OCVTA)
அவர் பெரியவராயிருப்பார், மகா உன்னதமானவரின் மகன் என அழைக்கப்படுவார். அவருடைய தந்தையாகிய தாவீதின் அரியணையை இறைவனாகிய கர்த்தர் அவருக்குக் கொடுப்பார்.
லூக்கா 1 : 33 (OCVTA)
அவர் யாக்கோபின் குடும்பத்தாரை என்றென்றும் ஆட்சி செய்வார்; அவருடைய அரசு ஒருபோதும் முடிவுபெறாது” என்றான். [PE][PS]
லூக்கா 1 : 34 (OCVTA)
அப்பொழுது மரியாள் அந்தத் தூதனிடம், “இது எப்படியாகும், நான் கன்னியாய் இருக்கிறேனே?” என்றாள். [PE][PS]
லூக்கா 1 : 35 (OCVTA)
அதற்கு தூதன், “பரிசுத்த ஆவியானவர் உன்மேல் வருவார், மகா உன்னதமானவரின் வல்லமை உன்மேல் நிழலிடும். எனவே பிறக்கும் பரிசுத்த குழந்தை இறைவனின் மகன் என அழைக்கப்படுவார்.
லூக்கா 1 : 36 (OCVTA)
உனது உறவினராகிய எலிசபெத்தும் தனது முதிர்வயதில் ஒரு குழந்தையைப் பெற இருக்கிறாள். மலடி எனப்பட்டவள் இப்பொழுது கருத்தரித்து ஆறு மாதங்களாகின்றன.
லூக்கா 1 : 37 (OCVTA)
இறைவனால் செய்ய முடியாதது ஒன்றும் இல்லை” என்றான். [PE][PS]
லூக்கா 1 : 38 (OCVTA)
அதற்கு மரியாள், “இதோ நான் கர்த்தரின் அடிமை; நீர் சொன்னபடியே எனக்கு நடக்கட்டும்” என்றாள். அப்பொழுது கர்த்தருடைய தூதன் அவளைவிட்டுப் போனான். [PS]
லூக்கா 1 : 39 (OCVTA)
{மரியாள் எலிசபெத்தை சந்தித்தல்} [PS] அந்நாட்களில் மரியாள் புறப்பட்டு யூதேயாவின் மலைநாட்டிலுள்ள ஒரு பட்டணத்திற்கு விரைவாகப் போனாள்;
லூக்கா 1 : 40 (OCVTA)
அங்கே அவள் சகரியாவின் வீட்டிற்குள் போய், எலிசபெத்தை வாழ்த்தினாள்.
லூக்கா 1 : 41 (OCVTA)
மரியாளுடைய வாழ்த்துதலை எலிசபெத் கேட்டபோது, அவளுடைய கருப்பையில் இருந்த குழந்தை துள்ளியது. அப்பொழுது எலிசபெத் பரிசுத்த ஆவியானவரால் நிரப்பப்பட்டு,
லூக்கா 1 : 42 (OCVTA)
உரத்த குரலில் சொன்னதாவது: “நீ பெண்களுக்குள்ளே ஆசீர்வதிக்கப்பட்டவள். நீ பெற்றெடுக்கப்போகும் பிள்ளையும் ஆசீர்வதிக்கப்பட்டது!
லூக்கா 1 : 43 (OCVTA)
என் கர்த்தரின் தாய் என்னிடம் வருவதற்கு, நான் இவ்வளவாய் தயவுபெற்றேன்.
லூக்கா 1 : 44 (OCVTA)
உனது வாழ்த்துதலின் சத்தம் எனது காதில்பட்டதுமே, எனது கருப்பையில் இருக்கும் குழந்தை மகிழ்ச்சியினால் துள்ளிற்று.
லூக்கா 1 : 45 (OCVTA)
கர்த்தர் தனக்குச் சொன்னது நிறைவேறும் என்று விசுவாசித்தவள் ஆசீர்வதிக்கப்பட்டவளே!” என்றாள். [PS]
லூக்கா 1 : 46 (OCVTA)
{மரியாளின் பாடல்} [PS] அப்பொழுது மரியாள் சொன்னதாவது: [QBR] “என் ஆத்துமா கர்த்தரை மகிமைப்படுத்துகிறது, [QBR2]
லூக்கா 1 : 47 (OCVTA)
என் ஆவி என் இரட்சகராகிய இறைவனில் பெருமகிழ்ச்சியடைகிறது. [QBR]
லூக்கா 1 : 48 (OCVTA)
ஏனெனில், அவர் தமது [QBR2] அடிமையின் தாழ்மை நிலையைத் தயவுடன் பார்த்தார். [QBR] இப்பொழுதிலிருந்து எல்லாத் தலைமுறையினரும் [QBR2] என்னை ஆசீர்வதிக்கப்பட்டவள் என்று அழைப்பார்கள்; [QBR]
லூக்கா 1 : 49 (OCVTA)
வல்லமையுள்ளவர் எனக்கு அரும்பெரும் காரியங்களைச் செய்தார்; [QBR2] பரிசுத்தர் என்பது அவருடைய பெயர். [QBR]
லூக்கா 1 : 50 (OCVTA)
அவருக்குப் பயப்படுகிறவர்களுக்கு, [QBR2] தலைமுறை தலைமுறையாக அவர் இரக்கம் காண்பிக்கிறார். [QBR]
லூக்கா 1 : 51 (OCVTA)
அவர் தமது புயத்தினால் வல்லமையான செயல்களை நிறைவேற்றினார்; [QBR2] தங்களுடைய உள்ளத்தில் அகந்தையான நினைவு கொண்டவர்களை அவர் சிதறடித்தார். [QBR]
லூக்கா 1 : 52 (OCVTA)
ஆளுநர்களை அவர்களுடைய அரியணைகளில் இருந்து கீழே வீழ்த்தினார். [QBR2] ஆனால், தாழ்மையானவர்களையோ அவர் உயர்த்தினார். [QBR]
லூக்கா 1 : 53 (OCVTA)
அவர் பசியாய் இருந்தவர்களை நன்மைகளால் நிரப்பினார். [QBR2] ஆனால் செல்வந்தர்களையோ வெறுமையாய் அனுப்பினார். [QBR]
லூக்கா 1 : 54 (OCVTA)
அவர் தமது வேலைக்காரனாகிய இஸ்ரயேலுக்கு உதவி செய்தார். [QBR]
லூக்கா 1 : 55 (OCVTA)
நம்முடைய தந்தையர்களுக்கு அவர் வாக்களித்தபடியே, ஆபிரகாமுக்கும் [QBR2] அவனுடைய தலைமுறையினருக்கும் என்றென்றுமுள்ள இரக்கத்தை [QBR2] அவர் நினைத்தபடியே செய்திருக்கிறார்” என்று பாடினாள். [PE][PS]
லூக்கா 1 : 56 (OCVTA)
மரியாள் எலிசபெத்துடன் மூன்று மாதங்கள் தங்கியிருந்து, அதற்குப் பின்பு தன் வீட்டிற்குத் திரும்பிப் போனாள். [PS]
லூக்கா 1 : 57 (OCVTA)
{யோவான் ஸ்நானகனின் பிறப்பு} [PS] எலிசபெத்திற்குப் பிள்ளைபெறும் காலம் வந்தபோது, அவள் ஒரு மகனைப் பெற்றாள்.
லூக்கா 1 : 58 (OCVTA)
அவளுடைய அயலவர்களும் உறவினர்களும் கர்த்தர் அவளுக்குப் பெரிதான இரக்கம் காண்பித்திருக்கிறார் என்று கேள்விப்பட்டபோது, அவளுடன்கூட மகிழ்ச்சி அடைந்தார்கள். [PE][PS]
லூக்கா 1 : 59 (OCVTA)
அவர்களுடைய அயலவர்களும் உறவினர்களும் எட்டாம் நாளில் அந்தப் பிள்ளைக்கு விருத்தசேதனம் செய்யும்படி வந்து சேர்ந்தார்கள். அவர்கள் குழந்தைக்கு அவனுடைய தகப்பனின் பெயரின்படியே சகரியா என்று பெயரிட நினைத்தார்கள்.
லூக்கா 1 : 60 (OCVTA)
ஆனால் குழந்தையின் தாயோ, “இல்லை! அவன் யோவான் என்றே அழைக்கப்பட வேண்டும்” என்று சொன்னாள். [PE][PS]
லூக்கா 1 : 61 (OCVTA)
அதற்கு அவர்கள் அவளிடம், “உனது உறவினரில் அந்தப் பெயருள்ளவன் ஒருவனும் இல்லையே” என்றார்கள். [PE][PS]
லூக்கா 1 : 62 (OCVTA)
அப்பொழுது அவர்கள் பிள்ளையின் தகப்பன் என்ன பெயரிட விரும்புகிறான் என்று அறிவதற்கு, அவனிடம் சைகை மூலம் கேட்டார்கள்.
லூக்கா 1 : 63 (OCVTA)
அவன் ஒரு கற்பலகையைக் கேட்டுவாங்கி, அவர்கள் எல்லோரும் வியப்படையத்தக்கதாக, “இவனுடைய பெயர் யோவான்” என்று எழுதினான்.
லூக்கா 1 : 64 (OCVTA)
உடனே அவனது வாய் திறக்கப்பட்டு, அவனுடைய நாவு கட்டவிழ்ந்தது. அவன் இறைவனைப் புகழ்ந்து பேசத் தொடங்கினான்.
லூக்கா 1 : 65 (OCVTA)
அயலவர்கள் எல்லோரும் ஆச்சரியப்பட்டார்கள். இந்தக் காரியங்களைக்குறித்து, யூதேயாவின் மலைநாடு எங்கும் மக்கள் பேசிக்கொண்டார்கள்.
லூக்கா 1 : 66 (OCVTA)
இதைக் கேள்விப்பட்ட எல்லோரும் வியப்படைந்து, “இந்தப் பிள்ளை எப்படிப்பட்டதாய் இருக்குமோ?” என்றார்கள் கர்த்தருடைய கரம் அந்த பிள்ளையோடு இருந்தது. [PS]
லூக்கா 1 : 67 (OCVTA)
{சகரியாவின் பாடல்} [PS] அந்தப் பிள்ளையின் தகப்பனான சகரியா பரிசுத்த ஆவியானவரால் நிரப்பப்பட்டு இறைவாக்கு உரைத்ததாவது: [QBR]
லூக்கா 1 : 68 (OCVTA)
“இஸ்ரயேலின் இறைவனாகிய கர்த்தருக்குத் துதி உண்டாவதாக, [QBR2] அவர் வந்து தம்முடைய மக்களை மீட்டுக்கொண்டார். [QBR]
லூக்கா 1 : 69 (OCVTA)
அவர் தமது தாசனாகிய தாவீதின் வம்சத்திலிருந்து, [QBR2] நாம் இரட்சிப்பு அடைவதற்கான இரட்சணியக்கொம்பை எழுப்பியிருக்கிறார். [QBR]
லூக்கா 1 : 70 (OCVTA)
அவர் தம்முடைய பரிசுத்த இறைவாக்கினர் மூலமாய், நெடுங்காலத்திற்கு முன்பே சொல்லியிருந்தார். [QBR]
லூக்கா 1 : 71 (OCVTA)
நம்முடைய பகைவரிடமிருந்தும், [QBR2] நம்மை வெறுக்கும் எல்லோருடைய கைகளிலிருந்தும் [QBR2] நமக்கு விடுதலையை ஏற்படுத்துவேன் என்றும், [QBR]
லூக்கா 1 : 72 (OCVTA)
அவருடைய பரிசுத்த உடன்படிக்கையை நினைவுகூர்ந்து, [QBR2] நம்முடைய தந்தையருக்கு இரக்கம் காண்பிப்பேன் என்றும் சொல்லியிருந்தார். [QBR2]
லூக்கா 1 : 73 (OCVTA)
அவர் நமது தந்தையான ஆபிரகாமுக்கு ஆணையிட்டு: [QBR]
லூக்கா 1 : 74 (OCVTA)
நம்முடைய பகைவருடைய கையினின்று நம்மைத் தப்புவித்து, [QBR2] நமது நாட்களெல்லாம் பயமின்றிப் பணிசெய்யும்படி, [QBR]
லூக்கா 1 : 75 (OCVTA)
பரிசுத்தத்திலும் நீதியிலும் அவருக்கு முன்பாக [QBR2] என்றும் வாக்குக் கொடுத்திருந்தார்.
லூக்கா 1 : 76 (OCVTA)
“என் பிள்ளையே, நீயோ, உன்னதமானவருடைய இறைவாக்கினன் என்னப்படுவாய்; [QBR2] நீ கர்த்தருக்கு வழியை ஆயத்தம்பண்ணும்படி, அவருக்கு முன்பாகப் போவாய். [QBR]
லூக்கா 1 : 77 (OCVTA)
நம்முடைய இறைவனின் மிகுந்த இரக்கத்தின் நிமித்தம் [QBR2] அவருடைய மக்களுக்கு பாவங்கள் மன்னிக்கப்படுவதன் மூலமாய், [QBR2] இரட்சிப்பின் அறிவைக் கொடுப்பாய். [QBR]
லூக்கா 1 : 78 (OCVTA)
இருளில் வாழ்கிறவர்களுக்கும் [QBR2] மரண இருளில் இருக்கிறவர்களுக்கும் ஒளியைத் தருவதற்கும், [QBR]
லூக்கா 1 : 79 (OCVTA)
நமது கால்களை சமாதானத்தின் வழியில் நடத்துவதற்கும், [QBR2] பரலோகத்திலிருந்து தோன்றிய அருணோதயம் [QBR] நம்மைச் சந்தித்திருக்கிறது.” [PE][PS]
லூக்கா 1 : 80 (OCVTA)
அந்தப் பிள்ளை வளர்ந்து ஆவியில் வலிமையடைந்தது; அவன் வெளியரங்கமாக இஸ்ரயேலரின்முன் வரும் காலம்வரைக்கும் பாலைவனத்தில் வாழ்ந்தான். [PE]

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 58 59 60 61 62 63 64 65 66 67 68 69 70 71 72 73 74 75 76 77 78 79 80

BG:

Opacity:

Color:


Size:


Font: