எரேமியா 8 : 1 (OCVTA)
“ ‘யெகோவா அறிவிக்கிறதாவது, அந்த நாட்களில் யூதா நாட்டு அரசர்களுடைய மற்றும் அதிகாரிகளுடைய எலும்புகளும், ஆசாரியர்களுடைய மற்றும் இறைவாக்கு உரைப்போருடைய எலும்புகளும், எருசலேம் மக்களின் எலும்புகளும் சவக்குழிகளிலிருந்து வெளியே எடுக்கப்படும்.
எரேமியா 8 : 2 (OCVTA)
சூரியனையும், சந்திரனையும் வானத்திலுள்ள எல்லா நட்சத்திரங்களையும் அவர்கள் நேசித்து, பணிசெய்து, பின்பற்றி, ஆலோசனை கேட்டு வணங்கினார்களே. அவைகளுக்கு முன்பாகவே அவர்களின் எலும்புகள் ஒரு காட்சிப் பொருளாய் சிதறிக் கிடக்கும். அவை சேர்த்தெடுக்கப்படுவதுமில்லை; புதைக்கப்படுவதுமில்லை. அவை நிலத்தின் குப்பையைப்போலவே கிடக்கும்.
எரேமியா 8 : 3 (OCVTA)
இந்தத் தீமையான வம்சத்தில் மீதியாயிருப்பவர்களை நான் எங்கெல்லாம் நாடு கடத்தினேனோ அங்கெல்லாம் அவர்கள் வாழ்வைவிட, சாவையே விரும்புவார்கள் என்று சேனைகளின் யெகோவா கூறுகிறார்.’ [PS]
எரேமியா 8 : 4 (OCVTA)
{பாவமும் தண்டனையும்} [PS] “நீ அவர்களிடம், ‘யெகோவா சொல்வது இதுவே: [QBR] “ ‘மனிதர்கள் விழுந்தால், அவர்கள் எழும்புவதில்லையோ? [QBR2] ஒருவன் வழிவிலகிப் போனால் மீண்டும் திரும்புவதில்லையோ? [QBR]
எரேமியா 8 : 5 (OCVTA)
அப்படியானால் ஏன் இந்த மக்கள் வழிவிலகிப் போய்விட்டார்கள்? [QBR2] எருசலேம் ஏன் எப்பொழுதுமே வழிவிலகிப்போகிறது? [QBR] அவர்கள் வஞ்சகத்தைப் பற்றிக்கொண்டு [QBR2] திரும்பிவர மறுக்கிறார்கள். [QBR]
எரேமியா 8 : 6 (OCVTA)
நான் மிகவும் கவனித்துக் கேட்டேன். [QBR2] ஆனால் அவர்கள் சரியானதைச் சொல்கிறதில்லை. [QBR] “நான் என்ன செய்துவிட்டேன்!” [QBR2] என்று சொல்லி ஒருவனும் தனது கொடுமையிலிருந்து மனந்திரும்புகிறதில்லை. [QBR] போர்க்களத்திற்குள் பாய்ந்து தாக்கும் குதிரையைப்போல், [QBR2] ஒவ்வொருவனும் தன்தன் சொந்த வழிகளிலேயே தொடர்ந்து போகிறான். [QBR]
எரேமியா 8 : 7 (OCVTA)
ஆகாயத்து நாரைகூட, [QBR2] தனக்கு நியமிக்கப்பட்ட பருவகாலங்களை அறியும். [QBR] புறாவும், நீளவால் குருவியும், பாடும் குருவியுங்கூட [QBR2] தாங்கள் இடம் பெயரும் காலத்தை அறியும். [QBR] ஆனால் என் மக்களோ யெகோவாவின் நியமங்களை [QBR2] அறியாதிருக்கிறார்கள் என்று சொல்.
எரேமியா 8 : 8 (OCVTA)
“ ‘எழுத்தாளனின் பொய்யான எழுதுகோல், [QBR2] உண்மையல்லாததைத் தவறாகக் கையாண்டிருக்கும்போது, [QBR] “நாங்கள் ஞானிகள்; யெகோவாவின் சட்டம் எங்களிடம் இருக்கிறது” [QBR2] என்று நீங்கள் எப்படிச் சொல்லமுடியும்? [QBR]
எரேமியா 8 : 9 (OCVTA)
ஞானிகள் வெட்கத்துக்குள்ளாவார்கள். [QBR2] அவர்கள் மனங்குழம்பி பொறியில் அகப்படுவார்கள். [QBR] யெகோவாவின் வார்த்தையைப் புறக்கணித்தவர்களிடம் [QBR2] எப்படிப்பட்ட ஞானம் இருக்கிறது? [QBR]
எரேமியா 8 : 10 (OCVTA)
ஆகவே அவர்கள் மனைவிகளை வேறு மனிதருக்குக் கொடுப்பேன். [QBR2] அவர்கள் வயல்களையும் புதியவர்களுக்குச் சொந்தமாக்குவேன். [QBR] தாழ்ந்தோர்முதல் உயர்ந்தோர்வரை [QBR2] எல்லோரும் அநியாய இலாபம் பெற பேராசைப்படுகிறார்கள். [QBR] இறைவாக்கினர்முதல் ஆசாரியர்வரை அனைவரும் [QBR2] ஒருமித்து வஞ்சனையே செய்கிறார்கள். [QBR]
எரேமியா 8 : 11 (OCVTA)
என் மகளாகிய மக்களின் கடுமையான காயத்தை, [QBR2] கடுமையற்றதைப்போல் மருந்திட்டுக் கட்டுகிறார்கள். [QBR] “சமாதானம், சமாதானம்” என்று சொல்கிறார்கள். [QBR2] ஆனால் சமாதானமோ அங்கே இல்லை. [QBR]
எரேமியா 8 : 12 (OCVTA)
அவர்கள் தங்கள் அருவருப்பான நடத்தையைக் குறித்து வெட்கப்படுகிறார்களா? [QBR2] இல்லை, சிறிதளவும் வெட்கமில்லை. [QBR2] நாணங்கொள்ளவும் அவர்கள் அறியார்கள். [QBR] ஆகவே அவர்கள் விழுந்தவர்கள் மத்தியில் விழுவார்கள். [QBR2] அவர்களைத் தண்டிக்கும்போது அவர்கள் தள்ளுண்டு போவார்கள் [QBR2] என்று யெகோவா கூறுகிறார்.
எரேமியா 8 : 13 (OCVTA)
“ ‘நான் அவர்களின் அறுவடையை எடுத்துச் செல்வேன் [QBR2] என்று யெகோவா அறிவிக்கிறார். [QBR2] திராட்சைக்கொடியில் திராட்சைப் பழங்களோ, [QBR] அத்திமரத்தில் அத்திப்பழங்களோ இருக்கமாட்டாது. [QBR2] அவைகளின் இலைகளும் வாடிவிடும். [QBR] நான் அவர்களுக்குக் கொடுத்தவை [QBR2] அவர்களைவிட்டு எடுபட்டுப் போகும் [*நான் அவர்களை முற்றிலும் அழிக்கும்போது.] .’ ”
எரேமியா 8 : 14 (OCVTA)
அப்பொழுது மக்கள், நாம் ஒன்றும் செய்யாமல் [QBR2] ஏன் இன்னும் இங்கே இருக்கவேண்டும். [QBR2] வாருங்கள், ஒன்றுசேருவோம். [QBR] அரணான பட்டணங்களுக்குள் ஓடிப்போய் [QBR2] அங்கே அழிவோம். [QBR] ஏனெனில், நாங்கள் எங்கள் இறைவனாகிய யெகோவாவுக்கு எதிராகப் பாவம் செய்தபடியால், [QBR2] அவர் எங்களைப் பேராபத்துக்கு நியமித்திருக்கிறார். [QBR2] அவர் குடிப்பதற்கு நஞ்சு கலந்த தண்ணீரையும் நமக்குத் தந்துள்ளார். [QBR]
எரேமியா 8 : 15 (OCVTA)
நாங்கள் சமாதானத்தை எதிர்பார்த்திருந்தோம். [QBR2] ஒரு நன்மையுமே வரவில்லை. [QBR] குணமாகும் நேரத்திற்குக் காத்திருந்தோம். [QBR2] ஆனால் ஆபத்து மட்டுமே ஏற்பட்டது. [QBR]
எரேமியா 8 : 16 (OCVTA)
பகைவரின் குதிரைகளின் சீற்றம், [QBR2] தாணிலிருந்து கேட்கப்படுகிறது. [QBR] அவர்களின் ஆண் குதிரைகளின் கனைக்கிற சத்தத்தால் [QBR2] நாடு முழுவதும் நடுங்குகிறது. [QBR] நாட்டையும் அதிலுள்ள யாவற்றையும், [QBR2] பட்டணத்தையும், அதிலுள்ள குடிகள் யாவரையும் [QBR2] விழுங்குவதற்கு அவர்கள் வந்துள்ளார்கள் என்று சொல்கிறார்கள்.
எரேமியா 8 : 17 (OCVTA)
இதோ உங்கள் மத்தியில் நச்சுப் பாம்புகளை அனுப்புவேன். [QBR2] அவை வசியப்படுத்த முடியாத விரியன் பாம்புக் குட்டிகள். [QBR2] அவை உங்களைக் கடிக்கும் என்று [QBR2] யெகோவா அறிவிக்கிறார்.
எரேமியா 8 : 18 (OCVTA)
என் துக்கத்தில் எனக்கு ஆறுதலாக இருப்பவரே, [QBR2] என் இருதயம் எனக்குள் சோர்ந்துபோகிறது. [QBR]
எரேமியா 8 : 19 (OCVTA)
தூரத்திலுள்ள ஒரு நாட்டிலிருந்து வரும் [QBR2] என் மக்களின் கதறுதலை உற்றுக் கேளுங்கள்; [QBR2] “சீயோனில் யெகோவா இல்லையோ? [QBR] அவளுடைய அரசர் இனிமேல் அங்கு [QBR2] இருக்கமாட்டாரோ?” அவரோ, வார்க்கப்பட்ட உருவச்சிலைகளாலும், பயனற்ற அந்நிய விக்கிரகங்களாலும், [QBR2] ஏன் எனக்குக் கோபமூட்டினார்கள்? என்கிறார்.
எரேமியா 8 : 20 (OCVTA)
மேலும் மக்கள் சொல்கிறதாவது, “அறுவடைக்காலம் முடிந்துவிட்டது. [QBR2] கோடைகாலம் போய்விட்டது. [QBR2] நாங்களோ இன்னும் விடுவிக்கப்படவில்லை.”
எரேமியா 8 : 21 (OCVTA)
என் மக்கள் நசுக்கப்பட்டதினால் நானும் நசுக்கப்பட்டேன். [QBR2] நான் துக்கமாயிருக்கிறேன். என்னை திகில் பற்றிக்கொண்டது. [QBR]
எரேமியா 8 : 22 (OCVTA)
கீலேயாத்தில் தைலம் இல்லையோ? [QBR2] அங்கே ஒரு வைத்தியனும் இல்லையோ? [QBR] அப்படியானால் ஏன் என் மக்களின் [QBR2] காயம் குணமடையாமல் இருக்கிறது? [PE]
❮
❯