யோசுவா 15 : 1 (OCVTA)
யூதாவுக்குப் பங்கு வம்சம் வம்சமாக யூதா கோத்திரத்திற்கு அளிக்கப்பட்ட பங்கு தென்பகுதியில் ஏதோம் நாட்டிற்கும், சீன் பாலைவனத்திற்கும் பரந்திருந்தது.
யோசுவா 15 : 2 (OCVTA)
அதன் தென் எல்லை உப்புக்கடலில்* உப்புக்கடலில் அல்லது சவக்கடல் என்று பொருள். தென் மூலையிலுள்ள முனையிலிருந்து,
யோசுவா 15 : 3 (OCVTA)
அக்கராபீமின் மேட்டைத் தென்புறமாகக் கடந்து சீன் பாலைவனத்தின் வழியாக, காதேஸ் பர்னேயாவுக்கு தெற்கே சென்றது. பின்பு அது எஸ்ரோன் பக்கமாக ஆதார்வரை போய் வளைந்துசென்று கார்க்காவை அடைந்தது.
யோசுவா 15 : 4 (OCVTA)
பின்பு அஸ்மோன் பக்கமாகச்சென்று, எகிப்தின் நதியுடன் இணைந்து மத்திய தரைக்கடலில் முடிந்தது. இதுவே யூதா கோத்திரத்தாரின் தென் எல்லை.
யோசுவா 15 : 5 (OCVTA)
யோர்தான் நதியின் ஆரம்பம் வரை உள்ள உப்புக்கடல் அதன் கிழக்கு எல்லையாகும். வட எல்லை யோர்தான் முகத்துவாரத்திலுள்ள கடலின் முனையிலிருந்து ஆரம்பமாகி,
யோசுவா 15 : 6 (OCVTA)
அங்கிருந்து பெத் ஓக்லாவுக்குச் சென்று பின் பெத் அரபாவின் வடக்காகக் கடந்து ரூபனின் மகனாகிய போகனின் கல் இருந்த இடம்வரை சென்றது.
யோசுவா 15 : 7 (OCVTA)
அந்த எல்லை ஆகோர் பள்ளத்தாக்கிலிருந்து தெபீருக்குச் சென்றது. வடக்கே திரும்பி கணவாய்க்குத் தெற்கிலுள்ள அதும்மீமின் மேட்டுக்கு எதிரேயுள்ள கில்காலுக்குச் சென்றது. அங்கிருந்து எல்லையானது என்சேமேசின் நீரூற்றுகளுக்குச் சென்று என்ரொகேல் நீரூற்றுவரை வந்தது.
யோசுவா 15 : 8 (OCVTA)
பின் எல்லையானது பென் இன்னோம் பள்ளத்தாக்கின் வழியாக எபூசியரின் பட்டணத்தின் தென்மலைச்சரிவை அதாவது எருசலேமை அடைந்தது. அங்கிருந்து இன்னோம் பள்ளத்தாக்கிற்கு மேற்கே மலையின் உச்சிக்கு ஏறியது. இந்த மலை ரெப்பாயீம் பள்ளத்தாக்கின் வடக்குமுனையில் இருந்தது.
யோசுவா 15 : 9 (OCVTA)
அந்த மலையுச்சியிலிருந்து எல்லையானது, நெப்தோ நீரூற்றை நோக்கிச்சென்று, பின்னர் எப்ரோன் மலையிலுள்ள நகரங்களின் வழியாகச் சென்று அங்கிருந்த கீரியாத்யாரீமாகிய பாலாவை நோக்கிசென்றது.
யோசுவா 15 : 10 (OCVTA)
பாலாவிலிருந்து எல்லையானது, மேற்கே வளைந்து சேயீர் மலையை நோக்கித் திரும்பி யெயாரீம் மலையில் வடக்குசரிவு அதாவது கெசலோக் ஒரமாகத் தொடர்ந்துசென்றது. அங்கிருந்து பெத்ஷிமேஷைக் கடந்து திம்னாவரை சென்றது.
யோசுவா 15 : 11 (OCVTA)
அது எக்ரோனின் வடக்கு மலைச்சரிவை நோக்கிச்சென்று, சிக்ரோனை நோக்கி திரும்பிச்சென்று, பாலா மலையைக்கடந்து யாப்னியேலை அடைந்தது. அதன் எல்லை மத்திய தரைக்கடலில் முடிந்தது.
யோசுவா 15 : 12 (OCVTA)
தேசத்தின் மேற்கு எல்லை, மத்திய தரைக்கடலின் கரையோரமாகும். மேலே கூறப்பட்டவை யூதாவின் கோத்திரத்திற்கு அதன் வம்சங்களுக்கேற்ப வழங்கப்பட்ட நிலத்தின் எல்லைகளாகும்.
யோசுவா 15 : 13 (OCVTA)
யோசுவாவிற்கு யெகோவா கட்டளையிட்டபடியே அவன் யூதா தேசத்தின் ஒரு பகுதியை எப்புன்னேயின் மகனாகிய காலேப்புக்கு கொடுத்தான். அது கீரியாத் அர்பா அதாவது எப்ரோன் பிரதேசம் ஆகும். அர்பா என்பவன் ஏனாக்கின் முற்பிதா.
யோசுவா 15 : 14 (OCVTA)
காலேப் மூன்று ஏனாக்கியரின் மகன்களை எப்ரோனிலிருந்து துரத்திவிட்டான். அவர்கள் ஏனாக்கின் வழித்தோன்றல்களான சேசாய், அகீமான், தல்மாய் என்பவர்கள்.
யோசுவா 15 : 15 (OCVTA)
அங்கிருந்து அவன் தெபீரில் வசித்தவர்களுக்கெதிராக படையெடுத்துச்சென்றான். தெபீர் என்பது முன்பு கீரியாத் செபேர் எனப்பட்டது.
யோசுவா 15 : 16 (OCVTA)
காலேப், “கீரியாத் செபேர் நகரைத் தாக்கிக் கைப்பற்றும் வீரனுக்கு, என் மகள் அக்சாளைத் திருமணம் செய்துவைப்பேன்” என்று சொல்லியிருந்தான்.
யோசுவா 15 : 17 (OCVTA)
காலேபின் சகோதரனான கேனாசின் மகன் ஒத்னியேல் அந்நகரைக் கைப்பற்றினான். எனவே காலேப் தன் மகள் அக்சாளை அவனுக்குத் திருமணம் செய்துகொடுத்தான்.
யோசுவா 15 : 18 (OCVTA)
ஒரு நாள் அவள் ஒத்னியேலுடன் வந்தபோது, அவளைத் தன் தகப்பனிடம் இன்னும் ஒரு வயல் நிலத்தைக் கேட்கும்படி அவளைத் தூண்டினான். அப்படியே அவள் கழுதையிலிருந்து இறங்கியபோது காலேப் அவளிடம், “நான் உனக்கு என்ன செய்யவேண்டும்?” என்று கேட்டான்.
யோசுவா 15 : 19 (OCVTA)
அதற்கு அவள், “எனக்கு இன்னும் ஒரு உதவிசெய்ய வேண்டும். நீங்கள் எனக்கு, ‘நெகேவ்’ என்னும் வறண்டபகுதியில் நிலத்தை கொடுத்திருப்பதால் நீரூற்றுள்ள நிலத்தையும் கொடுங்கள்” என்றாள். அப்படியே காலேப் மேற்புறத்திலும், கீழ்ப்புறத்திலும் நீரூற்றுள்ள நிலத்தையும் அவளுக்குக் கொடுத்தான்.
யோசுவா 15 : 20 (OCVTA)
யூதா கோத்திரத்திற்கு வம்சம் வம்சமாக வழங்கப்பட்ட சொத்துரிமையாவது:
யோசுவா 15 : 21 (OCVTA)
நெகேவின் தென்பகுதியில், ஏதோம் எல்லையை நோக்கி யூதா கோத்திரத்திற்குத் தென்முனையிலிருந்த நகரங்களாவன: கப்சேயேல், ஏதேர், யாகூர்,
யோசுவா 15 : 23 (OCVTA)
கேதேஸ், ஆத்சோர், இத்னான்,
யோசுவா 15 : 25 (OCVTA)
ஆத்சோர் அதாத்தா, கீரியோத் எஸ்ரோன் அதாவது ஆத்சோர்,
யோசுவா 15 : 27 (OCVTA)
ஆத்சார்காதா, எஸ்மோன், பெத்பெலேத்,
யோசுவா 15 : 28 (OCVTA)
ஆத்சார்சூவால், பெயெர்செபா, பிஸ்யோத்யா,
யோசுவா 15 : 30 (OCVTA)
எல்தோலாத், கெசீல், ஓர்மா,
யோசுவா 15 : 31 (OCVTA)
சிக்லாக், மத்மன்னா, சன்சன்னா,
யோசுவா 15 : 32 (OCVTA)
லெபாயோத், சில்லீம், ஆயின், ரிம்மோன் ஆகிய இருபத்தொன்பது நகரங்களும் அவற்றின் கிராமங்களும் ஆகும்.
யோசுவா 15 : 33 (OCVTA)
மேற்கு மலையடிவாரங்களில் எஸ்தாவோல், சோரியா, அஷ்னா,
யோசுவா 15 : 34 (OCVTA)
சனோகா, என்கன்னீம், தப்புவா, ஏனாம்,
யோசுவா 15 : 35 (OCVTA)
யர்மூத், அதுல்லாம், சோக்கோ, அசேக்கா,
யோசுவா 15 : 36 (OCVTA)
சாராயீம், அதித்தாயீம், கெதேரா அல்லது கெதெரோத்தாயீம் ஆகிய பதினான்கு நகரங்களும் அவற்றின் கிராமங்களும் ஆகும்.
யோசுவா 15 : 37 (OCVTA)
சேனான், அதாஷா, மிக்தால்காத்,
யோசுவா 15 : 38 (OCVTA)
திலியான், மிஸ்பே, யோக்தெயேல்,
யோசுவா 15 : 39 (OCVTA)
லாகீசு, போஸ்காத், எக்லோன்,
யோசுவா 15 : 40 (OCVTA)
காபோன், லகமாஸ், கித்லீஷ்,
யோசுவா 15 : 41 (OCVTA)
கெதெரோத், பெத்டாகோன், நாமா, மக்கெதா ஆகிய பதினாறு நகரங்களும் அவற்றின் கிராமங்களும் ஆகும்.
யோசுவா 15 : 44 (OCVTA)
கேகிலா, அக்சீப், மரேஷா ஆகிய ஒன்பது நகரங்களும் அவற்றின் கிராமங்களும் ஆகும்.
யோசுவா 15 : 45 (OCVTA)
எக்ரோனும் அதைச் சுற்றியுள்ள குடியேற்றங்களும், கிராமங்களும்.
யோசுவா 15 : 46 (OCVTA)
எக்ரோனின் மேற்கே அஸ்தோத்தின் சுற்றுப்புறமும் அவற்றோடும் அவற்றின் கிராமங்களும்.
யோசுவா 15 : 47 (OCVTA)
அஸ்தோத் பட்டணமும் அதன் சுற்றியுள்ள குடியேற்றங்களும், கிராமங்களும், காசா நகரும், அதைச் சுற்றியுள்ள குடியேற்றங்களும், அதன் கிராமங்களும் ஆகும். இப்பிரதேசங்கள் எகிப்தின் ஆறுவரையும் மத்திய தரைக்கடற்கரை வரையும் பரந்திருந்தன.
யோசுவா 15 : 48 (OCVTA)
மலைநாட்டில் இருந்தவைகளான: சாமீர், யாத்தீர், சோக்கோ,
யோசுவா 15 : 49 (OCVTA)
தன்னா, தெபீர் என்னப்பட்ட கீரியாத் சன்னா,
யோசுவா 15 : 51 (OCVTA)
கோசேன், ஓலோன், கிலொ ஆகிய பதினொன்று நகரங்களும் அவற்றின் கிராமங்களும் ஆகும்.
யோசுவா 15 : 53 (OCVTA)
யானூம், பெத் தப்புவா, ஆப்பெக்கா
யோசுவா 15 : 54 (OCVTA)
உம்தா, கீரியாத் அர்பா அல்லது எப்ரோன், சீயோர் ஆகிய ஒன்பது நகரங்களும் அவற்றின் கிராமங்களும் ஆகும்.
யோசுவா 15 : 55 (OCVTA)
மாகோன், கர்மேல், சீப், யுத்தா,
யோசுவா 15 : 56 (OCVTA)
யெஸ்ரயேல், யோக்தெயாம், சனோகா,
யோசுவா 15 : 57 (OCVTA)
காயின், கிபியா, திம்னா ஆகிய பத்துப் பட்டணங்களும் அவற்றின் கிராமங்களும் ஆகும்.
யோசுவா 15 : 58 (OCVTA)
அல்கூல், பெத்சூர், கேதோர்,
யோசுவா 15 : 59 (OCVTA)
மாராத், பெத் ஆனோத், எல்தெகோன், ஆகிய ஆறு நகரங்களும் அவற்றின் கிராமங்களும் ஆகும்.
யோசுவா 15 : 60 (OCVTA)
கீரியாத் பாகால், அதாவது கீரியாத்யாரீம், ரபா ஆகிய இரண்டு நகரங்களும் அவற்றின் கிராமங்களும் ஆகும்.
யோசுவா 15 : 61 (OCVTA)
பாலைவனத்தில் இருந்த நகரங்களாவன: பெத் அரபா, மித்தீன், செக்காக்கா,
யோசுவா 15 : 62 (OCVTA)
நிப்சான், உப்புப்பட்டணம், என்கேதி ஆகிய நகரங்களும் அவற்றின் கிராமங்களும் உட்பட ஆறு ஆகும்.
யோசுவா 15 : 63 (OCVTA)
ஆனாலும் எருசலேம் பட்டணத்தில் வாழ்ந்த எபூசியரை வெளியேற்ற யூதாவினால் முடியவில்லை. எனவே அவர்கள் யூதா மக்களுடன் இன்றுவரை எருசலேமில் வாழ்ந்து வருகிறார்கள்.
❮
❯
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
32
33
34
35
36
37
38
39
40
41
42
43
44
45
46
47
48
49
50
51
52
53
54
55
56
57
58
59
60
61
62
63